உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / இந்தியா உடனான உறவை முறிக்கும் முயற்சி தோல்வி அடையும்: டிரம்புக்கு ரஷ்யா சுளீர்

இந்தியா உடனான உறவை முறிக்கும் முயற்சி தோல்வி அடையும்: டிரம்புக்கு ரஷ்யா சுளீர்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மாஸ்கோ: இந்தியா உடனான உறவை முறிக்கும் முயற்சி தோல்வி அடையும் என அமெரிக்க அதிபர் டிரம்பை ரஷ்யா கூறியுள்ளது.ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதால் கடுப்பான அமெரிக்கா, இந்திய பொருட்களுக்கு 50 சதவீத வரி விதித்தது. இதனால், நம் ஏற்றுமதியாளர்கள் கவலை அடைந்துள்ளனர். அமெரிக்காவின் வரி விதிப்புக்கு மத்திய அரசு கண்டனம் தெரிவித்தது. இந்த சூழலில் இந்தியா-ரஷ்யா இடையேயான உறவில் விரிசல் உண்டாக்க அதிபர் டிரம்ப் முனைப்பு காட்டி வருகிறார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=bpw5k95o&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இது குறித்து ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சகம் கூறியிருப்பதாவது: ரஷ்யாவிலிருந்து எண்ணெய் வாங்குவதை நிறுத்துமாறு அமெரிக்கா மற்றும் நேட்டோவின் தொடர்ச்சியான அழுத்தங்களுக்கு எதிராக இந்தியா உறுதியான நிலைப்பாட்டை எடுத்துள்ளது. அச்சுறுத்தல்கள் இருந்தபோதிலும் இந்தியா உறுதியாக இருக்கிறது.இந்தியா- ரஷ்யா இடையே உறவுகளைத் தொந்தரவு செய்யும் எந்தவொரு முயற்சியும் தோல்வியடையும். இந்தியாவுக்கு, ரஷ்யாவுக்கு இடையிலான உறவுகள் முன்னேற்றம் கண்டு வருகிறது. நீண்டகால ரஷ்யா-இந்தியா நட்பு கலாசாரம் உட்பட பல்வேறு விஷயங்களில் வேரூன்றியுள்ளது. தேசிய நலன்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

ManiMurugan Murugan
செப் 15, 2025 23:29

ManiMurugan Murugan அருமை அமெரிக்காவின் குள்ள சரி த் தளத்திற்கு சரியான சாடல் இந்தியாவை குறை சொல்லும் அமெரிக்கா அவர்கள் வர்த்தகத்தை நிறுத்தட்டும் இந்தியா வளர்வது பிடிக்காமல் அமெரிக்கா அதை கெடுக்க நினைக்கிறது


Rathna
செப் 15, 2025 12:08

ராஜ தந்திர முறையில் அமெரிக்கா அரசை ஏகாதிபத்தியத்தை அடக்க, இந்தியா ரஷ்யா, சீனாவுடன் தேவைப்படும் அளவில் உறவு கொள்வது அவசியம். அது நமது வளர்ச்சிக்கு உதவும். தேவைப்படும் நேரத்தில் நமக்கு பொருளாதார பாதுகாப்பு வழங்கும். ரஷ்யாவை போல நமக்கு ராணுவ தொழில் நுட்பத்தை வழங்கியது வேற யாரும் இல்லை.


Artist
செப் 15, 2025 11:11

தமிழ்நாடு குறைந்த விலையில் டாஸ்மாக் சரக்குகளை ஏற்றுமதி செய்து பெட்ரோலிய பதார்த்தங்களை இறக்குமதி செய்ய புரிந்துணர்வு ஒப்பந்தங்களை போடவேண்டும்


பேசும் தமிழன்
செப் 15, 2025 09:40

ரஷ்யா கொடுக்கும் அதே விலைக்கு கச்சா எண்ணெய் அமெரிக்கா கொடுத்தால்.. அதையும் வாங்கி கொள்ள இந்தியா தயாராக இருக்கிறது.. இந்தியாவின் மக்கள் தொகை மிக அதிகம்.. அவர்களுக்கான தேவையும் அதிகளவில் உள்ளது.. குறைந்த விலையில் கிடைக்கும் கச்சா எண்ணையை வாங்காதே என்றால்..... பெட்ரோல் 200 ரூபாய்.... 300 ரூபாய்க்கு விற்க வேண்டும் என்று நினைக்கிறீர்களா ???


பேசும் தமிழன்
செப் 15, 2025 09:24

ரஷ்யா மட்டுமெ என்றும் நமது நட்பு நாடு... அமெரிக்கா எப்போதும் பாகிஸ்தான் நாட்டுடன் சேர்ந்து கொண்டு நமது முதுகில் குத்தும் செயலையே செய்து வந்து இருக்கிறது.


ஆரூர் ரங்
செப் 15, 2025 09:23

இப்போதுள்ள நிலவரத்தில் ரஷ்ய எண்ணெய் வாங்குவதில் லாபமேயில்லை. 35 சதவீத கப்பல்களைக் கையாளும் தனியார் நிறுவனம் பல ரஷ்யக் கப்பல்களுக்கு தடை விதித்து விட்டது. விலை குறைவாகக் கொடுக்கும் எந்த நாட்டிடமும் வாங்கிக் கொள்ளலாம். ஒரேயடியாக ரஷியாவைச் சார்ந்திருப்பதும் நீண்டகால அளவில் நல்லதல்ல.


Pats, Kongunadu, Bharat, Hindustan
செப் 15, 2025 09:37

ரஷ்யா குறைந்த விலையில் வழங்கும் வரை வாங்குவதில் தவறில்லை. இந்திய எண்ணெய் நிறுவனங்களுக்கு நன்கு தெரியும், எவரிடம், எப்போது, எங்கு, என்ன விலையில் வாங்க வேண்டும் என்று. இந்தியா இரண்டாவது மிகப்பெரிய எண்ணெய் வாங்கும் நாடு. நம்மை யாராலும் புறக்கணிக்க முடியாது. கவலை வேண்டாம்.


SUBBU,MADURAI Born in the 80s
செப் 15, 2025 09:52

செய்தியை முழுமையாக தெரிந்து கொண்டு உங்கள் கருத்தை பதிவிடுங்கள்.


JAYACHANDRAN RAMAKRISHNAN
செப் 15, 2025 11:38

ரஷ்யா OPEC கூட்டமைப்பில் ரஷ்யா இல்லை. விலை நிர்ணயம் ரஷ்யாவை கட்டுப்படுத்தாது. ரஷ்யா தனக்கு பிடித்தமான விலையில் விற்கலாம்.


Palanisamy T
செப் 15, 2025 09:19

புட்டின், அதிபர் டிரம்ப் அவர்களின் இந்த பலவீனத்தை நன்கறிந்துதான் உக்ரைன் மீது பொதுமக்களின் குடியிருப்புக்கள் என்றும் பாராமல் கண்மூடித்தனமான போர்விதி முறைகளையும் மீறி ஆபத்தான தாக்குதல் செயல்பாடுகளிலும் அவர் இறங்கியுள்ளாரோ? அவரிடம் எப்படி உண்மையை எதிர்ப் பார்க்கமுடியும்?


SUBBU,MADURAI
செப் 15, 2025 13:51

போர் என்பதே விதிமுறைகளுக்கு அப்பாற் பட்டதுதான் அப்படியிருக்கும் போது உன் புலம்பல்கள் அந்த போர் இறைச்சலில் கேட்க வாய்ப்பில்லை. இதுநாள்வரை ஒழுங்காகத்தானே கருத்தை பதிவிட்டுக் கொண்டு இருந்தாய் இப்போது ஏன் திடீரென குறுக்குச்சால் ஓட்டுகிறாய்?


பாலாஜி
செப் 15, 2025 08:55

மலிவான விலையில் பெட்ரோல் இந்தியாவுக்கு ரஷ்யாவை தவிர வேறு எந்த நாடும் அளிக்க முடியாது என்ற காரணத்தால் டிரம்ப் ஆதரவைவிட புதின் ஆதரவு இந்தியாவுக்கு முக்கியமான தேவை.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை