உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / சிறுபான்மையினருக்கு எதிராக வங்கதேசத்தில் 88 சம்பவங்கள்

சிறுபான்மையினருக்கு எதிராக வங்கதேசத்தில் 88 சம்பவங்கள்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

டாக்கா : வங்கதேசத்தில், பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா தப்பியோடியதை தொடர்ந்து, ஆக., 5 - அக்., 22 வரை, ஹிந்துக்கள் உள்ளிட்ட சிறுபான்மையினருக்கு எதிராக, 88 வன்முறை சம்பவங்கள் நடந்துள்ளதாக, அந்நாடு முதன்முறையாக தெரிவித்துள்ளது.நம் அண்டை நாடான வங்கதேசத்தில், மாணவர்களின் போராட்டம் தீவிரமடைந்ததை அடுத்து, ஆக., 5ல், பிரதமர் பதவியை ராஜினாமா செய்து, அவாமி லீக் கட்சி தலைவர் ஷேக் ஹசீனா நம் நாட்டுக்கு தப்பி வந்தார். இதையடுத்து, நோபல் பரிசு பெற்ற முகமது யூனுஸ் தலைமையில், வங்கதேசத்தில் இடைக்கால அரசு பதவியேற்றது.ஷேக் ஹசீனா தப்பியோடியதை அடுத்து, வங்கதேசத்தில் சிறுபான்மையினராக உள்ள ஹிந்துக்கள் மீது பல்வேறு இடங்களில் தாக்குதல்கள் நடந்தன. மேலும், ஹிந்து கோவில்களும் தாக்கப்பட்டன.சமீபத்தில், வங்கதேசம் சென்ற நம் வெளியுறவு செயலர் விக்ரம் மிஸ்ரி, அந்நாட்டின் இடைக்கால அரசின் தலைமை ஆலோசகர் முகமது யூனுசை சந்தித்து பேசினார். அப்போது, ஹிந்துக்கள் உள்ளிட்ட சிறுபான்மையினர் மீதான தாக்குதல்களுக்கு அவர் கவலை தெரிவித்தார்.

இந்நிலையில், வங்கதேச இடைக்கால அரசின் தலைமை ஆலோசகர் முகமது யூனுசின் செய்தித் தொடர்பாளர் ஷபிகுல் ஆலம் நேற்று கூறியதாவது:

ஷேக் ஹசீனா தப்பியோடியதை தொடர்ந்து, ஆக., 5 - அக்., 22 வரையிலான காலத்தில், ஹிந்துக்கள் உள்ளிட்ட சிறுபான்மையினருக்கு எதிராக, 88 வன்முறை சம்பவங்கள் நடந்துள்ளன. இது தொடர்பாக, 70 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.சிறுபான்மையினர் மீது தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்யும் பணி நடக்கிறது. ஒருசில சம்பவங்களை தவிர, ஹிந்து மத நம்பிக்கை காரணமாக, ஹிந்துக்கள் தாக்கப்படவில்லை. சில சம்பவங்கள், தனிப்பட்ட தகராறு காரணமாக நடந்துள்ளன. அக்., 22க்கு பின் நடந்த வன்முறை சம்பவங்கள் தொடர்பான விபரம் விரைவில் வெளியிடப்படும். சிறுபான்மையினர் மீது தாக்குதல் நடந்தால், போலீசார் கடும் நடவடிக்கை எடுப்பர். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 14 )

venugopal s
டிச 12, 2024 16:14

இலங்கையில் தமிழர்கள் பாதிக்கப்படுவதைப் பற்றி மத்திய பாஜக அரசிடம் கேள்வி கேட்டால் அதை அயல்நாட்டு விவகாரம் அதில் இந்தியா தலையிட முடியாது என்று பாஜகவினர் சொல்வார்களே.இப்போது இதுமட்டும் இந்தியாவின் உள்நாட்டு விவகாரமா?


Saai Sundharamurthy AVK
டிச 13, 2024 13:55

தனி நாடு கேட்டு ஒரு அரசுக்கு எதிராக போராடுவதற்கும், இந்துக்களுக்கு எதிராக வன்முறையை கட்டவிழ்த்து விடுவதற்காகவே வேண்டுமென்றே ஆட்சி மாற்றம் செய்வதற்கும் நிறைய வித்தியாசம் உண்டு.


ram
டிச 12, 2024 13:37

எங்கோ இருக்கும் பாலஸ்தீன் ஆட்களுக்கு இங்கு சட்டசபையில் தீர்மானம் போடும் திருட்டு திமுக, பக்கத்தில் நாட்டில் இருக்கும் ஹிந்துக்களுக்கு படுகொலைக்கு எந்தவித கண்டன தீர்மானமும் போடவில்லை. திருட்டு திமுகவில் இருக்கும் ஹிந்துக்கள் இதற்கு தற்கொலை செய்து கொல்லலாம்.


Anonymous
டிச 12, 2024 12:23

இதை பத்தி ஒரு வார்த்தை, ஒரு கண்டனம் தெரிவிக்காத இந்தம்மா மமதா பானர்ஜி இந்தி கூட்டணிக்கு தலைவி ஆக துடிக்குது, நாடு உருப்பட்டா மாதிரி தான்.


Barakat Ali
டிச 12, 2024 09:41

எண்பத்தெட்டு என்பது பதற்றத்தைத் தணிக்க கொடுக்கப்பட்ட புள்ளிவிபரம் ..... அங்கே பிசினஸில் இருக்கும் நண்பர்கள் நானூறு சம்பவங்களுக்கு மேல் என்கிறார்கள் ....


Barakat Ali
டிச 12, 2024 09:40

இந்தியாவில் சிறுபான்மையினருக்கு எதிராக இந்த அளவுக்கு இல்லாவிட்டாலும் சிறு அளவுக்கு நடந்தாலும் சர்வதேச பிரச்னை ஆகிவிடுகிறது.... நூபுர் சர்மா கடுமையான விமர்சனங்களுக்கு ஆளானார். அவருக்கு கொலை மிரட்டல் விடப்பட்டது.. கேரளாவில் ஒரு பேராசிரியர் இரண்டு கைகளையும் இழந்தார் என்று கேள்வி.. ஆனால் வங்கதேசத்தில் நடக்கும் அட்டூழியத்தைத் தட்டிக்கேட்க இந்திய அரசே மென்மையான போக்கைக் கையாள்கிறது. அமெரிக்காவில் உள்ள இந்திய வம்சாவளி ஹிந்துக்கள் போராடிய அளவுக்கு கூட இந்திய ஹிந்துக்கள் போராடவில்லை.. ஏன் எதிர்ப்புக்குரல் கூட எழுப்பவில்லை ....


Constitutional Goons
டிச 12, 2024 08:47

மோடி அரச என்ன செய்து கொண்டிருக்கிறது? அம்பானி அதானிக்கும் அமெரிக்காவுக்கும் காவடி தூக்கிக்கொண்டிருக்கிறதா ?


N Sasikumar Yadhav
டிச 12, 2024 09:48

திராவிட கட்சிகளோடு முடியட்டும் . எப்படி பேசனும்னு மோடிஜிக்கு தெரியும் உங்க ஓநாய் விசுவாசத்தை திராவிட கட்சிகளுக்கு காட்டுங்கள் இந்துக்களுக்கு வேண்டாம்


ram
டிச 12, 2024 13:42

இங்கு இருக்கும் திருட்டு திராவிட கட்சி சட்டசபையில் பாலஸ்தீன ஆட்களுக்கு தீர்மானம் போட்டாங்களே ஹிந்துக்கள் என்றரல் நவத்துவரத்தையும் மூடி கொள்வார்கள், அவனுக கட்சியில் இருக்கும் ஹிந்துக்கள் ஆல் சோரம் போனவர்கள்.


Sampath Kumar
டிச 12, 2024 08:42

சிறுபான்மைக்கு ஏதிராக 990 சம்பவங்கள் இந்தியாவில் வங்க தேச பத்திரிகை செய்தி இங்க ஏனமோ ஒரு சம்பவம் கிடையாது எண்ணப்பத்துலவும் வங்கத்தில் மட்டும் தான் நடப்பது போலவும் செய்தி போட்டு மக்களை கொம்பு சீவும் வேலையை தொடர்ந்து செய்து வருகிறது ஒரு கும்பல் இந்த விஷமிகளால் நாட்டில் மத கலவரம் வர வாய்ப்புகள் அதிகம் சங்கிகளும் அதனை தானே விரும்புகிறார்கள்


மணியன்
டிச 12, 2024 09:22

ஐயா சம்பத்குமாருக்கு பங்களாதேஷ் ஊடகங்கள் மீது எவ்வளவு நம்பிக்கை பாருங்கள்.உலகிலேயே இஸ்லாமியர்கள் சுபிட்சமாக வாழும் நாடு இந்தியா.


N Sasikumar Yadhav
டிச 12, 2024 09:50

கொடுக்கிற பிரியாணிக்கு விசுவாசமாக வாலாட்டும் ஒரு மானமுள்ள நன்றியுள்ள ஒரு ஜீவன் அவ்வளவுதான்


ram
டிச 12, 2024 13:43

சம்பத் குமார் என்ற பேரில் ஒரு ... சொந்த பேரில் கருத்து போட முடியாதவன்


N Sasikumar Yadhav
டிச 12, 2024 08:07

திட்டமிட்டு கலவரங்களை நடத்திவிட்டு இந்துக்களின் வாழ்வியலையும் வழிபாட்டு கோயில்களையும் அழித்துவிட்டு திருட்டு திராவிட களவானிங்க மாதிரியே சொந்த தகறாறு என பீலா விடுகிறான் கொஞ்சங்கூட நோபூல் பரிசுக்கு தகுதியில்லாத மொகம்மது யூனுசு


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை