உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / மேற்காசியாவில் பெரும் பதற்றம் !

மேற்காசியாவில் பெரும் பதற்றம் !

ஜெருசலேம் : இஸ்ரேல் - ஈரான் நாடுகளுக்கு இடையே கடும் சண்டை துவங்கியுள்ளது. இஸ்ரேலுக்கு ஆதரவு நாடுகள் குரல் கொடுப்பதால், மேற்காசியாவில் பெரும் பதற்றம் நிலவுகிறது.கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் இரண்டரை ஆண்டுகளை கடந்துள்ளது. இந்நிலையில், மேற்காசியாவில் ஏற்பட்டுள்ள கொந்தளிப்பான சூழ்நிலை, பெரும் பதற்றத்தையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

நடவடிக்கை

இஸ்ரேல் - ஹமாஸ் பயங்கரவாதிகளுக்கு இடையேயான போர், இஸ்ரேல் - ஹெஸ்பொல்லா பயங்கரவாதிகளுக்கு இடையேயான போராக உருமாறியது. தற்போது, இஸ்ரேல் - ஈரான் இடையே கடும் சண்டை துவங்கியுள்ளது.இஸ்ரேல் மீது, ஹமாஸ் பயங்கரவாதிகள் கடந்தாண்டு அக்., 7ல் தாக்குதல் நடத்தினர். இதைத் தொடர்ந்து, ஹமாஸ் மீது இஸ்ரேல் தன் தாக்குதல்களை துவக்கியது. இதற்கிடையே, ஹமாஸ் பயங்கரவாத அமைப்புக்கு ஆதரவாக, லெபனானில் இருந்து இயங்கும், அந்த நாட்டை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஹெஸ்பொல்லா பயங்கரவாதிகள், இஸ்ரேல் மீது அடிக்கடி தாக்குதல்கள் நடத்தி வந்தனர். இதைத் தொடர்ந்து, ஒரு பக்கம் ஹமாஸ் பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கை தொடரும் நிலையில், ஹெஸ்பொல்லா மீதான தாக்குதலை இஸ்ரேல் தீவிரமாக்கியது.இந்த இரண்டு பயங்கரவாத அமைப்புகளுக்கும் ஈரானின் முழு ஆதரவு உள்ளது. சமீபத்தில் ஹெஸ்பொல்லாவின் தலைவர் ஹசன் நஸ்ரல்லா உட்பட அதன் முக்கிய தளபதிகளை, இஸ்ரேல் ராணுவம் அடுத்தடுத்த தாக்குதல்களில் கொன்றது. மேலும், லெபனானில் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில், 1,000த்துக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.தன் ஆதரவு பெற்றுள்ள ஹமாஸ் மற்றும் ஹெஸ்பொல்லா பயங்கரவாத அமைப்புகள் மீதான இந்த தாக்குதல், ஈரானுக்கு எரிச்சலை ஏற்படுத்தியது. மிகத் தெளிவாக திட்டமிட்டு, ஹெஸ்பொல்லா தலைவர்களை இஸ்ரேல் வீழ்த்தியது, ஈரானுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.ஏற்கனவே, இஸ்ரேல் - ஈரான் இடையே மறைமுக போர் உள்ளது. கடந்த ஏப்., மாதம், ஈரானின் டெஹ்ரானில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில், ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியே கொல்லப்பட்டார். இவ்வாறு நடந்த பல சம்பவங்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணை தாக்குதலை நடத்தியது; நேற்று முன்தினம் இரவில், ஒரே நேரத்தில் 180 ஏவுகணைகளை செலுத்தியது.

தாக்குதல்

தன் ஆதரவு பெற்ற பயங்கரவாத அமைப்புகளுக்கு உறுதுணையாக இருப்பதை காட்டுவதற்காகவும், வெறும் பார்வையாளராக இருந்தால், இஸ்ரேலுக்கு அடிபணிந்ததாக கருதப்பட்டு விடும் என்பதாலும், இந்த தாக்குதலில் ஈரான் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.'தடுப்பு நடவடிக்கைகள் முடிந்து விட்டன. இவற்றுக்கு பதிலளிக்கிறோம் என்று இஸ்ரேல் தாக்குதல் நடத்தினால், அதன் ஒவ்வொரு முக்கிய நகரங்களையும் அழிக்கும் வகையில் எங்களுடைய அடுத்த தாக்குதல்கள் இருக்கும்' என, ஈரான் கூறியுள்ளது.ஈரான் செலுத்திய 180 ஏவுகணைகளில், 90 சதவீதத்தை சுட்டு வீழ்த்தியதாக இஸ்ரேல் கூறியுள்ளது. இதில் அமெரிக்காவும் உதவியுள்ளது. மேலும், இஸ்ரேலுக்கு தன் முழு ஆதரவை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறியுள்ளார்.ஈரான் நடத்திய தாக்குதல்களில் உயிர் பலி ஏதும் ஏற்படவில்லை; மேலும், பெரிய அளவில் சேதமும் ஏற்படவில்லை. அதனால், ஈரானின் தாக்குதலுக்கு பதிலடி கொடுப்பது குறித்து இஸ்ரேல் ஆலோசித்து வருகிறது. ஈரான் ஏவுகணை செலுத்தியதால், அதன் ராணுவ கட்டமைப்பை குறிவைத்து இஸ்ரேலின் பதில் தாக்குதல் இருக்கும் என்று கூறப்படுகிறது.அதே நேரத்தில், ஈரானின் பொருளாதாரத்தை குலைக்கும் வகையில், அதன் எரிசக்தி கட்டமைப்புகளில் தாக்குதல் நடத்த இஸ்ரேல் காத்திருக்கிறது. 'ஈரானின் விபரீத நடவடிக்கைக்கு நிச்சயம் பதில் அளிப்போம். தகுந்த நேரத்தில், சரியான நேரத்தில் இந்த பதில் அளிக்கப்படும்' என, இஸ்ரேல் ராணுவம் கூறியுள்ளது.

இஸ்ரேல் வீரர்கள் பலி

மூன்று முனைகளில் சண்டையை சந்தித்து வரும் இஸ்ரேல், தன் தாக்குதல்களை நேற்றும் தொடர்ந்தது. காசா பகுதியில் நேற்று நடத்திய தாக்குதல்களில், 50 பேர் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது.இதற்கிடையே, லெபனானுக்குள் நுழைந்து, ஹெஸ்பொல்லா பயங்கரவாதிகளுக்கு எதிராக தரைவழி தாக்குதலையும் இஸ்ரேல் ராணுவம் துவக்கியுள்ளது. லெபனானில் நடந்த மோதலில், இஸ்ரேல் ராணுவத்தின் 22 வயது ராணுவ கேப்டன் மற்றும் ஏழு ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். இதை, ஹெஸ்பொல்லா அறிவித்தது. அதை, இஸ்ரேல் ராணுவமும் உறுதி செய்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 25 )

ராமகிருஷ்ணன்
அக் 03, 2024 16:13

இஸ்ரேலின் பதில் தாக்குதல் பலமாக இருந்து ஈரான் அதிகம் பாதிக்கப்பட்டால் தன்னிடம் உள்ள அணுகுண்டை கூட பயன்படுத்த தயங்காது. இஸ்ரேல், ஈரானின் எண்ணெய் வளம் ஆயுத கிடங்கை அழிக்க வேண்டும்.


SUBBU,MADURAI
அக் 03, 2024 20:10

கடன்.வியாதி எதிரி இவை மூன்றையும் விட்டு வைக்க கூடாது என்பதில் இஸ்ரேல் தெளிவாக உள்ளது போட்டுத் தாக்கு!


s.sivarajan
அக் 03, 2024 14:13

சர்வதேச சதுரங்கத்தில் ஈரான் ஒரு பகடைக்காய் அது ருஷ்ய மற்றும் சீனா வின் கட்டுப்பாட்டில்


Bahurudeen Ali Ahamed
அக் 03, 2024 13:28

ஆஹா வாய்சொல்லில் வீரரடி என்பதுபோல் வாய்க்கு வந்ததை உளறிக்கொட்டுகிறார்கள் சிலர் இஸ்ரேலுக்கு ஒரு லட்சம் கோடி இந்தியா கொடுத்து உதவ வேண்டும் என்றும் சிலர், முதலில் ஒன்றை நன்றாக புரிந்துகொள்ளுங்கள், அவர்கள் இருவர்தான் அடித்துக்கொள்கிறார்கள் என்று நினைப்பதே தவறு, அவர்கள் அடித்துக்கொண்டால் அதனால் நாமும்தான் பாதிக்கப்படுவோம், உயிர்பலி ஏற்படாது ஆனால் அத்தியாவசியப்பொருட்கள் தட்டுப்பாடு ஏற்பட்டு விலை கிடுகிடுவென உயரும், பொருளாதாரம் மந்த நிலை அடையும். ஆகையால் போர் நீடிக்காதிருப்பதே நலம். முடிந்தால் போர் நிறுத்தத்திற்காக அவர் அவர் கடவுளிடம் வேண்டிக்கொள்ளுங்கள்


Duruvesan
அக் 03, 2024 20:02

என்ன மூர்க்ஸ் அவன் குண்டு வெச்சி கொல்லுவான் எல்லோரும் பேசாம இருக்கணுமா


Kumar Kumzi
அக் 04, 2024 09:32

பார்ர்ரா


Venugopal Gopalsamy
அக் 27, 2024 10:09

மூர்க்கன் பேசுறான்.ஐயோ ayyo.


Sridhar
அக் 03, 2024 13:19

கடும் சண்டையா? சிரிப்புதான் வருகிறது இரான் காரனுங்க சும்மானாச்சும் ஏவுகணைகளை விட்டுட்டு இப்போ தினம்தினம் எப்போ குண்டு விழுமோ எங்கே விழுமோன்னு செத்துச்செத்து பிழைச்சிட்டு இருக்கானுங்க. இஸ்ரேலுக்கு ஈரான் நாட்டுல எண்ணெய் கோடோன் மற்றும் அணு ஆயுத நிலையங்கள் எல்லாம் எங்க இருக்குதுன்னு துல்லியமாவே தெரியும். பொசுக்கு பொசுக்குன்னு குறிவச்சு இன்னும் சில நாள்ல தெறிக்க விடப்போறாங்க. பாவம், இவ்வளவு நாள் அரும்பாடுபட்டு சேத்து வச்சிருந்த சொத்தெல்லாம் எறிஞ்சி சாம்பலாகப்போகுது இதுல என்ன விசேசம்னா ஈரான் மக்களுக்கே அங்க இருக்கற ஆட்சியாளர்களை பிடிக்கல. அவுங்களுக்கு மிக பெரிய விடுதலை கிடைக்கபோகுது. சவூதி மற்றும் பல அரபு நாடுகள் தங்கள் நடவடிக்கைகளை சரி செய்துகொண்டு நேர் பாதையில் இஸ்ரேலோடு சேர்ந்து பயணிக்க ஆயுத்தமாகிவிட்டனர். இந்த நிலையில் ஈரானின் வீழ்ச்சி உலகத்துக்கே நன்மை பயக்கும் விஷயமாக இருக்கப்போகிறது. இஸ்ரேலுக்கு வாழ்த்துக்கள்


RAMAKRISHNAN NATESAN
அக் 03, 2024 10:20

Israel vs Iran: Whos stronger? A comparison of military strength moneycontrol வலைத்தளத்தில் விரிவான ஒப்பீட்டைப்பார்க்கலாம் .......


தர்மராஜ் தங்கரத்தினம்
அக் 03, 2024 10:07

ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியடையத் துவங்கிவிட்டது ........


Barakat Ali
அக் 03, 2024 09:52

ஈரானிய முஸ்லிம்கள் பெரும்பாலும் ஷியா பிரிவினர் ....... ஆகவே மற்ற இஸ்லாமிய நாடுகள் கண்டுகொள்ளாது ...


SP
அக் 03, 2024 09:48

ஈரானை கட்டுப்படுத்தினால்தான் உலக அமைதிக்கு ஓரளவிற்காவது பலன் இருக்கும்


Mohan D
அக் 03, 2024 09:38

இஸ்லாமிய நாடுகள் ஒவ்வொன்றும் அங்கீகரிக்கப்பட்ட ராணுவம் அதற்கு இணையாக பயங்கரவாத ஜிஹாதி குழு ஒன்று உண்டு அது ஊரை ஏமாற்ற ..பாகிஸ்தானுக்கு பல உண்டு , பலஸ்தீனுக்கு ஹமாஸ், லெபனான், ஈரான் ஹெஸ்புல்லாஹ் , ஏமன் ஹௌதிஸ், ஆப்பிரிக்காக்கு போகோ கரம் அல்கொய்த ... இவர்களுக்கு என்னை வளத்தை வயதுக்கு கொண்டு ஒவ்வொருவரையும் சண்டைக்கு இழுப்பதே இவர்கள் வேலை.. உலகில் நிம்மதி இழப்பதுக்கு காரணமே இவர்கள் தான் ...இவர்கள் பெரும்பான்மை ஆகிவிட்டால் ஜனநாயகம் , பணநாயகம் எல்லாம் காணாமல் போகும் ..அதுவரை பொறுமையாக காய் நகர்த்துவார்கள் அவர்களுக்கு சார்பானவர்களை தேர்ந்தெடுத்து ஆட்சியில் உக்கார வைப்பார்கள் நம் தமிழ்நாடு போல ...என்றைக்கு நடுநிலை ஹிந்துக்கள் புரிந்துகொள்ளப்போகிறார்களோ ..


பேசும் தமிழன்
அக் 03, 2024 09:01

தீவிரவாதிகளை களையெடுக்க ....உலக நாடுகள் அனைத்தும் ....இஸ்ரேல் நாட்டுக்கு ஆதரவாக இருக்க வேண்டும்.


சமீபத்திய செய்தி