உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / ஒரு வாழைப்பழத்தின் விலை ரூ.52 கோடி!

ஒரு வாழைப்பழத்தின் விலை ரூ.52 கோடி!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

நியூயார்க்: அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள ஏல மையத்தில் சுவற்றில் டேப் மூலம் ஒட்டப்பட்டிருந்த வாழைப்பழம் ரூ.52.35 கோடிக்கு ஏலம் போனது. இது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.டேப் மூலம் சுவரில் ஒட்டிய வாழைப்பழத்தை, இத்தாலியை சேர்ந்த மொரிசியோ கட்டெலன் என்பவர் வடிவமைத்தார். முதலில் 2019ம் ஆண்டு மியாமி நகரில் உள்ள கலைப்பொருள் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டு இருந்தது. அப்போது பலரின் கவனத்தை இது ஈர்த்தாலும் விலை போகாமல் இருந்தது. தற்போது நியூயார்க் நகரின் சவுத்பே ஏல மையத்தில் ' காமெடியன்' என்ற தலைப்பில் வைக்கப்பட்டு இருந்த இந்த வாழைப்பழம் கவனத்தையும், விமர்சனத்தையும் பெற்றது.இதனை உருவாக்கிய மொரிசியோ கட்டெலன் கூறுகையில் , இந்த ' காமெடியன்' அடிப்படை சாரம்சம் அதன் கருத்தில் தான் அமைந்துள்ளதே தவிர வாழைப்பழத்தில் அல்ல. இதனை வாங்குபவர்கள், வாழைப்பழத்தையும் டக் டேப்பை மட்டும் வாங்கவில்லை. அதனை மறு உருவாக்கம் செய்யும் அறிவுசார் உரிமையையும் பெறுகின்றனர் என்றார்.இந்த வாழைப்பழத்தை கிரிப்டோகரன்சி நிறுவனத்தை சேர்ந்த ஜஸ்டின் சென் என்பவர் 6.2 மில்லியன் டாலருக்கு ( இந்திய மதிப்பில் ரூ.52.35 கோடி) ஏலத்தில் எடுத்து உள்ளார்.இது தொடர்பாக அவர் கூறியதாவது; இது வெறும் கலைப்படைப்பு அல்ல. கலை, மீம் மற்றும் கிரிப்டோ கரன்சி உலகை ஒன்றிணைக்கும் விஷயம். இந்த வாழைப்பழமானது இன்னும் நிறைய சிந்தனையை தூண்டுவதுடன், எதிர்காலத்தில் விவாதத்தை கிளப்பும். வரலாற்றின் ஒரு அங்கமாக இருக்கும். இந்த வாழைப்பழத்தின் உரிமையாளர் என்ற முறையில் நான் பெருமை கொள்கிறேன். இது உலகம் முழுவதும் உள்ள கலை ஆர்வலர்களுக்கு மேலும் உத்வேகத்தையும் தாக்கத்தையும் ஏற்படுத்தும் என நம்புகிறேன். வரும் நாட்களில் இந்த வாழைப்பழத்தை நானே சாப்பிடுவேன். இவ்வாறு அவர் கூறினார்.ஒரு வாழைப்பழம் ரூ.52.35 கோடிக்கு ஏலம் போனது உலகின் பல முன்னணி கலைஞர்களின் கவனத்தை பெற்றுள்ளது. அவர்கள், இந்த கலை பொருட்களுக்கான விலையானது அதனை உருவாக்கியவர் கூறியது அல்ல. அதில் உள்ள பொருட்களுக்கானது அல்ல. இந்த விலை, அது பிரதிபலிக்கும் சிந்தனைக்கானது எனக்கூறுகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

பேசும் தமிழன்
நவ 22, 2024 09:00

இது என்னடா..... கவுண்டமணி செந்தில் வாழைப்பழ காமெடியை விட பெரிதாக இருக்கிறது..... ஒரு வாழைப்பழம் 52 கோடியா.... உலகம் முழுவதும் எங்கே போய் கொண்டு இருக்கிறது ???


Mohan
நவ 21, 2024 19:06

மக்களே உஷார். கிரிப்டோ கரன்சியில் இந்த சீனர்கள் பயங்கரமாக ப்ராடு பண்ணுகிறார்கள். கறுப்பு பணத்தை பதுக்கறதுக்கு உதவ ஆரம்பிச்ச இந்த """மெய்நிகர் நாணயம்"""பல்லு உடையுது அர்த்தம் விளங்கல இப்போ நூற்றுக்கணக்குல வந்து விட்டது. அப்படியும் முக்கால்வாசி பணம் ப்ராடு பண்ற சீனர்களூம் ஜெர்மானியர்களும் கொள்ளை அடிச்சிடுராங்க. முதல்ல வந்த ""பிட் காயின்"" என்கிற கிரிப்டோ கரன்சி இன்றைய விலை..காயின் ஒன்று $85000 டாலருக்கும் மேல...நீங்க வாங்கி வச்சிறுக்கிற அக்கவண்டிலிருந்து என்னிக்கு அபேஸ் ஆகும்கறது யாருக்கும் தெரியாது. ""மைனிங்"" அகழ்வாராய்ச்சி பண்ணுறேன்னு சொல்லி நைசாக சிக்கறதை எல்லாம் அபேஸ் பண்ணிடுவாங்க. வாங்குன நாம நடுத்தெருவுக்கு போக வேண்டியது தான். கொள்ளை அடிச்ச பணத்துல வாழப்பழம் மட்டுமா வாங்குவான் ???


Satish
நவ 21, 2024 18:59

Potential Money Laundering activity.


Anbuselvan
நவ 21, 2024 17:39

ஒன்னு இங்கே இருக்கு இன்னொன்னு. டேய்


என்றும் இந்தியன்
நவ 21, 2024 17:31

இந்த வாழைப்பழம் இன்னொரு ஏலத்தில் இரண்டு வருடங்களுக்குப்பிறகு ரூ 62 கோடிகளுக்கு போகும் அதாவது இரண்டு வருடத்தில் ரூ 10 கோடி லாபம் என்று வரும் அவ்வளவு தானே இதனால் ஒரு பைசா பிரயோஜனம் நாட்டு மக்களுக்கு இல்லவே இல்லை


R Ravikumar
நவ 21, 2024 16:42

வேலை வெட்டி இல்லாத மோசடி மக்கள்


வைகுண்டேஸ்வரன்
நவ 21, 2024 16:31

பணத்துக்கு என்ன செய்வது என்று ஒரு பெரும் பகுதி மக்கள். பணத்தை வெச்சிண்டு என்ன செய்வது என்று ஒரு சிறிய பகுதி மக்கள்.


இளந்திரயன், வேலந்தாவளம்
நவ 21, 2024 16:23

அளவு கடந்து பணம் சேரும் போது இப்படி கோமளித்தனமான எண்ணங்கள் வரும்


RAVINDRAN.G
நவ 21, 2024 16:00

முடியல .பைத்தியம் பிடிக்க வைச்சுருவாங்க போல.


பட்டினத்தார் , மலையும் மலை சார்ந்த பகுதி
நவ 21, 2024 15:51

இனிமேல் யாராவது கவுண்டமணி செந்தில் வாழைப்பழ காமெடியை நையாண்டி செய்வீர்கள்?...


முக்கிய வீடியோ