உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / ஜப்பானை தொடர்ந்து ஆப்கானிஸ்தானையும் உலுக்கிய நிலநடுக்கம்: அரை மணிநேரத்தில் இருமுறை குலுங்கியது

ஜப்பானை தொடர்ந்து ஆப்கானிஸ்தானையும் உலுக்கிய நிலநடுக்கம்: அரை மணிநேரத்தில் இருமுறை குலுங்கியது

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

காபூல்: ஜப்பானில் நிலநடுக்கத்தால் 62 பேர் உயிரிழந்த நிலையில், ஆப்கானிஸ்தானில் நள்ளிரவில் அடுத்தடுத்து இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டது.ஜப்பான் நாட்டில் ஆங்கில புத்தாண்டு தினத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அது ரிக்டர் அளவுகோலில் 7.6 புள்ளிகளாகப் பதிவானது. அடுத்த 3 மணி நேர இடைவெளியில் சுமார் 30 முறை நிலநடுக்கம் ஏற்பட்டது. அனைத்து நிலநடுக்கங்களும் 4.5 ரிக்டர் அளவுக்கு மேல் பதிவாகியிருந்தது. நிலநடுக்கத்தால் அந்நாட்டில் 62 பேர் உயிரிழந்தனர்.இந்நிலையில் ஆப்கானஸ்தானின் பைசாபாத்தில் அடுத்தடுத்து இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டதாக அந்நாட்டின் நிலநடுக்கவியலுக்கான தேசிய ஆணையம் தெரிவித்து இருக்கிறது. முதல் நிலநடுக்கம் இந்திய நேரப்படி நள்ளிரவு 12:28 மணிக்கு ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 4.4 ஆக பதிவான இந்த நிலநடுக்கம் பைசாபாத்தில் இருந்து 126 கி.மீ தொலைவில் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து நள்ளிரவு 12:55 மணிக்கு இரண்டாவது முறை நிலநடுக்கம் ஏற்பட்டது. இது 4.8 ரிக்டர் அளவில் பூமியில் இருந்து 100 கி.மீ ஆழத்தில் ஏற்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

mohan
ஜன 03, 2024 12:38

உறுதியான டெக்டானிக் பூமி மேற்பரப்பில், அதிக அளவு கட்டிடங்கள், கட்டும் போது, உறுதியான மேற்பரப்பின், அழுத்தம் அதிகமாகிறது...ஊறுதியான மேற்பரப்பு நகர்ந்தாலும், ஒன்றும் தெரிவதில்லை. ஆனால், ஜப்பான் போன்ற மிருதுவான மேற்பரப்பு உள்ள நாடுகள், மேற்பரப்பு நகர்ந்து பேராபத்தை உண்டு பண்ணுகின்றன...நவீன நகரங்கள் என்ற போர்வையில், ஒரே இடத்தில பல அடுக்கு மாடி கட்டிடங்களின் வேலை இது...


P Karthikeyan
ஜன 03, 2024 09:23

ஏம்பா நிலநடுக்கம் அப்படியே தமிழ்நாட்டிலயும் ஒரு காட்டு காட்டிட்டு போயேன் ..மணல் திருட்டு கனிம வளங்கள் திருட்டு தண்ணி திருட்டு மரங்கள் கடத்தல் (சேலத்து மாநாட்டுக்காக பல மரங்கள் வெட்டப்பட்டு உள்ளன) . இப்படி பல திருட்டுகள் நடக்கின்றன ..இந்த பக்கம் வந்துட்டு போனா புண்ணியமா போகும்


Ramesh Sargam
ஜன 03, 2024 09:01

நடுவில் இந்தியா சிக்கவில்லை. இந்தியா ஒரு புண்ணிய பூமி.


Ramesh Sargam
ஜன 03, 2024 08:21

இந்த நிலநடுக்கம் மக்களுக்கு ஏதோ ஒரு எச்சரிக்கை விடுக்கிறது என்று புரிகிறது. மானிடர்களே சண்டை எதுவும் செய்யாமல், போர் எதுவும் புரியாமல், ஒற்றுமையுடன் இருக்க முயலுங்கள். இல்லையென்றால் மனிதகுலத்தை அழித்துவிடுவோம் என்கிறது இயற்கை.


மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை