உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / சீன விமான நிலையத்தில் இந்திய வம்சாவளி பெண்ணுக்கு சித்ரவதை; பிரதமர் மோடிக்கு கண்ணீர் கடிதம்

சீன விமான நிலையத்தில் இந்திய வம்சாவளி பெண்ணுக்கு சித்ரவதை; பிரதமர் மோடிக்கு கண்ணீர் கடிதம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: அருணாச்சல பிரதேசம் எங்களுக்கு சொந்தம் என்று கூறி, ஷாங்காய் விமான நிலையத்தில் இந்திய வம்சாவளி பெண்ணை பிடித்து வைத்து சீன அதிகாரிகள் சித்ரவதை செய்துள்ளனர். இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க பிரதமர் மோடிக்கு பாதிக்கப்பட்ட பெண் கடிதம் எழுதியுள்ளார்.பிரிட்டனைச் சேர்ந்த இந்திய வம்சாவளி பேமா வாங்ஜோம் தோங்டோக், அருணாச்சல பிரதேசத்தை பூர்வீகமாகக் கொண்டவர். இவர் கடந்த நவ.,21ம் தேதி லண்டனில் இருந்து ஜப்பானுக்கு புறப்பட்டு சென்றுள்ளார். இவர் சென்ற விமானம் சீனாவின் ஷாங்காய் புடோங் விமான நிலையத்தில் 3 மணிநேரம் நின்று செல்லும். எனவே, அவர் ஷாங்காய் விமான நிலையத்தில் காத்திருந்து பயணிக்க வேண்டிய நிலை இருந்தது. பேமா தன்னுடைய பாஸ்போர்ட்டில் அருணாச்சல பிரதேசத்தை பூர்வீகமாக குறிப்பிட்டிருந்ததால், ஷாங்காய் விமான நிலைய குடியுரிமை அதிகாரிகள், அவரிடம் கடுமையாக நடந்து கொண்டுள்ளனர். பேமாவின் பாஸ்போர்ட் செல்லாது என்று அறிவித்ததுடன், அருணாசலப் பிரதேசம் சீனாவின் ஒருபகுதி என்றும் மிரட்டியுள்ளனர். இந்தக் காரணத்திற்காக, பேமாவை சுமார் 18 மணிநேரம் சீன அதிகாரிகள் சோதனை செய்துள்ளனர். இதனால், அவர் திட்டமிட்டபடி, ஜப்பானுக்கு சென்று சேர முடியாத நிலை ஏற்பட்டது. இந்த நிலையில், தனக்கு நேர்ந்த சம்பவம் தொடர்பாக பிரதமர் மோடிக்கு அவர் கடிதம் எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில், காரணமே இல்லாமல் தன்னை பிடித்து வைத்து, அவர்கள் நடத்திய விதம், இந்திய இறையாண்மையையும், அருணாச்சல பிரதேச மக்களையும் அவமதிக்கும் வகையில் இருந்தது. இந்த சம்பவத்தில் தொடர்புடைய சீன அதிகாரிகள் மற்றும் சீன ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸ் விமான ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது; குடியுரிமை அதிகாரிகளிடம் என்னுடைய பாஸ்போர்ட்டை கொடுத்து விட்டு, நான் காத்திருந்தேன். அப்போது, அங்கு வந்த அதிகாரி, அருணாச்சல பிரதேசம் சீனாவின் ஒரு பகுதி என்பதால், உங்களின் பாஸ்போர்ட் செல்லாது எனக் கூறினார். இதைப் பார்த்து சீன குடியுரிமை அதிகாரிகளுடம், சீன ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸ் ஊழியர்களும் கேலி செய்து சிரித்தனர். மேலும், சீன பாஸ்போர்ட்டை விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தினர். சீனாவில் 3 மணிநேர காத்திருப்பை 18 மணிநேரமாக ஆக்கி விட்டனர். இந்த சமயத்தில் எனக்கு உணவு உள்பட எந்த அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்கப்படவில்லை. ஜப்பான் செல்வதற்கு உரிய விசா இருந்தும், விமானத்தில் ஏறுவதற்கு என்னை அனுமதிக்கவில்லை. மாறாக, தன்னை ஒரு அறையில் சிறைபடுத்தி விட்டதால், மீண்டும் டிக்கெட் பதிவு செய்ய முடியவில்லை. அதுமட்டுமில்லாமல், சீன ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸில் மட்டுமே புதிய டிக்கெட் வாங்க வேண்டும் என்று அழுத்தம் கொடுத்தனர். அப்படி செய்தால் மட்டுமே பாஸ்போர்ட் திருப்பி வழங்கப்படும் என்று கூறினர். இதனால், விமான டிக்கெட் மற்றும் ஹோட்டல் புக்கிங் செய்த பணம் எனக்கு வீணாகி விட்டது. பிறகு, பிரிட்டனில் இருந்த என்னுடைய நண்பர் மூலம் சீனாவில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகளை சந்திக்க முடிந்தது. அவர்கள் வந்து என்னை மீட்டு, விமானத்தில் அனுப்பி வைத்தனர், இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை