உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / ரஷ்ய சிறையில் புடின் எதிர்ப்பாளர் மர்ம மரணம்

ரஷ்ய சிறையில் புடின் எதிர்ப்பாளர் மர்ம மரணம்

மாஸ்கோ: ரஷ்ய எதிர்க்கட்சி தலைவரும், அந்நாட்டு அதிபர் புடினின் எதிர்ப்பாளருமான அலெக்சி நாவல்னி, சிறையில் நடைபயிற்சியின் போது மயங்கி விழுந்து மர்மமான முறையில் உயிரிழந்தார்.ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் அலெக்சி நாவல்னி, அந்நாட்டு அதிபர் விளாடிமிர் புடினுக்கு எதிராக ஊழல் புகார்களை தொடர்ச்சியாக சுமத்தி வந்தார். இவரது வசீகரமான பேச்சுக்கும், முன்வைக்கும் குற்றச்சாட்டுகளுக்கும் ரஷ்ய இளைஞர்கள் மத்தியில் ஆதரவு பெருகியது. ஆனால், அலெக்சி நாவல்னி மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகளை சுமத்தி கடந்த 2021 ல் ரஷ்ய அரசு சிறையில் அடைத்தது. 19 ஆண்டு சிறை தண்டனை வழங்கி அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆர்க்டிக் சிறையில் அலெக்சி நாவல்னி அடைக்கப்பட்டு இருந்தார்.இந்நிலையில், சிறையில் நடைபயிற்சி மேற்கொண்டிருந்த அலெக்சி நாவல்னி திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தார். சுயநினைவின்றி மயங்கிய அவரை காப்பாற்ற டாக்டர்கள் எவ்வளவு முயற்சித்தும் பலனளிக்கவில்லை என சிறை நிர்வாகம் தெரிவித்துள்ளது. உயிரிழப்புக்கான காரணம் தெரியாத நிலையில், அது தொடர்பாக விசாரணை நடத்தி வருவதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

ஏற்கனவே விஷம்

முன்னதாக, கடந்த 2020ம் ஆண்டு, நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அலெக்சி நாவல்னி, திடீரென மயங்கி விழுந்தார். அவரது உடம்பில், கொடிய விஷம் செலுத்தப்பட்டதாக, டாக்டர்கள் தெரிவித்தனர். உயிருக்கு ஆபத்தான நிலையில், ஐரோப்பிய நாடான, ஜெர்மனியில் உள்ள மருந்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். அங்கு, ஐந்து மாதங்கள் சிகிச்சை முடிந்து, ரஷ்யா திரும்பிய போது, அவர் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

T.Senthilsigamani
பிப் 17, 2024 07:06

இந்த உலகத்தில் கொள்ளை நோயால் செத்தவர்களை விட ,கொடிய பஞ்சத்தால் பட்டினி கிடந்து மரித்தவர்களை விட ,பிரளய வெள்ளம் , எரிமலை சீற்றம் ,பூகம்பம்,புயல் ,நிலச்சரிவு ஆகிய இயற்கை சீற்றங்களால் இறந்தவர்களை விட ,கம்யூனிஸ்ட் சர்வாதிகார ஆட்சியினால் சாவை சந்தித்தவர்கள் தான் மிக மிக அதிகம் . அதற்க்கு ரஷியா -உக்ரேன் போர் ,சீனாவின் கொரோனா உயிர்கொல்லி பரிசோதனை அதனால் இறந்தவர்கள் என பலப்பல உதாரணங்களை அடுக்கி கொண்டே போகலாம் . உலகின் சாபக்கேடு கம்யூனிசம் .கம்யூனிசம் கடவுள் மறுப்பு கொள்கையை அடிப்படையாக கொண்டது .அதனால் அந்த சித்தாந்தத்தை பின்பற்றுவோர்களுக்கு சுயபுத்தியும் கிடையாது சொல்புத்தியும் கிடையாது மேலும் தெய்வபயமும் கிடையாது .


K.Muthuraj
பிப் 17, 2024 09:02

நீங்கள் ரஷ்யாவை பற்றி தவறான எண்ணம் கொண்டுள்ளீர்கள் என்று நினைக்கிறேன். ரஷ்யர்கள் உண்மையில் கிறிஸ்தவ மத அடிப்படைவாதிகள். அவர்களை போன்ற ஒரு மத அடிப்படைவாதத்தினை நீங்கள் எந்த ஐரோப்பிய நாடுகளிலும் காணமுடியாது. பைபிளின் நியாயத்தீர்ப்பின் அவர்களுக்கு அசைக்க முடியாத நம்பிக்கை உண்டு. அவர்களிடம் சில பத்தாண்டுகளே கம்யுனிசம் துடிப்பாய் இருந்தது.


Senthoora
பிப் 17, 2024 06:11

இவரின் மரணம் எப்பவோ எதிர்பார்த்தது, ஏன்னா இவர் மோதிய இடம் அப்படி.ஜெர்மனியில் இருந்து போகுமிடம் நரகம் என்று தெரிந்தும் ரஷ்யாவந்தது.


Arul Narayanan
பிப் 16, 2024 21:03

அன்று அவருக்கு விமானத்தில் கொடுக்க பட்ட காஃபியில் விஷம். அவர் ஜெர்மனியிலிருந்து ரஷ்யா திரும்பியதே தவறு.


தாமரை மலர்கிறது
பிப் 16, 2024 19:54

சிசோடியா மற்றும் செந்தில் பாலாஜி இத்தனை நாட்கள் ஜெயிலில் இருந்தும் ஒன்றும் நடக்கவில்லை. சசிகலா நாலு வருடங்கள் ஜெயிலிருந்து மாலுக்கு போய் ஷாப்பிங் செய்துவிட்டு வந்திருக்கிறார். இந்தியாவின் ஜெயில் இந்த லட்சணத்தில் உள்ளது.


செந்தமிழ் கார்த்திக்
பிப் 16, 2024 19:02

திட்டமிட்ட படுகொலை. புடின் ஒரு சர்வாதிகாரி என்பது உலகறிந்த உண்மை. அதனால் தான் அவர் மோடியின் ஆதரவாளர்.


Anonymous
பிப் 16, 2024 19:21

இப்படி எல்லாம் யோசிக்குறதால தான் நீங்க ஸ்டாலின் ஆதரவாளர்னு தெரியுது. மோடியால் புடின் என்ன அரசியல் லாபம் பார்த்துட்டார் னு எல்லாருக்கும் புரியுற மாதிரி ஆதாரத்தோடு சொல்லுங்க பாப்போம்.


Barakat Ali
பிப் 16, 2024 19:35

அட ...... பய புள்ள இன்டர்நேஷனல் பாலிடிக்ஸ் கூட பேசுது ......


கொத்தடிமை லாஜிக்
பிப் 16, 2024 19:55

அப்ப சீனா சர்வதிகாரி சிங்பிங், டுமில் நாட்டு சர்வதிகாரி விடியா மூஞ்சி எல்லோரும் பப்புவின் ஆதரவாளர்களா, 200/- ஊபி?!


Iniyan
பிப் 16, 2024 18:34

நம்ம கேஜ்ஜரி மம்தா கோஷ்டிகளுக்கு இந்த மாதிரி கதி வர வேண்டும்


மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ