உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / சீனாவின் கடன் வலையில் வங்கதேசம்: இந்தியாவுக்கு புதிய தலைவலி

சீனாவின் கடன் வலையில் வங்கதேசம்: இந்தியாவுக்கு புதிய தலைவலி

டாக்கா: பொருளாதார நெருக்கடியில் தவிக்கும் பாகிஸ்தானுக்கு கடன் வழங்கி சீனா எவ்வாறு அந்நாட்டை தன் செல்வாக்கின் கீழ் வைத்துள்ளதோ, அதே போல் வங்கதேசத்தையும் தன் கடன் வலையில் விழச்செய்து, இந்தியாவுக்கு குடைச்சல் தர முயற்சிக்கிறது.நம் அண்டை நாடான சீனா, நம் நாட்டின் உலகளாவிய செல்வாக்கை கட்டுப்படுத்துவதற்கும், ஆசியாவில் தன் ஆதிக்கத்தை உறுதிப்படுத்துவதற்கும் பல்வேறு முயற்சிகளை நீண்ட காலமாக எடுத்து வருகிறது. அதில் தற்போது கடன் உத்தியை கையில் எடுத்துள்ளது.இது குறித்து அரசியல் நிபுணர்கள் கூறியுள்ளதாவது: முதலில் பாகிஸ்தான் மற்றும் இலங்கையை சீனா தன் கடன் வலையில் வீழ்த்தியது. ஆனால் கொரோனா காரணமாக இரு நாட்டின் பொருளாதார நிலைமைகளும் மோசமடைந்தன. இலங்கை கடனை திருப்பி தர முடியாத நிலைக்கு தள்ளப்பட்டது. பாகிஸ்தான் ஐ.எம்.எப்., எனப்படும் சர்வதேச நிதியத்தின் கடனுதவியை பெற்று தற்போது அரசை நடத்தி வருகிறது.சீனாவிடம் பாகிஸ்தான் பெற்ற கடனை அடைக்க 40 ஆண்டுகள் ஆகும் என உலக வங்கி தெரிவித்துள்ளது. அதுவரை பாகிஸ்தான் மீதான பிடியை சீனா விடாது. அந்நாட்டை இந்தியாவுக்கு எதிராக தேவையான சமயங்களில் பயன்படுத்தும்.கடந்த ஏப்ரலில் நடந்த பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தான் மீது நம் ராணுவம் துல்லிய தாக்குதல் நடத்தியது. பதிலுக்கு பாகிஸ்தானும் தாக்கியது. இந்த தாக்குதலில் பாகிஸ்தானுக்கு சீனா, ராணுவ உதவிகளை வழங்கியது.இந்தியா - பாகிஸ்தான் மோதலை சீனா தன் ஆயுதங்களை சோதிக்கும் களமாக பயன்படுத்தியதாகவும் தகவல் வெளியானது. ஆனால் இந்த குற்றச்சாட்டுகளை சீனா மறுத்துள்ளது.இந்நிலையில், நம் மற்றொரு அண்டை நாடான வங்கதேசத்தில், முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு எதிரான மாணவர் போராட்டத்தால், கடந்தாண்டு ஆகஸ்ட் 5ல் அவரது ஆட்சி கவிழ்ந்தது. அவர் இந்தியாவுடன் நல்ல நட்புறவை பேணியவர். அவர் பதவி இழந்து இந்தியாவில் தஞ்சமடைந்தார்.நோபல் பரிசு வென்ற பொருளாதார நிபுணர் முகமது யூனுஸ் தலைமையில் தற்போது அங்கு இடைக்கால அரசு அமைந்துள்ளது. இங்கு உள்ள மக்களின் எண்ண ஓட்டம் குறித்து பிரிட்டனின் சர்வதேச உறவுகளுக்கான ராயல் சொசைட்டி நிறுவனத்தின் கீழ் செயல்படும் சாதம் ஹவுஸ் கருத்துக் கணிப்பை நடத்தியது. அதில் 75 சதவீத மக்கள் சீன ஆதரவு மனநிலையில் உள்ளனர். 11 சதவீதம் பேர் மட்டுமே இந்திய ஆதரவு மனநிலையில் இருப்பது தெரியவந்தது.இந்தியாவுக்கும் பாகிஸ்தான் மற்றும் வங்கதேசம் இடையேயான சச்சரவுகள் மேம்போக்காக பார்த்தால் இரு தரப்பு உறவுகளில் ஏற்பட்ட பிரச்னை போல் தோன்றும். ஆனால் அதை ஆராய்ந்தால் அதில் சீனாவின் கைவண்ணம் இருப்பது தெரியவருகிறது.அதற்கு ஏற்ப வங்கதேச அரசின் தலைமை ஆலோசகர் முகமது யூனுஸ், சீனா மற்றும் பாகிஸ்தான் ஆதரவு நிலைப்பாட்டை எடுத்து வருகிறார். கடந்த, 1971ல் பாகிஸ்தானில் இருந்து தனிநாடாக பிரிந்த பின், முதன் முறையாக பாகிஸ்தான் உடன் வர்த்தக உறவை ஏற்படுத்தியுள்ளார்.வங்கதேசத்தின் பொருளாதாரம் மோசமடைந்துள்ளதால் சீனாவிடம் தொடர்ந்து கடன் பெற்று வருகின்றனர். சீனாவிடம் இருந்து 2023 வரை, 51,000 கோடி ரூபாயை வங்கதேசம் பெற்றுள்ளது. இந்தாண்டு மார்ச் மாதம் 17,500 கோடி ரூபாய் பெற்றுள்ளனர். இதை 30 ஆண்டுகளுக்குள் திருப்பிச் செலுத்த வேண்டும். இதன் வாயிலாக வங்கதேசத்தையும் தன் செல்வாக்கின் கீழ் சீனா கொண்டு வந்துள்ளது.தற்போது சீனா, பாகிஸ்தான், வங்கதேசம் ஆகிய மூன்று நாடுகளும் ஒன்றிணைந்து செயல்பட துவங்கியுள்ளன. கடந்த ஜூன் 19ல் சீனாவின் குன்மிங் பகுதியில் மூன்று நாட்டு பிரதிநிதிகளும் சந்தித்தனர். நம் நாடு முக்கிய பங்கு வகித்த சார்க் அமைப்பு, 2016ல் ஜம்மு காஷ்மீரின் உரியில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பின் செயலிழந்தது. அதற்கு இணையான ஒரு அமைப்பை உருவாக்குவது குறித்து சீனாவில் நடந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டுள்ளது.இந்த மூன்று நாடுகள் அமைப்பில் மேற்கு ஆசிய நாடான துருக்கியும் இணைந்துள்ளது. ஆப்பரேஷன் சிந்துார் நடவடிக்கையின் போதே பாகிஸ்தான், துருக்கி வழங்கிய ட்ரோன்களை நம் நாட்டின் மீது ஏவியது.இந்நிலையில், வங்கதேசத்துடன் ராணுவ ஒப்பந்தம் தொடர்பான பேச்சில் துருக்கி ஈடுபட்டுள்ளது. வங்கதேசத்தில் மிகக் குறைந்த செலவில் ஆயுதத் தயாரிப்பு ஆலை அமைப்பதே இந்த பேச்சின் நோக்கம். இந்த காரணிகள் அனைத்தும் நம் நாட்டுக்கு பலவீனத்தை உருவாக்கும் அபாயத்தை ஏற்படுத்தி உள்ளன. இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

Ramesh Sargam
ஜூலை 13, 2025 12:46

சீனா, இந்தியாவை நேரடியாக எதிர்க்கப்பயந்து, இப்படி பல தில்லுமுல்லுகள் செய்து இந்தியாவை எதிர்க்கப்பார்க்கிறது. மோடிஜி ஆட்சியில் இருக்கும்வரையில் அது நடக்காது கண்ணா...


Senthoora
ஜூலை 13, 2025 11:05

தனது சகோதர நாடுகள் அயல் நாடுகள். அவர்களுடன் நடப்பு பாராட்டாமல், மக்கள் வரிப்பணத்தில் அலையா விருந்தாளியாக சுற்றுப்பயணம் போய் , அங்கே உங்க பண்ணத்தி கொட்டினால் இதுதான் நாடகும்.


Ragupathi
ஜூலை 14, 2025 14:06

தீவிரவாதிகளோடு எப்படி நட்பு பாராட்டுவது செந்தூரா. பாம்புக்கு என்னதான் பால் வார்த்தாலும் அது விஷத்தை தான் கக்கும். அடிச்சிதான் கொல்லனும் ஏனேன்றால் அவர்கள் இந்திய நாடு அழிய வேண்டும் என்று என்னுபவர்கள்.


நிக்கோல்தாம்சன்
ஜூலை 13, 2025 07:57

பாக் , வங்கதேசம் இரு நாடுகளும் முதுகில் குத்துவோரை அதிகமாக கொண்ட நாடு என்பதனை தவிர வேறெதுவும் பொதுவாக இல்லை


SUBBU,MADURAI
ஜூலை 13, 2025 09:59

நீங்கள் சொன்ன அந்த இரண்டு நாடுகளில் உள்ளவர்கள் நமக்கு எதிரி மற்றும் துரோகிகளாக இருந்தாலும் அவர்கள் நாட்டுக்கு விசுவாசமாக இருப்பார்கள். ஆனால் நம் நாட்டின் சோற்றை தின்று விட்டு நமது முதுகில் குத்தும் துரோகிகள் நம் நாட்டில் அதிகம் பேர் உள்ளனர்.


SUBBU,MADURAI
ஜூலை 13, 2025 07:35

The Bangladesh Army Chief is examining all possible measures to oust Muhammad Yunus from his unelected position of power.


R SRINIVASAN
ஜூலை 13, 2025 06:55

தனிப்பட்ட முறையில் தமிழக மக்கள் மோடிஜியை தங்கள் தெய்வமாக மதிக்கிறார்கள். இந்தியாவை காப்பாத்தற வந்த கடவுளாக நினைக்கிறார்கள்.


Iyer
ஜூலை 13, 2025 06:25

 சீனாவின் தாக்குதல் விமானங்களோ - ANTI MISSILE SYSTEM களோ - ஒரு கூறுக்கும் உதவாதவை TOTAL FAILURE என்று OPERATION SINDOOR ன் பொது நிரூபணம் ஆகி உள்ளது.  இந்தியாவின் BRAHMOS, மற்றும் ANTI MISSILE SYSTEM மிகவும் வெற்றிகரமாக தன் இலக்கை சாதித்து உள்ளன. BEST IN THE WORLD  சீன, பங்களாதேஷ், பாக்கிஸ்தான் என்ன - இன்னும் 3 நாடுகள் வந்தாலும் இந்தியாவை பாதிக்காது  . ஆனால் இந்தியாவுக்குள் உள்ள தேசதுரோகிகளை ஒழித்துக்கட்ட மோதி சர்க்கார் தீவிர நடவடிக்கை எடுக்கணும்.


Iyer
ஜூலை 13, 2025 06:16

ரஷ்யாவைப்போல் சீனாவையும் 15-20 துண்டுகளாக உடைக்க சதி நடந்துகொண்டு இருக்கிறது. சீனா உடைந்தால்தான் உலகம் சுபீக்ஷம் அடையும்.


Iyer
ஜூலை 13, 2025 06:13

சீனாவுடன் சேர்ந்த எந்த நாடும் இதுவரை உறுப்பட்டதாக சரித்திரம் இல்லை. இலங்கை, மாலேடிவ்ஸ், பாக்கிஸ்தான், பங்களாதேஷ், இன்னும் பல ஆப்பிரிக்கா நாடுகள் - எல்லாமே கடன் தள்ளியில் மாட்டி பொருளாதார சீரழிவு அடைந்தன.


Kasimani Baskaran
ஜூலை 13, 2025 06:10

ஊழல் அரசியல் போல கடனை வைத்து அரசியல் செய்வது சீனாவுக்கு கை வந்த கலை. நல்ல வேளையாக தீம்க்காவால் சீனாவிடம் கடன் வாங்கமுடியாது.


சுந்தர்
ஜூலை 13, 2025 05:11

போதாததற்கு நம்நாட்டிலேயே இந்தியா எதிர்ப்பு சக்திகள் உள்ளன. எதிர்க்கட்சிகள் சிலவும் பதவி ஆசைக்காக மறைமுகமாக சீனாவிற்கு ஆதரவான நிலையை வைத்துள்ளன. நம் மக்கள் இவற்றை புரிந்து கொள்ள வேண்டும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை