உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / அமெரிக்காவின் பொற்காலம் துவங்கியுள்ளது: டிரம்ப் பேச்சு

அமெரிக்காவின் பொற்காலம் துவங்கியுள்ளது: டிரம்ப் பேச்சு

வாஷிங்டன்: அமெரிக்காவின் பொற்காலம் துவங்கி விட்டது என அமெரிக்கா அதிபராக பதவியேற்ற பிறகு, டொனால்டு டிரம்ப் பேசுகையில் தெரிவித்தார்.பதவியேற்ற பின், அதிபர் டொனால்டு டிரம்ப் ஆற்றிய உரையின் முக்கிய அம்சங்கள்: * அமெரிக்காவின் பொற்காலம் துவங்கி விட்டது. இன்று முதல், நம் நாடு மீண்டும் செழித்து உலகம் முழுதும் மதிக்கப்படும். * அமெரிக்காவை மீண்டும் சிறந்த நாடாக உருவாக்கவே, துப்பாக்கிச் சூட்டில் இருந்து கடவுளால் காப்பாற்றப்பட்டேன்.* அமெரிக்க - மெக்சிகோ எல்லையில் அவசரநிலை பிரகடனம்.* சட்ட விரோத அகதிகளின் ஊடுருவல் தடுத்து நிறுத்தப்படும்* ஆண் - பெண் என்ற இரு பாலினங்களுக்கு மட்டுமே அங்கீகாரம் * பனாமா கால்வாயில், அமெரிக்க கப்பல்களுக்கு அதிக வரி விதிக்கப்படுகிறது. இதனால், அந்த கால்வாய் அமெரிக்காவோடு மீண்டும் இணைக்கப்படும்; அதை சீனா நிர்வகிக்க தேவையில்லை.* மின் வாகனம் கட்டாயம் என்ற உத்தரவு வாபஸ்; விரும்பிய வாகனங்களை பயன்படுத்தலாம் இஸ்ரேல் - ஹமாஸ் போர் நிறுத்தம் உறுதி செய்யப்படும்.* துப்பாக்கி கலாசாரத்துக்கு முடிவு கட்டப்படும்.* செவ்வாய் கிரகத்தில் அமெரிக்க கொடி பறக்கும். மெக்சிகோ வளைகுடா இனி, அமெரிக்க வளைகுடா என அழைக்கப்படும்.* அமெரிக்க குடிமக்களை வளப்படுத்த வெளிநாடுகளுக்கு வரி விதிக்கப்படும்.* அமெரிக்காவில் பேச்சுரிமைக்கான கட்டுப்பாடுகள் நீக்கப்படுகின்றன.* சட்டத்துக்கு கட்டுப்படாத குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.* வளர்ந்து வரும் நாடாகவே அமெரிக்காவை கருதுகிறோம்; எல்லைகளை விரிவாக்குவோம்.* ஜோ பைடன் அரசின் தவறான நிர்வாகத்தால் எரிசக்தி விலை கடுமையாக உயர்ந்தது. எனவே எரிசக்தி அவசரநிலை அறிவிக்கப்படுகிறது.* இயற்கை பேரிடர்களை தடுப்பதிலும், எல்லைப் பாதுகாப்பு பிரச்னைகளை தீர்ப்பதிலும் ஜோ பைடன் அரசு தோல்வி அடைந்து விட்டது. * கொரோனா தடுப்பூசி போட மறுத்ததற்காக ராணுவத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட வீரர்களை, ஊதியத்துடன் மீண்டும் பணியில் அமர்த்துவேன். இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 14 )

ஜெய்ஹிந்த்புரம்
ஜன 21, 2025 08:32

அமெரிக்க குடிமக்களை வளப்படுத்த வெளிநாடுகளுக்கு வரி விதிக்கப்படும். - அட கோமாளியே.. சரி சரி இதுக்கு நிர்மலா சீதாராமனை அமெரிக்க நிதி மந்திரி ஆக்கிடு.. போட்டு தாளித்து விடுவார்..


வெள்ளைச்சாமி,அறந்தாங்கி
ஜன 21, 2025 09:24

உன்னைப் போன்ற அமைதி மார்க்க மூர்க்க கூட்டம் இனிமேல் வாலாட்ட முடியாது ஒட்ட நறுக்கி விட்ருவானுக ஜாக்கிரதை


ஜெய்ஹிந்த்புரம்
ஜன 21, 2025 08:31

ஆண் - பெண் என்ற இரு பாலினங்களுக்கு மட்டுமே அங்கீகாரம்.


ஜெய்ஹிந்த்புரம்
ஜன 22, 2025 00:41

ஐயப்பா ..


ஜெய்ஹிந்த்புரம்
ஜன 21, 2025 08:29

அமெரிக்காவை மீண்டும் சிறந்த நாடாக உருவாக்கவே, துப்பாக்கிச் சூட்டில் இருந்து கடவுளால் காப்பாற்றப்பட்டேன். அப்பாவிகளை கொல்லும் துப்பாக்கி சூட்டில் முதல் நாடு.. அதை மாத்து முதலில் ங்கொய்யாலே.


ஜெய்ஹிந்த்புரம்
ஜன 21, 2025 08:06

இது நாலு வருட ....


Thirumal s S
ஜன 21, 2025 06:49

அமெரிக்காவின் மோதி


ஜெய்ஹிந்த்புரம்
ஜன 21, 2025 08:06

அமெரிக்காவின் 23ம் புலிகேசி.


ராமகிருஷ்ணன்
ஜன 21, 2025 05:26

டிரம்பு பேசுவது அமெரிக்க விடியலார் பேச்சு போல இருக்கு. பாவம் அமெரிக்க மக்கள்.


ஜெய்ஹிந்த்புரம்
ஜன 21, 2025 08:07

அமெரிக்க மங்கி பாத் என்று மகா அமெரிக்க சங்கிகள் புளகாங்கிதம் அடைகிறார்கள்.


xyzabc
ஜன 21, 2025 04:16

இது திராவிட மாடல் பேச்சு


தாமரை மலர்கிறது
ஜன 20, 2025 23:51

அமெரிக்காவின் பொற்காலம் அஸ்தமனம் துவங்கியுள்ளது. முப்பதுகளில் இருந்த பிரிட்டிஷ் காலத்தை போன்றது தற்போதைய அமெரிக்கா. அத்தனை தொழிற்சாலைகளையும் சீனாவிற்கு அனுப்பிவிட்டு வெறும் ரிசர்வ் கரரென்சி தகுதியை வைத்து வாழமுடியும் என்று நினைப்பது மண்குதிரையை நம்பி கடலில் இருப்பதற்கு சமம்.


Gopalan
ஜன 20, 2025 23:32

அமெரிக்கா தலைவர்கள் ஒவ்வொரு குணங்கள் கொண்டவர்கள். மற்ற நாட்டினர் பிச்சைக்காரர்கள் என்று தோன்றும் அளவுக்கு மமதை கொண்டு அரசியல் செய்கிறார்கள். இதில் Trump அவர்கள் வேறு பட்டவர். பிசினஸ் தான் முதல் என்று செயல் படுபவர் Trump அவர்கள். இந்திய அரசுக்கு எதிராக செயல் பட்டால் மிகவும் நஷ்டத்தில் கொண்டு வீழ்வர்.