உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / ஏர் இந்தியா விமானத்தில் கோளாறு: தாய்லாந்தில் 3 நாட்களாக தவிக்கும் பயணிகள்

ஏர் இந்தியா விமானத்தில் கோளாறு: தாய்லாந்தில் 3 நாட்களாக தவிக்கும் பயணிகள்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புக்கெட்: தாய்லாந்திலிருந்து டில்லிக்கு 100 பேருடன் புறப்பட இருந்த ஏர் இந்தியா விமானம், தொழில்நுட்ப கோளாறு காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது; இதனால் பயணிகள் பரிதவித்து வருகின்றனர்.நவம்பர் 16ம் தேதி இரவு ஏர் இந்தியா விமானம், தாய்லாந்தில் இருந்து டில்லிக்கு புறப்படத் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, ஆறு மணி நேரம் தாமதமாகும் விமான அதிகாரிகள் பயணிகளிடம் தெரிவித்தனர். விமான நிலையத்தில் பல மணிநேரம் காத்திருக்க வைத்த பின்னர், விமானத்தில் ஏறுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டனர். 100 பயணிகளில் முதியவர்களும் குழந்தைகளும் அடங்குவர். சிறிது நேரம் கழித்து, விமானம் பறக்கத் தயார் செய்யப்பட்டது.புறப்பட்டு சுமார் இரண்டரை மணி நேரம் கழிந்த நிலையில், அந்த விமானம் மீண்டும் புக்கெட்டில் தரையிறங்கியது. தொழில்நுட்பக் கோளாறு இருப்பதாக மீண்டும் பயணிகளிடம் விமான ஊழியர்கள் தெரிவித்தனர்.''அப்போதிருந்து நாங்கள் புக்கெட்டில் சிக்கி தவித்து வருகிறோம். விமானப் பிரதிநிதிகளிடமிருந்து எங்களுக்கு திருப்திகரமான பதில் கிடைக்கவில்லை'' என்று பயணிகள் வேதனையுடன் தெரிவித்தனர்.ஏர் இந்தியா வட்டாரங்கள் கூறியதாவது:நவம்பர் 16ம் தேதி பணி நேரக் கட்டுப்பாடு காரணமாக விமானம் பறக்கவில்லை. நவம்பர் 17 அன்று, விமானம் புறப்பட்ட நிலையில், ஒரு தொழில்நுட்பக் கோளாறு வெளிப்பட்டது. வேறு வழியில்லாத நிலையில், அவசர அவசரமாக தரை இறங்க வேண்டிய நிலை ஏற்பட்டது. பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு தங்குமிட வசதி செய்யப்பட்டுள்ளது. பல பயணிகள் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். 40 பேர் இன்னும் புக்கெட்டில் உள்ளனர். விரைவில் அவர்களையும் திருப்பி அனுப்பி விடுவோம்.இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

ஆரூர் ரங்
நவ 20, 2024 10:47

அரசிடம் இருந்த போதே விமானங்களின் சராசரி வயது 30. இத்தனை பழைய விமானங்களை வேறு யாரும் வாங்கத் தயாராகயில்லை. டாடா ஆர்டர் செய்துள்ள 500 புதிய விமானங்கள் வந்து சேரும் வரை சிக்கல்தான்.


அப்பாவி
நவ 20, 2024 01:18

ஏர் இந்தியாவின் இயக்குனர் இங்கிலாந்து காரர். அவருக்கு நம்ம ஏர்லைனைப் பத்தி என்ன தெரியும்? நம்ம ஊரில் இல்லாத திறமைசாலிகளா? டாட்டாவுக்கு ஃபாரின் மோகம் புடிச்சு ஆட்டுது. இதுல அந்நிய அடையாகங்களை அழிக்கணுமாம்.


Rpalnivelu
நவ 19, 2024 22:16

கிளி இல்ல பேய்


Ramesh Sargam
நவ 19, 2024 21:54

விமானத்தில் பிரச்சினை. அதிகாரிகளிடம் பிரச்சினை. எல்லா பிரச்சினைகளும் சரிசெய்யப்பட்டு ஏர் இந்தியா தன் சேவையை தொடருவது சிறந்தது. இல்லாவிடில் இந்தியர்களின் மானம் பறக்கும் தவிர, ஏர் இந்தியா விமானம் பறக்காது.


வைகுண்டேஸ்வரன்
நவ 19, 2024 21:32

அரசு வேலைக்கு முயன்று, கிடைக்காதவர்கள், ஏர் இந்தியா அரசு நிறுவனமாக இருந்த போது, கரித்து கொட்டிண்டிருந்தார்கள். அடிமாட்டு விலைக்கு டாட்டாவிற்கு விற்றதும், அவரு அப்படியே நட்டு அறுத்து தள்ளிருவாரு ன்னு கும்மி அடித்தார்கள். இப்போ?? திராவிட அரசு, விடியல் னு ஏதாச்சும் எழுதுங்க..


hari
நவ 20, 2024 11:53

விடியல் எல்லாம் இதுகு சரிப்படாது.... ஒன்லி டாஸ்மாக் சேவை தமிழ்நாட்டுக்கு தேவை... அப்புறம் உனக்கு ரூபாய் 200


அப்பாவி
நவ 19, 2024 21:08

ஏர் இந்தியா என்னும் கிளியை பூனை கிட்டே ஒப்படைச்சாச்சு.


Sathyanarayanan Sathyasekaren
நவ 19, 2024 22:10

நீ ஒரு கிறுக்கன் என்று நிரூபிக்கிறாய்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை