உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / வங்கதேசத்தில் ராணுவம் அத்துமீறல் ஹிந்துக்கள் மீது தடியடி தாக்குதல்

வங்கதேசத்தில் ராணுவம் அத்துமீறல் ஹிந்துக்கள் மீது தடியடி தாக்குதல்

சிட்டகாங், வங்கதேசத்தில், 'இஸ்கான்' அமைப்பை பற்றி சமூக வலைதளத்தில் அவதுாறு கருத்தை பதிவிட்ட முஸ்லிம் வியாபாரியை கண்டித்து, போராட்டத்தில் ஈடுபட்ட ஹிந்துக்கள் மீது அந்நாட்டு ராணுவத்தினர் தாக்குதல் நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.நம் அண்டை நாடான வங்கதேசத்தின் சிட்டகாங் மாகாணத்தின் ஹாசாரி கோலி நகரில், முஸ்லிம் மதத்தைச் சேர்ந்த ஒஸ்மான் மோலா என்ற வியாபாரி, 'இஸ்கான்' எனப்படும் கிருஷ்ணர் வழிபாட்டுக்கான சர்வதேச சங்கம், பயங்கரவாத அமைப்பு என, சமூக வலைதளத்தில் நேற்று முன்தினம் பதிவிட்டிருந்தார். இதைப் பார்த்த அப்பகுதியைச் சேர்ந்த ஹிந்துக்கள் பலர், ஒஸ்மான் மோலாவின் கடையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த போலீசார், ஒஸ்மான் மோலாவை விசாரணைக்கு அழைத்து சென்றனர்.அதன்பின், சிறிது நேரத்தில் அப்பகுதிக்குள் ராணுவத்தினருடன் போலீசார் நுழைந்து, போராட்டத்தில் ஈடுபட்ட மக்களை குறிவைத்து தாக்குதல் நடத்தினர். இது குறித்து, இஸ்கான் அமைப்பின் செய்தித் தொடர்பாளர் ராதாராமன் தாஸ் கூறுகையில், ''வங்கதேசத்தில் உள்ள இஸ்கான் அமைப்பை தடை செய்யும்படி ஒரு சில குழுக்கள் தெரிவித்து வருகின்றன. வங்கதேசத்தில் உள்ள ஹிந்துக்களுக்கு உரிய பாதுகாப்பு கிடைப்பதை, பிரதமர் மோடி உறுதி செய்ய வேண்டும்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ