உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / ஹசீனாவை நாடு கடத்த வங்கதேசம் தீவிரம்

ஹசீனாவை நாடு கடத்த வங்கதேசம் தீவிரம்

டாக்கா : 'இந்தியாவில் தஞ்சமடைந்துள்ள ஷேக் ஹசீனாவை வங்கதேசம் அழைத்து வருவோம்; தேவையெனில் இதற்காக சர்வதேச நாடுகளின் உதவியையும் நாடுவோம்' என வங்கதேச அரசு தெரிவித்துள்ளது.நம் அண்டை நாடான வங்கதேசத்தில் ஏற்பட்ட மாணவர் போராட்டத்தை தொடர்ந்து பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா பதவியை ராஜினாமா செய்துவிட்டு, நம் நாட்டில் தஞ்சமடைந்தார். இதையடுத்து முகமது யூனுஸ் தலைமையில் வங்கதேசத்தில் இடைக்கால அரசு அமைந்தது. இதையடுத்து முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு எதிராக இனப்படுகொலை மற்றும் ஊழல் வழக்கு பதியப்பட்டது. அவருக்கு எதிராக கைது வாரன்ட்டும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. எனவே அவரை வங்கதேசத்திற்கு திருப்பி அனுப்பும்படி கடந்த ஆண்டே துாதரகம் வாயிலாக மத்திய அரசிடம் அந்நாடு வலியுறுத்தியது. இந்நிலையில், வங்கதேச அரசின் சட்ட ஆலோசகர் ஆசிப் நஸ்ருல் நேற்று செய்தியாளர்களிடம் கூறுகையில், ''ஷேக் ஹசீனாவை வங்கதேசம் அழைத்து வர எங்களால் முடிந்த அனைத்து முயற்சிகளையும் கையில் எடுத்துள்ளோம். ''ஹசீனாவை இந்தியா திருப்பி அனுப்ப மறுத்தால், அது இரு நாடுகளுக்கு இடையிலான ஒப்படைப்பு ஒப்பந்தத்தை மீறும் செயல். இந்த விவகாரத்தில் தேவையெனில் சர்வதேச நாடுகளின் உதவியை நாடுவோம்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Kasimani Baskaran
ஜன 22, 2025 06:41

சிறுபான்மை இந்துக்கள் பாதுகாப்பாக இருப்பார்கள் என்ற நம்பிக்கையில்தான் இந்தியா வங்கதேசத்துக்கு சுதந்திரம் வாங்கிக் கொடுத்து. அதில் மண் விழுந்துவிட்டது. ஆகவே இந்துக்களுக்கு என்று ஒரு நாடு உருவாக்கி அதை இந்துக்களிடம் கொடுத்து விடலாம்.


நிக்கோல்தாம்சன்
ஜன 22, 2025 05:41

உண்மையில் பார்க்கப்போனால் ஏராளமான சிறுபான்மை மக்களை கொன்றதற்காக யூனுஸ் அவர்களை தான் தூக்கில் போடவேண்டும் , இந்துக்கள் , கிருஸ்துவர்கள் என்று பாரபட்சம் இல்லாமல் கற்பழித்து கொல்லப்பட்டுள்ளார்கள் இந்த யூனுஸ் வந்தபிறகு , சர்வதேச ஊடகங்கள் என்ன செய்து கொண்டுள்ளது ?


SUBBU,MADURAI
ஜன 22, 2025 04:29

பங்களாதேஷில் உள்ள கலிதாஜியாவின் பங்களாதேஷ் தேசியவாத கட்சி BNP மற்றும் இந்த ஷேக் ஹஸீனாவின் அவாமி லீக் கட்சி AL இரண்டு தேசிய கட்சிகள்தான் அந்த நாட்டை மாறி மாறி ஆண்டு வருகின்றன. சுருக்கமாகச் சொன்னால் நம்ம ஊர் இரண்டு மட்டைகளான திமுக, மற்றும் அதிமுக போல. கலிதாஜியா திமுக என்றால், இந்த ஷேக் ஹஸீனா அதிமுக. எனவே இந்த ஷேக் ஹஸீனா ஒன்றும் புனிதர் அல்ல இவருடைய ஆட்சிக் காலத்தில்தான் லட்சக் கணக்கான ரோஹிங்கியா முஸ்லீம்களை இந்தியாவின் எல்லை மாநிலங்களின் வழியாக சுலபமாக ஊடுருவ ஏற்பாடு செய்தார். அதன் பலன்தான் சென்னை, கோவை, திருப்பூர், மதுரை உள்ளிட்ட தமிழக மாவட்டங்கள் வரை இந்த வங்கதேச ரோஹிங்கியா முஸ்லீம்கள் ஊடுருவி ஹோட்டல்கள், மால்கள் போன்ற பல வணிக நிறுவனங்களில் வேலை செய்து வருகின்றனர். இவர்கள் வங்காள (பெங்காலி) மொழி பேசுவதால் தங்களை மேற்குவங்கத்தை (நம்ம தீதி மம்தா மாநிலம்) சேர்ந்தவர்கள் என்று கூறிக் கொள்கிறார்கள். ஆனால் உண்மையிலேயே அசாம், மற்றும் மேற்குவங்கத்தை சேர்ந்த நம் இந்தியத் தொழிலாளர்களும் தமிழகத்தில் பணி புரிகிறார்கள் எனவே இவர்களை அடையாளம் காண்பது அரிதான விஷயமாகும். அப்படியிருந்தும் இந்த ரோஹிங்கியாக்களை NIA அமைப்பினர் கண்டுபிடித்து கைது செய்து வருகிறார்கள் என்பதை குறிப்பிட வேண்டும். இந்த ஷேக் ஹஸீனா இந்தியாவிடம் தஞ்சம் கேட்டதால் நாம் தார்மீக அடிப்படையில் அவருக்கு நம் நாட்டில் தங்குவதற்கு அடைக்கலம் அளித்திருக்கிறோம். எனவே அமெரிக்காவின் கைப்பாவையான வங்கதேச இடைக்கால அரசுக்கு தலைமை வகிக்கும் முகம்மது யூனுஸ் கேட்பதால் மட்டும் ஷேக் ஹஸீனாவை அந்த நாட்டிடம் இந்தியா ஒப்படைக்காது. இப்போதுள்ள சூழ்நிலையில் அவரை அந்த நாட்டிடம் ஒப்படைத்தால் அடுத்த நாளே அவரை கொன்று விடுவார்கள் என்பதால் இந்தியா ஷேக் ஹஸீனாவை வங்கதேசத்திடம் ஒப்படைக்க போவதில்லை.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை