உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / 15 மனைவியர், 30 குழந்தைகளுடன் சுற்றுலா சென்ற ஆப்ரிக்க மன்னர்; ஸ்தம்பித்தது அபுதாபி விமான நிலையம்

15 மனைவியர், 30 குழந்தைகளுடன் சுற்றுலா சென்ற ஆப்ரிக்க மன்னர்; ஸ்தம்பித்தது அபுதாபி விமான நிலையம்

அபுதாபி : ஆப்ரிக்க மன்னர் ஒருவர், 15 மனைவியர், 30 குழந்தைகள், 100 வேலையாட்கள் என, 150 பேர் அடங்கிய பரிவாரங்களுடன் வந்திறங்கியதால் அபுதாபி விமான நிலையம் ஸ்தம்பித்த காட்சிகள் வெளியாகி உள்ளன. மேற்காசிய நாடான ஐக்கிய அரபு எமிரேட்சின் அபுதாபி விமான நிலையத்துக்கு ஒரு விமானம் வந்தது. அதில் இருந்து, ஒருவர், பல பெண்களுடன் தனி விமானத்தில் வந்திறங்கினார். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=q687zb7s&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0அவரைச் சுற்றியிருந்தவர்கள் மரியாதையாக வணங்கி, வீர வணக்கம் செலுத்தும் காட்சி காண்போரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. அவரது வருகையால் அபுதாபி விமான நிலையத்தின் மூன்று முனையங்களை மூட வேண்டிய நிலை ஏற்பட்டது. அந்த நபர் வேறு யாருமல்ல, தெற்கு ஆப்ரிக்காவில் உள்ள எஸ்வாட்டினி நாட்டின் மன்னர் மூன்றாம் மஸ்வாட்டி தான் அவர். ஆப்ரிக்காவின் கடைசி முழு அதிகார மன்னராக விளங்கும் இவர், 1986 முதல் எஸ்வாட்டினியை ஆண்டு வருகிறார். தற்போது 57 வயதாகும் மன்னர் மஸ்வாட்டி, அவருடைய நாட்டின் பாரம்பரிய புலித்தோல் உடையில் தோன்ற, அவரது 15 மனைவியர், 30 குழந்தைகள் வண்ணமயமான ஆப்ரிக்க உடைகளில் அழகாக காணப்பட்டனர். பொருளாதார ஒப்பந்தம் தொடர்பான பேச்சு நடத்துவதற்காக, ஐக்கிய அரபு எமிரேட்சுக்கு அவர் வந்ததாக தெரிவிக்கப்படுகிறது. இவரது தந்தை, முன்னாள் ஸ்வாசிலாந்து மன்னர், 125 மனைவியர் மற்றும் 210 குழந்தைகள், 1,000 பேரக்குழந்தைகளை கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. தற்போதைய மன்னர் மூன்றாம் மஸ்வாட்டிக்கு 30 மனைவியர் உள்ளனர். ஆனால் இந்த பயணத்தில், 15 மனைவியர் மட்டுமே உடன் வந்தனர். இவருக்கு, 35க்கும் மேற்பட்ட குழந்தைகள் உள்ளனர். ஒவ்வொரு ஆண்டும், 'ரீட் டான்ஸ்' எனும் பாரம்பரிய விழாவில் புதிய மனைவியை மன்னர் தேர்ந்தெடுக்கும் பழக்கம், உலகளவில் விமர்சனத்தையும் பெற்று உள்ளது. மன்னர் ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்து வர, எஸ்வாட்டினியில், 60 சதவீத மக்கள் வறுமைக் கோட்டுக்கு கீழே வாழ்கின்றனர். நாட்டில் வறுமை மற்றும் பொருளாதார சவால்கள் இருக்கும் நிலையில், மன்னர் மஸ்வாட்டி உள்நாட்டிலும் விமர்சிக்கப்பட்டு வருகி றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 20 )

sankaranarayanan
அக் 07, 2025 11:38

இந்த மன்னரை பார்க்க வரும் பெண்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டுமாம்


rajasekaran
அக் 07, 2025 10:49

60% சதவிக மக்கள் வறுமைக்கோட்டிற்கு கிஷ் வசிக்கிறார்கள் என்று தெரிகிறது. நேபால் அனுபவம் அவர்களுக்கு சீக்கிரம் தெரிய வைக்கணும்.


Ravi
அக் 07, 2025 10:47

நல்ல வேளை! நம்ம நாடு ஜனநாயக நாடாப் போச்சு. இங்கயும் மன்னராட்சி முறை மட்டும் இருந்திருந்தா ?மூணுங்கிறது முப்பது இல்ல முன்னூறு ஆகியிருக்கும்.


sasidharan
அக் 07, 2025 10:08

அது என்னோவோ உண்மைதான்


Ramesh Sargam
அக் 07, 2025 09:05

அடுத்த பிறவியாவது எஸ்வாட்டினி நாட்டில் பிறக்கவேண்டும்.


Indian
அக் 07, 2025 09:59

அடுத்த பிறவி என்ன ? இப்பவே போகலாம் அங்கே


K V Ramadoss
அக் 07, 2025 12:29

ஹா ஹா ஹா.... நல்ல ஜோக்.. அங்கு பிறந்தால் அலறிப் புடைத்துக் கொண்டு ஓடிவிடுவீர்கள்..


thangam
அக் 07, 2025 08:21

அங்கும் திராவிட கல்ச்சாரமா?


Indian
அக் 07, 2025 10:00

கலாச்சாரம்


வண்டு முருகன்
அக் 07, 2025 07:52

மனுஷன் நல்லா அனுபவிக்கிறாங்க. கொடுத்து வச்ச மகராசா.


Svs Yaadum oore
அக் 07, 2025 07:51

மன்னர் ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்து வர, எஸ்வாட்டினியில், 60 சதவீத மக்கள் வறுமைக் கோட்டுக்கு கீழே வாழ்கின்றனராம் .....அங்கே ஒரு மன்னர் தான் ....இங்கே வட்டத்துக்கு வட்டம் விடியல் மன்னர்கள் ஆயிரக்கணக்கில் உள்ளார்கள் ....


தியாகு
அக் 07, 2025 07:30

அடேங்கப்பா, யாருய்யா இவரு, எனக்கே அவரை பார்க்கணும் போல இருக்கு.


Naga Subramanian
அக் 07, 2025 06:55

பரவாயில்லை. 125 என்பது 15 ஆகிவிட்டது. "இருண்ட கண்டமாயிருந்தது", சற்றே வெளிச்சத்திற்கு வந்துள்ளது சற்றே ஆறுதல். இன்னும் இரண்டு தலைமுறைக்குப் பிறகு, ஆப்பிரிக்க கண்டம் வெளிச்ச கண்டமாகிவிடும் நம்புவோம்


Ravi
அக் 07, 2025 07:41

கடவுளே! அடுத்த பிறவியிலாவது என்னை அந்த நாட்டின் மன்னன் ஆக்கி விடு!


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை