உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / சிறுவர்களுக்கு எதற்கு பேஸ்புக், இன்ஸ்டா? செக் வைத்த ஆஸி., பிரதமர்

சிறுவர்களுக்கு எதற்கு பேஸ்புக், இன்ஸ்டா? செக் வைத்த ஆஸி., பிரதமர்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கான்பெரா: 'ஆஸ்திரேலியாவில் 16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சமூக வலைதளங்களை பார்க்க தடை விதிக்கும் வகையில் புதிய சட்டம் கொண்டு வரப்படும்' என ஆஸ்திரேலியா பிரதமர் அந்தோனி அல்பனீஸ் அறிவித்தார்.குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சமூகவலைதளங்களை பயன்படுத்துவதில் அதிக நேரத்தை செலவிடுகிறார்கள். சமூகவலைதளத்தில் கணக்கு இல்லாதவர்களை காண்பதே அரிது. இந்த சூழலில் ஆஸ்திரேலியாவில் 16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சமூக வலைதளங்களை பார்க்க தடை விதிக்கும் வகையில் புதிய சட்டம் கொண்டு வரப்படும்' என ஆஸ்திரேலியா பிரதமர் அந்தோனி அல்பனீஸ் அறிவித்தார். இது குறித்து அவர் கூறியிருப்பதாவது: 16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சமூக வலைதளங்களை பார்க்க தடை விதிக்கும் வகையில் புதிய சட்டம் கொண்டு வரப்படும். இந்த சட்டம் 12 மாதங்களுக்கு பிறகு நடைமுறைக்கு வரும். இந்த ஆண்டு பார்லிமென்டில் சட்டம் அறிமுகப்படுத்தப்படும்.சமூக ஊடகங்கள் குழந்தைகளுக்கு தீங்கு விளைவிக்கின்றன. குழந்தைகள் அதிக நேரத்தை வீணாக செலவு செய்கின்றனர். பெற்றோரின் ஒப்புதலைப் பெற்ற பயனர்களுக்கு விதிவிலக்குகள் இருக்காது. இவ்வாறு அவர் கூறினார். கடந்த ஆண்டு பிரான்ஸ் 15 வயதிற்குட்பட்டவர்களுக்கு சமூக ஊடகங்களுக்கு தடை விதிக்க முன்மொழிந்தது. இருப்பினும் பயனர்கள் பெற்றோரின் ஒப்புதலுடன் தடையைத் தவிர்க்க முடிந்தது. பல நாடுகள் ஏற்கனவே கடுமையான சட்டத்தின் மூலம் குழந்தைகளின் சமூக ஊடகப் பயன்பாட்டைக் கட்டுப்படுத்துவதாக உறுதியளித்துள்ளன. இதனால், இன்ஸ்டாகிராம், யூடியூப் போன்ற சமூகவலைதளங்கள் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

நிக்கோல்தாம்சன்
நவ 07, 2024 21:07

இந்த வலைத்தளங்கள் இருந்தென்ன பயன் என்று ஆட்சியாளர்கள் எப்போது உணர்கிறார்களோ அன்று தான் இளைய தலைமுறை காக்கப்படும்


Ramesh Sargam
நவ 07, 2024 20:01

இந்த செக்கை எல்லா நாட்டினரும் வைக்கவேண்டும்.


என்றும் இந்தியன்
நவ 07, 2024 16:40

ஸ்வீடெனில் இது கொண்டு வந்தாச்சு இப்போ அடுத்தது ஆஸ்திரேலியாவா உலகம் பூராவும் கொண்டு வரவேண்டும் இந்த சட்டத்தை. தாய் போனை நோண்ட சுதந்திரம் வேண்டுமென்று குழந்தைகளிடம் போன் கொடுத்து அவர்கள் பலவற்றை கற்றுக்கொண்டு வளரும் காலத்தை இல்லாமல் செய்து வீணடிக்கின்றார்கள்


MARI KUMAR
நவ 07, 2024 15:18

? சமூக வலைதளங்களை பார்த்து பார்த்து குழந்தைகளுக்கு கெட்டுப்போய் கிடக்கிறது இது நல்ல முடிவு தான் குழந்தை வாழ்க்கை மேம்படும் நன்றாக வாழ்க்கையும் முன்னேறும்