இந்திய ஐ.டி., இன்ஜினியரை சுட்டுக்கொன்றது அமெரிக்க போலீஸ்
கலிபோர்னியா; அமெரிக்காவில், அறைத் தோழனை கத்தியால் குத்திய தெலுங்கானாவை சேர்ந்த ஐ.டி., இன்ஜினியரை போலீசார் சுட்டுக்கொன்றனர். தெலுங்கானாவின் மஹபூ ப் நகரைச் சேர்ந்தவர் முகமது நிஜாமுதீன், 30. ஐ.டி., எனப்படும், தகவல் தொழில்நுட்ப இன்ஜினியரான இவர் கலிபோர்னியா சாண்டா கிளாராவில் சில ந ண்பர்களுடன் சேர்ந்து வீடு எடுத்து தங்கியிருந்தார். அவரது வீட்டில் சண்டை நடப்பதாக போலீசாருக்கு அக்கம்பக்கத்தினர் தகவல் கொடுத்தனர். போலீசார் அங்கு சென்றபோது, நிஜாமுதீன் தனது அறைத் தோழனை கத்தியால் குத்திவிட்டு நின்று கொண்டிருப்பதைக் கண்டனர். இதைஅடுத்து போலீசார் நிஜாமுதீனை துப்பாக்கியால் சுட்டதுடன், அவர் பிடியில் சிக்கியிருந்த இளைஞரையும் மீட்டனர். புளோரிடா கல்லுாரியில் நிஜாமுதீன் கணினி அறிவியலில் முதுகலை ப் பட்டம் பெற்றவர். கலிபோர்னியாவின் சாண்டா கிளாராவில் உள்ள ஒரு ஐ.டி., நிறுவனத்தில் பணிபு ரிந்து வந்தார். தங்கள் மகன் அறையில் இனரீதியான துன்புறுத்தலை அனுபவித்து வந்ததாகவும், இதன் காரணமாகவே தகராறு நடந்திருக்கலாம் என்றும் பெற்றோர் குற்றஞ்சாட்டி உள்ளனர்.