உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / பலுசிஸ்தான் விடுதலை படை பயங்கரவாத அமைப்பு; அமெரிக்கா அறிவிப்பு

பலுசிஸ்தான் விடுதலை படை பயங்கரவாத அமைப்பு; அமெரிக்கா அறிவிப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வாஷிங்டன்: பலுசிஸ்தான் விடுதலை படை, மஜீத் படைபிரிவை பயங்கரவாத அமைப்புகள் என்று அமெரிக்கா பகிரங்கமாக அறிவித்துள்ளது. பாகிஸ்தானில் கனிமவளம் நிறைந்த மலைகள் கொண்டது பலுசிஸ்தான் மாகாணம். இதை தங்களின் தனி நாடாக அறிவிக்க வேண்டும் என்று கோரி பலுசிஸ்தான் விடுதலை படை அந்நாட்டுக்கு எதிராக தாக்குதல்களில் ஈடுபட்டு வருகிறது.2024ம் ஆண்டு பாகிஸ்மான் கராச்சி விமான நிலையம், குவெட்டா ஆகிய இடங்களில் பலுசிஸ்தான் விடுதலை படை தற்கொலைப் படை தாக்குதல் நடத்தியது. இது தவிர குறிப்பிட்ட இடைவெளியில் பாகிஸ்தான் ராணுவத்திடமும் சண்டையிட்டு வருகிறது. இந் நிலையில் தொடர் வன்முறை தாக்குதல்களை அடுத்து, பலுசிஸ்தான் விடுதலை படை மற்றும் அதன் மற்றொரு பெயரான மஜீத் படைப்பிரிவை பயங்கரவாத அமைப்பாக அமெரிக்கா அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது.அந்நாட்டின் வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ இந்த அறிவிப்பை செய்திக்குறிப்பு மூலம் வெளியிட்டு உள்ளார். அதில் அவர் கூறி உள்ளதாவது; பலுசிஸ்தான் விடுதலை படையின் வன்முறை நடவடிக்கைகள் மக்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக உள்ளன. மேலும், பிராந்தியத்தின் ஸ்திரத்தன்மையை சீர்குலைத்தும் வருகின்றன. வெளியுறவுத்துறையின் இந்த நடவடிக்கை பயங்கரவாதத்தை எதிர்க்கும் அதிபர் டிரம்ப் நிர்வாகத்தின் உறுதிப்பாட்டை நிரூபிக்கிறது. பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு எதிரான ஆதரவை குறைப்பதற்கு இதுவே ஒரு சிறந்த வழி.இவ்வாறு அவர் கூறி உள்ளார்.பாகிஸ்தான் ராணுவ தளபதி, ஒரு மாத இடைவெளியில் இரண்டு முறை அமெரிக்கா சென்ற நிலையில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 30 )

Narayanan
ஆக 13, 2025 13:30

இன்றைய நிலையில் அமெரிக்காதான் பயங்கரவாத நாடாகத் தெரிகிறது . சர்வாதிகார அமைப்பாக செயல்படுகிறது


ManiMurugan Murugan
ஆக 12, 2025 22:43

பாகிஸ்தான் வளர்க்கும் பயங்கரவாதத்தை கண்டுக் கொள்ளாத அமெரிக்கா பலுசிஷ்தானை மட்டும் கண்டிப்பது ஏன் கனிமவளத்தை சுரண்டவா


Rathna
ஆக 12, 2025 17:05

லிபியா, ஈராக், ஆப்கானிஸ்தான், சிரியா போன்று உலகில் ஒழுங்காக இருந்த மூர்க்க நாடுகளை தீவிரவாதத்தை பரப்பி, பிரச்னையை கிளப்பி, ஏழ்மையை உண்டாக்கி, சிறுபான்மையினர் கொலை செய்யப்பட காரணமானது அமெரிக்கா என்னும் தீவிரவாத தேசம். ISIS அமைப்பை உண்டாக்கியது அமெரிக்கா. பாக்கிஸ்தான் என்னும் மிக பெரிய தீவிரவாத அமைப்பை நாடு என்ற போர்வையில் தீவிரவாதத்தை பரப்ப உண்டாக்கியது அமெரிக்கா. ஒசாமா பின் லாடெனை உண்டாக்கி, தன் நாட்டில் பல்லாயிரம் பேரை கொல்ல காரணமானது அமெரிக்கா.


A.Kennedy
ஆக 12, 2025 15:29

பலுசிஸ்தான் போராட்டக்காரர்களை தீவிரவாதிகள் என்று அறிவிக்கும் அமெரிக்காக ஏன் பாகிஸ்தானை தீவிரவாத நாடாக அறிவிக்க மறுக்கிறது. பாகிஸ்தானில் இருப்பவர்கள் தீவிரவாதிகள் இல்லாமல் தியாகிகளாக அமெரிக்காவுக்கு தெரிகிறதா?


Narayanan
ஆக 13, 2025 13:35

ட்ரம்ப் சொல்கிறார், பாகிஸ்தானும் அமெரிக்காவும் இணைந்து பயங்கரவாத அமைப்புகளை அழிக்குமாம்


Sivagiri
ஆக 12, 2025 14:27

டோட்டலா , அமெரிக்கா , பாகிஸ்தானின் பக்கம் திரும்பி விட்டது . . . எதிரிக்கு எதிரி நண்பன் போல . . . பிராந்திய அரசியல் , இது இந்தியாவிற்கு செக் வைக்க மட்டும் அல்ல . . சீனா , ரஷ்ய , கோரியன்ஸ் எல்லோருக்கும் செக் வைக்கும் மூவ்மெண்ட் . . .


Ganapathy
ஆக 12, 2025 14:25

டெக்ஸாஸ் மாநிலத்தை அதன் பூர்வகுடிகளிடமிருந்து பிரித்து ஆக்கிரமித்துள்ள அமெரிக்க அரசு இந்த இலக்கணத்தில் வரவில்லையா?


ஆரூர் ரங்
ஆக 12, 2025 14:15

பயங்கரவாத லேபிள், பட்டம் பெறாமல் தப்பிக்க பெரியண்ணன் தயாரிப்பு ஆயுதங்களை மட்டுமே பயன்படுத்துங்கள்.


V K
ஆக 12, 2025 12:42

அமெரிக்காவே ஒரு பயங்கரவாத நாடு இதில் வேறு அடுத்தவனை பயங்கரவாதி சொல்கிறான் அமெரிக்கா தாம் எதோ அதி மேதாவி என்று நினைத்து கொண்டு இருக்கான் ஆனால் இப்பொழுது நிலமை வேறு


Madras Madra
ஆக 12, 2025 12:34

எல்லாம் பலுசிஸ்த்தானில் இருக்கும் கனிம வளங்களை குறி வைத்துதான் அமெரிக்கா இன்னும் பழைய கால தந்திரங்களையே செய்து கொண்டிருக்கிறது கூட்டணி பக்கி


Nathan
ஆக 12, 2025 12:28

பலூசிஸ்தான் விடுதலை அமைப்பு தனது ஆக்கிரமிக்கப்பட்ட நிலத்தை மீட்க போராடும் விடுதலை போராட்ட அமைப்பு தான் அமெரிக்கா போன்ற ஆக்கிரமிப்பாளர்கள் மண்ணின் மைந்தர்களை கொன்று குவித்த தீவிரவாத கும்பல் இந்த அமெரிக்க வாழ் ஆங்கிலேயர்கள். யார் யாரை தீவிரவாத அமைப்பு ஆக சொல்ல தகுதியானவன் என்று இந்த உலகமே அறியும். மானங்கெட்ட அமெரிக்க அதிபர் இருக்கும் வரை இதுபோன்ற கூத்து நடக்கும் . இந்த லட்சணத்தில் இவருக்கு நோபல் பரிசு வேண்டுமாம்.


சமீபத்திய செய்தி