உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / வெடித்துச்சிதறிய பாலி எரிமலை: சர்வதேச விமான சேவை ரத்து

வெடித்துச்சிதறிய பாலி எரிமலை: சர்வதேச விமான சேவை ரத்து

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பாலி: இந்தோனேசியாவின் பிரபல சுற்றுலாத்தலமான பாலியில் எரிமலை வெடித்து குமுறத் தொடங்கியுள்ளது. இதையடுத்து அங்குள்ள விமான நிலையத்தில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.இந்தோனேசியா நாட்டின் முக்கிய சுற்றுலாத் தலம் பாலி. உலகம் முழுவதும் இருந்து இங்கு சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். இங்கு லெவோடோபி லகி லகி என்ற 1703 மீட்டர் உயரம் கொண்ட இரட்டை சிகரம் கொண்ட எரிமலை உள்ளது. இந்த எரிமலை நேற்று இரவு முதல் வெடித்துக் குமுறி வருகிறது. எரிமலையில் இருந்து கரும் சாம்பல் வெளியேற்றப்பட்டு வருகிறது.சுற்று வட்டாரத்தில் 8 கிலோமீட்டர் துாரத்துக்கு சாம்பல் வெளியேறி வருகிறது. இதையடுத்து, பாலி விமான நிலையத்துக்கு செல்லவிருந்த 7 சர்வதேச விமானங்கள், ரத்து செய்யப்பட்டன. மேலும் பல விமானங்கள், தாமதம் செய்யப்பட்டுள்ளன. உள்ளூர் விமான நிலையம், எரிமலை சாம்பலால் பாதிக்கப்படாவிட்டாலும், முன்னெச்சரிக்கையாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கடந்தாண்டு நவம்பரில் இந்த எரிமலை கொந்தளித்ததால், 7 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Petchi Muthu
மார் 21, 2025 15:42

இந்த மலைக்கு நான் போயிருக்கேன்.. ஆனா சொல்லிக்கிற மாதிரி எதுவும் இல்லை... சும்மா சுற்றுலா பயணிகளும் வாராங்க போறாங்க


புதிய வீடியோ