மேலும் செய்திகள்
ஐ.நா.,வில் முதல்முறையாக ஹிந்தியில் புத்தாண்டு வாழ்த்து
1 hour(s) ago
டாக்கா: வங்கதேசத்தின் முதல் பிரதமரும், அந்நாட்டு வரலாற்றில் மிக முக்கியமான ஆளுமைகளில் ஒருவருமான பேகம் கலிதா ஜியா, 80, நேற்று காலை காலமானார். நம் அண்டை நாடான வங்கதேசம், அரசியல் நெருக்கடியில் சிக்கி தவித்து வரும் வேளையில், வங்க தேசத்தின் முதல் பெண் பிரதமரும், வங்கதேச தேசியவாத கட்சித் தலைவருமா ன கலிதா ஜியா, நீண்ட நாட்களாக உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். முரண்பாடு இந்நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று காலை மரணமடைந்தார். கடந்த 1945, ஆகஸ்ட் 15ல் பிரிக்கப்படாத இந்தியாவின் ஜல்பைகுரியில் ஒரு நடுத்தர குடும்பத்தில் பிறந்தவர் கலிதா ஜியா. கடந்த, 1959ல் ராணுவ அதிகாரியான ஜியா உர் ரஹ்மானை திருமணம் செய்தார். ரஹ்மான் வங்க தேசத்தின் சுதந்திர போராட்டத்தில் முக்கிய தலைவராகவும், பின் அந்நாட்டின் அதிபராகவும் இருந்தவர். கடந்த, 1981ல் ஜியா உர் ரஹ்மான் படுகொலை செய்யப்பட்ட பின், பிளவுபட்ட நிலையில் இருந்த கட்சியை வழி நடத்த அரசியலில் நுழைந்த கலிதா ஜியா, 1984ல் கட்சி தலைவராக பொறுப்பேற்றார். கடந்த, 1991 - 1996 மற் றும் 2001 - 2006 என, இரு முறை பிரதமராக இருந்தார். வங்கதேசத்தில் கலிதா ஜியாவின் அரசியல் வாழ்க்கை, அவரது அரசியல் எதிரியாக கருதப்படும் அவாமி லீக் கட்சியின் தலைவரான ஷேக் ஹசீனா உடனான போட்டி யால் வரையறுக்கப்பட்டது. கலிதா ஜியாவுக்கு தீவிர தேசியவாத கொள்கையும், இந்தியாவுடன் சில விவகாரங்களில் முரண்பட்ட நிலைப்பாடும் இருந்தது. கல்லீரல் பாதிப்பு மற்றும் இதயம் தொடர்பான நோய்களுக்காக நீண்டகாலம் சிகிச்சை பெற்று வந்தார். வங்கதேச பார்லிமென்டுக்கு, பிப்., 12ல் தேர்தல் நடக்க உள்ள நிலையில், அதில் போட்டியிட, கலிதா ஜியா சார்பில் நேற்று முன்தினம் வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில், அவர் நேற்று அதிகாலை டாக்காவில் உள்ள மருத்துவமனையில் உயிரிழந்தார். இதையடுத்து, வங்கதேச இடைக்கால அரசு கலிதா ஜியாவின் மறைவுக்கு மூன்று நாள் தேசிய துக்கம் அறிவித்துள்ளது. இவரது இறுதி சடங்குகள் இன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் இந்தியா சார்பில், நம் வெளியுறவு அமைச்சர் ஜெய் சங்கர் பங்கேற்கிறார். மோடி இரங்கல் பி ரதமர் மோடி, இரங்கல் செய்தியில் கூறியுள்ளதா வது: வங்கதேசத்தின் முன் னாள் பிரதமரும், பி.என்.பி., கட்சி தலைவருமான பேகம் கலிதா ஜியா காலமான செய்தியறிந்து ஆழ்ந்த வருத்தமடைந்தேன். கலிதா ஜியாவை இழந்து தவிக்கும் அவரது குடும்பத்தினருக்கும், வங்கதேச மக்கள் அனைவருக்கும் இந்தியா சார்பில் ஆழ்ந்த இரங்கல். இவ்வாறு கூறியுள்ளார்.
கலிதா ஜியாவின் மறைவுக்கு, அவருடைய அரசியல் போட்டியாளரான ஷேக் ஹசீனா இரங்கல் தெரிவித்துள்ளார். சிறந்த ஆளுமை என்று கலிதா ஜியாவை பற்றி புகழ்ந்துரைத்த ஹசீனா, அவரின் மறைவு வங்கதேச அரசியல் வாழ்க்கைக்கும், வங்கதேச தேசியவாத கட்சிக்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பு என குறிப்பிட்டுள்ளார்.
1 hour(s) ago