உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / கனடா வெளியுறவு அமைச்சர் அனிதா ஆனந்த்; பகவத் கீதை சாட்சியாக பதவியேற்றார்!

கனடா வெளியுறவு அமைச்சர் அனிதா ஆனந்த்; பகவத் கீதை சாட்சியாக பதவியேற்றார்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஒட்டாவா: புதிய அமைச்சரவை அறிவிப்புக்கு பிறகு இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அனிதா ஆனந்த் கனடாவின் வெளியுறவுத் துறை அமைச்சரானார்.வட அமெரிக்க நாடான கனடாவில் பார்லிமென்ட் தேர்தல் நடந்தது. இதில், ஆளும் லிபரல் கட்சி, எதிர்க்கட்சியான கன்சர்வேட்டிவ் மற்றும் புதிய ஜனநாயக கட்சி ஆகியவை களமிறங்கியது. இத்தேர்தலில், மார்க் கார்னி தலைமையிலான ஆளும் லிபரல் கட்சி வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை தக்க வைத்தது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=6m0j5t26&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0தற்போது கனடா பிரதமர் மார்க் கார்னி, புதிய அமைச்சரவை குறித்து அறிவிப்பு வெளியிட்டார். இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அனிதா ஆனந்த் கனடாவின் வெளியுறவுத் துறை அமைச்சரானார்.

இவர் யார் தெரியுமா?

* தமிழகத்தைச் சேர்ந்த தந்தை மற்றும் பஞ்சாபைச் சேர்ந்த தாயாருக்கு பிறந்தவர் அனிதா ஆனந்த்(57).* அனிதா ஆனந்தின் தந்தைவழி தாத்தா சுதந்திர போராட்ட வீரர் வெள்ளலூர் அண்ணாசாமி சுந்தரம். * அனிதா ஆனந்த் கோவை மாவட்டம் வெள்ளலூரை பூர்வீகமாக கொண்டவர். இவரது தந்தை ஆனந்த், ஒரு பொது அறுவை சிகிச்சை நிபுணர். அம்மா சரோஜ் மயக்க மருந்து நிபுணராக இருந்தவர்.* 2019 ல் ஆக்வில்லா தொகுதியில் வெற்றி பெற்றதும், ட்ரூடோ அமைச்சரவையில் இடம்பெற்றார். போக்குவரத்துத்துறை அமைச்சர் ஆனார்.* 2021ல் கனடா பாதுகாப்புத்துறை பதவி வகித்தார். அப்போது ரஷ்யாவிற்கு எதிரான போரில் உக்ரைனுக்கு ஆதரவாக செயல்பட்டார். * இவர் குயீன்ஸ் பல்கலையில், இளநிலை அரசியல் கல்வி, ஆக்ஸ்போர்ட் பல்கலையில் நீதித்துறை சார்ந்த படிப்பு, டல்ஹவுசி பல்கலையில் இளநிலை சட்டப்படிப்பு, டொரன்டோ பல்கலையில் முதுநிலை சட்டப்படிப்பு ஆகியவற்றில் பட்டம் பெற்றவர். இவர் 2019ல் அரசியலில் நுழைந்தார். * இவர் தான் கனடா பிரதமர் தேர்தலில் போட்டியிடுகிறார் என்று முதலில் தகவல் பரவியது. ஆனால் இவர் பிரதமர் போட்டியில் இல்லை என்பதை அனிதா ஆனந்த் உறுதி செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பகவத் கீதை

கனடாவின் வெளியுறவுத்துறை அமைச்சராக தமிழ்நாட்டு வம்சாவளியை சேர்ந்த அனிதா ஆனந்த் நியமனம் செய்யப்பட்டார். பகவத் கீதை மீது கை வைத்து பதவிப்பிரமாணம் ஏற்றுக் கொண்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

M. PALANIAPPAN, KERALA
மே 14, 2025 13:32

இந்தியா பாரம்பரியத்தை கடை பிடிக்கும் சகோதரிக்கு நன்றி


sugumar s
மே 14, 2025 12:08

indian spiritual practices are accepted, understood and followed by entire word except these dravidians who are shame to the society


xyzabc
மே 14, 2025 11:04

சேகர் பாபு பாக்கலயா?


ராமகிருஷ்ணன்
மே 14, 2025 11:04

கொத்தடிமை கூட்டம் இந்த செய்தியை கவனிங்க இதற்கு காரணம் நீங்க தான்.


மீனவ நண்பன்
மே 14, 2025 08:44

திராவிட அடிப்பொடிகளுக்கு அடிமடியில சுனாமி வந்த மாதிரி கலக்குமே …பெரியார் மண் என்று பீலா விடுவதற்கு சங்கோஜமா இருக்குமே ..பூர்வீகம் அவா மாதிரி இருக்கே


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை