உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / அமெரிக்காவில் விமான சேவை ஒரு மணி நேரம் ஸ்தம்பித்தது!

அமெரிக்காவில் விமான சேவை ஒரு மணி நேரம் ஸ்தம்பித்தது!

வாஷிங்டன்: அமெரிக்காவில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக, அனைத்து விமான சேவைகளும் பாதிக்கப்பட்டுள்ளதாக, அமெரிக்கன் ஏர்லைன்ஸ் தெரிவித்தது. இதனால் கிறிஸ்துமஸ், புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு திட்டமிட்ட பயணிகள் பெரும் சிரமத்துக்கு ஆளாகினர். ஒரு மணி நேரத்துக்கு பிறகு விமான சேவை மீண்டும் சீரானது.இது குறித்து அமெரிக்கன் ஏர்லைன்ஸ் இன்று மதியம் கூறியதாவது:தொழில் நுட்ப கோளாறால் இன்று விமானங்களை இயக்க முடியவில்லை. சிக்கலை விரைவில் சரிசெய்ய முயற்சிக்கிறோம். ஆனால் சேவைகளை மீட்டமைக்க எவ்வளவு நேரம் ஆகும் என்பதற்கான காலக்கெடுவை சொல்ல இயலாது. இவ்வாறு அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.விமான சேவை குறித்து எக்ஸ் வலைதளத்தில் கேள்வி எழுப்பிய அமெரிக்கர் ஒருவருக்கு பதிலளித்த அமெரிக்கன் ஏர்லைன்ஸ், 'டென்னசி, நாஷ்வில்லியிலிருந்து தங்கள் விமானம் மீண்டும் வாயிலுக்குச் செல்கிறது. சேவையை சீர் செய்ய எங்கள் குழு உழைத்துக்கொண்டிருக்கிறது. இதன் மூலம் பாதுகாப்பாக உங்கள் குடும்பத்தினர்களை நீங்கள் அழைத்து செல்லலாம்' என்று தெரிவித்துள்ளது.இதனால் கிறிஸ்துமஸ், புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு வெளியூர், வெளிநாடு செல்ல திட்டமிட்ட பயணிகள் பெரும் சிரமத்துக்கு ஆளாகினர். இந்நிலையில், ஒரு மணி நேர போராட்டத்துக்கு பிறகு, விமான சேவை மீண்டும் சீர் செய்யப்பட்டதாக அந்த நிறுவனம் தெரிவித்தது. அதன் பிறகே பயணிகள் நிம்மதி அடைந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி