இந்தியாவுக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட் தொடரை கைப்பற்றியது ஆஸி.,
வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்
அடிலெய்டு: இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியிலும் ஆஸி., அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் அந்த அணி ஒரு நாள் தொடரையும் கைப்பற்றியது.ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய அணி, மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. மழையால் பலமுறை பாதிக்கப்பட்ட, பெர்த் போட்டியில் இந்தியா தோற்றது. இரு அணிகள் மோதும் இரண்டாவது போட்டி இன்று அடிலெய்டு ஓவல் மைதானத்தில் நடந்தது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆஸி., அணி பீல்டிங் தேர்வு செய்தது. இதனையடுத்து இந்திய அணி சார்பில் துவக்க வீரர்களாக ரோகித் சர்மா மற்றும் கேப்டன் சுப்மன் கில் களமிறங்கினர். கில் 9 ரன்னில் ஏமாற்றமளித்தார். விராட் கோஹ்லியும் 4 பந்துகளை சந்தித்து ஒன் எடுக்காமல் அவுட்டானார்.பிறகு ரோகித் சர்மாவும், ஸ்ரேயாஸ் ஐயரும் ரன்களை சேர்த்தனர். ரோகித் 73 ரன்களும், ஸ்ரேயாஸ் 61, அக்சர் படேல் 44 ரன்களுக்கு அவுட்டாகினர்.அடுத்து வந்த கேஎல் ராகுல் 11, வாஷிங்டன் சுந்தர் 12, நிதிஷ்குமார் ரெட்டி 8, அர்ஷ்தீப் சிங் 13 ரன்களுக்கு அவுட்டானார்கள். இந்திய அணி 50 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 265 ரன்கள் எடுத்தது. ஹர்ஷித் ராணா 24 ரன்களுடன் களத்தில் இருந்தார்.265 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி துவக்கத்தில் கேப்டன் மிச்சல் மார்ஷ் 11, டிராவிஸ் ஹெட் 28 ரன்களுக்கு அவுட்டானார்கள்.பிறகு மாத்யூ ஷார்ட் 78 ரன்கள் குவித்தார். அந்த அணி நிதானமாக விளையாடியது. மாட் ரென் ஷா 30, அலெக்ஸ் காரே 9 ரன்களுக்கு அவுட்டானார்கள்.மிச்சல் ஓவன் 36, சேவியர் பார்லெட் 3, மிச்சல் ஸ்டார்க் 4 ரன்களுக்கு அவுட்டானார்கள். கூப்பர் கோனோலே 61 ரன்கள் எடுக்க அந்த அணி 46.2 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 265 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய அணி ஒரு நாள் தொடரையும் கைப்பற்றியது. 3வது ஒரு நாள் போட்டி நாளை மறுநாள்( அக்.,25) நடக்கிறது.