உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / பிரேசிலில் நிலச்சரிவால் அழியும் நகரம்

பிரேசிலில் நிலச்சரிவால் அழியும் நகரம்

பிரசில்லா: பிரேசில் நாட்டின் மரன்ஹாவோ மாகாணத்தில் உள்ள புரிடிக்குபு என்னும் நகரம் நிலச்சரிவால் அழியும் நிலையில் உள்ளது.பிரேசில் நாட்டின் வடகிழக்கு பகுதியில் அமேசான் காட்டை ஒட்டி புரிடிக்குபு என்ற இந்த சிறிய நகரம் அமைந்துள்ளது. இங்கு நிலச்சரிவால் 1,200 பேர் தங்கள் வீடுகளை இழக்கும் அபாயத்தில் உள்ளனர்,இங்குள்ள பல வீடுகள் சேதமடைந்துள்ள நிலையில் இங்கு அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளது.30 ஆண்டுகளில் இந்த பிரச்னை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.புரிடிகுபுவில் பல கட்டிடங்கள் ஏற்கனவே சேதம் அடைந்து விட்டன. மேலும் 55,000 மக்கள் தொகையில் சுமார் 1,200 பேர் தங்கள் வீடுகளை இழக்கும் அபாயத்தில் உள்ளனர்.மரன்ஹாவோ பல்கலை புவியியலாளரும் பேராசிரியருமான மார்செலினோ பாரியாஸ், கனமழை காலங்களில் இந்தப் பிரச்னை மோசமடைகிறது என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை