உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / டுவிஸ்ட் ...! ஷேக் ஹசீனாவின் உறவினரா வங்கதேச ராணுவ தளபதி...? யப்பா.. இதுதான் ஸ்கெட்ச்..!

டுவிஸ்ட் ...! ஷேக் ஹசீனாவின் உறவினரா வங்கதேச ராணுவ தளபதி...? யப்பா.. இதுதான் ஸ்கெட்ச்..!

டாக்கா; பிரதமர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு நாட்டை விட்டு தப்பி ஓடிய ஷேக் ஹசீனாவின் உறவினர் தான் ராணுவ தலைமை தளபதி வாக்கர் உஸ் ஜமான் என்ற புதிய தகவல் சர்வதேச அரசியல் அரங்கை அதிர வைத்துள்ளது.

அரசியல் நெருக்கடி

வங்கதேச அரசியல் நெருக்கடி உலக நாடுகளை உற்று பார்க்க வைத்துள்ளது. அண்டை நாடான இந்தியாவும் அங்கு நிலவி வரும் அரசியல் சூழல்களை உன்னிப்பாக கவனித்து வருகிறது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=14jeaa7r&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0

புதிய தகவல்

இப்படி ஒரு இடியாப்ப சிக்கல் வருமா? என்று எதிர்பாராத தருணத்தில் வங்கதேசம் தொங்கல்தேசமாக மாறிவிட்டது என்று அரசியல் விமர்சகர்கள் கருத்துகளை விமர்சனங்களாக பொது ஊடகத்தில் முன்வைத்துக் கொண்டு இருக்க, வேறு ஒரு புதிய தகவல் அனைத்தையும் பின்னோக்கி நகர்த்தி வைத்துள்ளது.

அந்த 45 நிமிடங்கள்

அதிகாரமிக்க ஒரு பிரதமரையே நாட்டை விட்டு போகுமாறு சொல்லிய வங்கதேச ராணுவ தலைமை தளபதி வாக்கர் உஸ் ஜமான் யார்? என்ற தகவல் வெளியாகி இருக்கிறது. 45 நிமிடங்கள் மட்டுமே உங்களுக்கு தரப்பட்டு உள்ளது என்று ஷேக் ஹசீனாவுக்கு கெடு விதித்த அவர் வேறு யாருமல்ல... நாட்டை விட்டு தப்பி ஓடிய ஷேக் ஹசீனாவின் உறவினர் என்பதுதான் உலக நாடுகளை மொத்தமாக அதிர்ச்சிக்கு ஆளாக்கி உள்ளது.

ஹசீனா உறவினர்

கிட்டத்தட்ட 30 ஆண்டுகள் அனுபவம் மிக்க வாக்கர் உஸ் ஜமான், 1966ம் ஆண்டு டாக்காவில் பிறந்தவர். லண்டனில் உயர்கல்வி பயின்ற அவர், ராணுவ ஜெனரல் முகமது முஸ்தாபிசுர் ரகுமான் மகளை திருமணம் முடித்தார். முகமது முஸ்தாபிசுர் ரகுமான், முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு மாமா உறவுமுறையை கொண்டவர்.

2 மாதங்களில் சிக்கல்

3 ஆண்டுகால வங்கதேசத்தின் ராணுவ தலைமை தளபதியாக, கடந்த ஜூன் மாதம் 23ம் தேதி தான் பொறுப்பேற்றார். அவர் பதவிக்கு வந்த 2 மாதங்களுக்குள் எதிர்பாராத அரசியல் சிக்கல்கள் எழுந்து இருக்கின்றன. ஷேக் ஹசீனாவின் உறவினர் என்ற தகவலும், அவரின் செயல்பாடுகள் பற்றியும் இணைய ஊடகங்களில் செய்திகள் பரவி இருக்க, வேறு விதமான கருத்துகளும் முன் வைக்கப்பட்டு வருகின்றன.

தப்பியோட்டம்

ஹசீனாவின் உறவினர் என்பதாலேயே, கடும் நெருக்கடியில் இருந்து அவரை காப்பாற்ற பிரதமர் பதவியை ராஜினாமா செய்ய சொல்லி வலியுறுத்தி இருக்கிறார், நாட்டில் இருந்த தப்பியோடவும் உதவியாக இருந்திருக்கிறார் என்றும் கூடுதல் தகவல்கள் வெளியாகி உள்ளன.

சாதகமில்லை

உறவினர் என்பதை நம்பியே ராணுவ தலைமை தளபதியாக ஜமான் நியமிக்கப்பட்டார் என்றும், ஆனால் ஹசீனாவின் முதுகில் குத்தி விட்டார் என்றும் ஒரு தகவல் அந்நாட்டினர் மத்தியில் பரவி வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

நிக்கோல்தாம்சன்
ஆக 06, 2024 19:42

அங்கிருந்து வரும் பன்றிகள் இந்தியாவை நாறடிக்க போகிறது


Mohanakrishnan
ஆக 06, 2024 16:43

இங்கு உள்ள திருட்டு மாடல் கூடிய விரைவில் பல உருட்டல்களை ஊளையிட்டு குரைக்கும்


Kumar Kumzi
ஆக 06, 2024 16:32

மூர்க்கம் எப்போதும் மாற்று மதத்தவர்களின் முதுகிலே தான் குத்தும் இப்போது மூர்க்க முதுகுலேயே குத்தும் அளவுக்கு வெறித்தனம் முற்றிவிட்டது


MUTHU
ஆக 06, 2024 16:20

ராணுவம் கொண்டு மாணவர்களை கட்டுப்படுத்த ஹசீனா கூறியபொழுது ராணுவ தளபதி அவ்வண்ணம் கட்டளையிடவில்லை என்பதே உண்மை. இது அவர்களின் எதிர்கால வங்காள தேசத்தை எவ்வாறு உருவாக்க வேண்டும் என்பதின் முதல் படியாகவே பார்க்கப்படுகின்றது. செக்குலர் நாடு என்பது மறைந்து விடும்


தத்வமசி
ஆக 06, 2024 16:01

மேல் மட்ட அரசியலில் என்ன நடக்கிறது என்பது தெரியாமல் இடியாப்ப சிக்கலில் மாட்டிக் கொண்டுள்ளது வங்கதேசம். அதற்கு மக்கள் புரட்சி என்கிற பெயரில் ஒரு கூட்டம். ஒரு பக்கம் சீனா மறுபக்கம் அமேரிக்கா என்று இருவருக்கு இடையில் மாட்டிக் கொண்டுள்ளது வங்கதேசம் என்பதை அறியாமல் ராணுவத் தளபதி பதவி ஆசையில் ஹசீனாவை விரட்டி உள்ளார். இனி வங்கதேசம் பிழைக்குமா என்றால் அது இந்தியாவை சார்ந்து இருந்தால் மட்டுமே நடைபெறும். இல்லையென்றால் சுரண்டப்படும். மக்கள் தொகை அதிகம், கல்வி அறிவு குறைவு, வேலைவாய்ப்பின்மை எல்லாம் மிக அதிகம். இதை எந்த அரசும் நிறைவேற்ற முடியாது. ஆனால் அங்குள்ள வளங்கலை சுருட்டவும், இந்தியாவுக்கு கடிவாளம் போடவும், அச்சுறுத்தவும், கண்காணிக்கவும் வங்கதேசம் பயன்படும். பாகிஸ்தான், நேபாளம், இலங்கை, மாலத்தீவு வரிசையில் வங்கதேசம்.


ஆரூர் ரங்
ஆக 06, 2024 15:15

முகலாய வம்சத்தில் கூட பெற்ற அப்பா அண்ணன் தம்பிகளை அனுப்பி வைத்து விட்டுதான் அரியணை ஏறியது அதிகம்.


Sivaprakasam Chinnayan
ஆக 06, 2024 15:11

அரசியலில் இதெல்லாம் சாதாரணமப்பா


karthik
ஆக 06, 2024 13:32

வங்கதேச எடப்பாடி போல


Ramesh Sargam
ஆக 06, 2024 13:03

வீட்டு சிக்கலில் நன்றாக சிக்கிக்கொண்டது வங்கதேசம். இதை அப்படியே சினிமா படமா தயாரித்தால்...??


Anand
ஆக 06, 2024 12:42

மூர்க்கம் எப்பவுமே முதுகில் குத்தும் எண்ணம் கொண்டது, முதலில் அடுத்தவர்களை குத்தும், அது முடிந்ததும் தன்னோட கும்பலை குத்தும், பிறகு குடும்பத்தை குத்தும், கடேசியில் தனக்கு தானே குத்திக்கொள்ளும்.


தமிழ்வேள்
ஆக 06, 2024 14:00

அதுதான் திருமறையில் , ஹதீஸ்களிலும் சொல்லப்பட்ட ஜிஹாத் ....


மேலும் செய்திகள்









புதிய வீடியோ