உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / இந்திய பொருட்களின் இறக்குமதி நிறுத்தம்; அமேசான், வால்மார்ட் முடிவு

இந்திய பொருட்களின் இறக்குமதி நிறுத்தம்; அமேசான், வால்மார்ட் முடிவு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வாஷிங்டன்: மறு அறிவிப்பு வரும் வரை இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களை நிறுத்தி வைக்குமாறு இந்திய நிறுவனங்களுக்கு அமெரிக்காவின் வால்மார்ட், அமேசான் உள்ளிட்ட வர்த்தக நிறுவனங்கள் கடிதம் எழுதியுள்ளன. இந்தியப் பொருட்களுக்கு 50 சதவீத வரியை விதித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் டிரம்ப் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இதனால், அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் இந்தியப் பொருட்களுக்கான விலை கடுமையாக உயரும் என்று அபாயம் ஏற்பட்டுள்ளது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=1eehqc2l&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்த நிலையில், அமெரிக்காவின் முக்கிய சில்லறை வர்த்தக நிறுவனங்களான வால்மார்ட், அமேசான், டார்கெட் மற்றும் கேப் உள்ளிட்டவை இந்தியாவில் ஆர்டர் செய்யப்பட்ட பொருட்களை நிறுத்தி வைத்துள்ளனர். மறு அறிவிப்பு வரும் வரை துணி உள்ளிட்ட ஏற்றுமதி பொருட்களை நிறுத்தி வைக்குமாறு இமெயில் மூலம் அனுப்பியுள்ளனர். மேலும், கூடுதல் வரிச்சுமையை ஏற்றுமதியாளர்களே ஏற்றுக் கொள்ளுமாறும் அவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். இதன்மூலம், வரிச் செலவுகள் 30 முதல் 35 சதவீதம் வரை கூடுதலாக அதிகரிக்கும் என்று தெரிகிறது. இந்த வரி உயர்வால் இந்திய நிறுவனங்கள் அமெரிக்காவுக்கு பொருட்களை ஏற்றுமதி செய்ய விரும்ப மாட்டார்கள். இதனால், அமெரிக்க ஆர்டர்கள் 40 முதல் 50 சதவீதங்கள் வரை குறையலாம்.இந்தியாவின் துணி மற்றும் ஆடை ஏற்றுமதிகளுக்கு அமெரிக்கா மிகப்பெரிய சந்தையாக உள்ளது. வெல்ஸ்பன் லிவிங், கோகல்டாஸ் எக்ஸ்போர்ட்ஸ், இண்டோ கவுண்ட் மற்றும் டிரைடென்ட் போன்ற இந்திய நிறுவனங்கள் 40 முதல் 70 சதவீதம் தயாரிப்புகளை அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்து வருகின்றனர். மார்ச் 2025ல் முடிந்த நிதியாண்டில், மொத்த துணி மற்றும் ஆடை ஏற்றுமதியில் 28 சதவீதம் (36.61 பில்லியன் டாலர்) அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 67 )

VSMani
ஆக 27, 2025 17:17

எல்லா அமெரிக்கா தயாரிப்புகளையும் புறக்கணிப்போம் KFC, McDonald, அமேசான் etc.


VAB Tv
ஆக 13, 2025 10:19

பொது மக்களுக்கு ஒன்லைன் ஆர்டர் பெருமையாக தெரிகிறது அதன் தாக்கம் பெரியது நம் ஊரில் இருக்கும் கடைகளின் நிலைமையை கொஞ்சம் யோசித்து பாருங்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு பொருளாவது தினமும் அருகில் இருக்கும் கடைகளில் வாங்குவோம் இதனால் நம் ஊரும் முன்னேற்றத்தை காண முடியும் கடன் தொல்லைகள் குறையும் தற்கொலைகள் குறையும் முடிந்தால் முயற்சி செய்து பாருங்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொருவரை நாடியே உள்ளோம் என்பதை நினைவில் கொள்வோம் .


VAB Tv
ஆக 13, 2025 10:03

ஒரு வாரம் மட்டும் online ஆர்டர் போடாமல் அருகில் உள்ள கடைகளில் பொருட்களை வாங்கி பாருங்கள் நம் நாட்டின் பொருளாதாரம் தானாகவே மாற்றம் வரும்


RAMAKRISHNARAJU
ஆக 10, 2025 07:44

யார்க்கு


Srinivasan
ஆக 10, 2025 00:14

நம் நாட்டு மக்கள் ஸ்டேட்டஸ் பார்ப்பவர்கள் வெளிநாட்டு பொருட்களுக்கு அடிமையானவர்கள் உதாரணமாக iphone


vadivelu
ஆக 11, 2025 07:15

அமெரிக்காவில் இருக்கும் இந்தியரா?


K V Ramadoss
ஆக 09, 2025 21:48

அமேசான் இந்தியா வில் இனி யாரும் பொருள் order செய்ய வேண்டாம். அமேசானை புறக்கணிப்போம்.


Gokul Krishnan
ஆக 09, 2025 09:02

இங்கு இந்தியாவில் உள்ள மக்களும் அமேசான் இந்திய e-commerce ஆன்லைன் மூலம் வாங்குவதை தவிர்க்க வேண்டும் ஆனால் செய்ய மாட்டார்கள்


Aariya Rajan
ஆக 09, 2025 08:23

நாம ஏன் அமெரிக்கா பொருட்களை வாங்க வேண்டும். நமது இந்தியா மிக விற்பணை பெரிய சந்தை. அதனால நாம அமெரிக்கா பொருட்களை வாங்க கூடாது.


Rajpal
ஆக 09, 2025 20:11

இந்தியச் சந்தையில் அமெரிக்கப் பொருட்கள் என்று பார்த்தால் ஷோ ஐட்டம் தான் அதிகம். அதைப் புறக்கணிக்கும் செயல் நம் இளைய தலைமுறையினர் கைகளில் உள்ளது. இந்தியச் சந்தையில் அமெரிக்க பொருட்கள் என கூகிள் இல் தேடினால் காணலாம். இயன்றவரை அந்தப் பொருட்களுக்கு பதிலாக மாற்று பொருட்களை வாங்க முயற்சி செய்யலாம்.


K.Uthirapathi
ஆக 09, 2025 06:13

KFC துருக்கியின் கம்பெனி. அமெரிக்க கம்பெனியல்ல.


sasikumaren
ஆக 09, 2025 01:19

அமெரிக்க பொருட்கள் என்று சொல்லி கொள்ளும் கேஃஎப்சி, இந்தியாவில் தயாரிக்கப்படும் ஐபோன் இன்னும் பல பொருட்களின் விலை எப்போதும் போல யாராலும் தொட முடியாத இடத்தில் தான் இன்னும் விலை அதிகரிக்கும் இதை வாங்கி பயன்படுத்துபவர்களின் பர்ஸ் காலியாகி விடும் இதை பற்றி அறியாத மக்களுக்கு அமெரிக்கா வரிகளை பற்றிய பயமே இருக்காது அதில் நானும் ஒருவன் என்பதில் பெரு மகிழ்ச்சி.


சமீபத்திய செய்தி