உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / ஆஸி., வெள்ளத்தில் சிக்கி இந்திய பெண் உயிரிழப்பு

ஆஸி., வெள்ளத்தில் சிக்கி இந்திய பெண் உயிரிழப்பு

கான்பெரா ஆஸ்திரேலியாவில் பெய்த மழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி, இந்தியாவைச் சேர்ந்த பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.ஆஸ்திரேலியாவில் உள்ள குயின்ஸ்லாந்து மாகாணத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் பல்வேறு பகுதிகளில் வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. இந்த நிலையில் மவுண்ட் இசா பகுதியில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளத்தில் சிக்கி, இந்தியாவைச் சேர்ந்த பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக ஆஸ்திரேலியாவில் உள்ள இந்திய துாதரகம் தெரிவித்துள்ளது.இது தொடர்பாக இந்திய துாதரகம் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:குயின்ஸ்லாந்தின் மவுன்ட் இசா பகுதியில், வெள்ளத்தில சிக்கி இந்திய பெண் உயிரிழந்துள்ளார். இறந்த பெண்ணின் குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கல். அந்த குடும்பத்துக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்வோம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.வெள்ளத்தில் சிக்கி பலியான அந்த பெண்ணின் பெயரை துாதரகம் வெளியிடவில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











முக்கிய வீடியோ