உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / இந்திய பகுதிகளுடன் ரூபாய் நோட்டு: நேபாளம் முடிவால் சர்ச்சை

இந்திய பகுதிகளுடன் ரூபாய் நோட்டு: நேபாளம் முடிவால் சர்ச்சை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

காத்மண்டு: உத்தரகண்ட் மாநிலத்தின் லிபுலேக், லிமிபியதுரா மற்றும் கலபானி பகுதிகளை தனது பகுதியாக சேர்த்து புதிய வரைபடத்துடன் ரூபாய் நோட்டு வெளியிட நேபாளம் முடிவு செய்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.நமது அண்டை நாடான நேபாளம், சிக்கிம், மேற்கு வங்கம், பீஹார், உ.பி., மற்றும் உத்தரகண்ட் மாநிலங்களுடன் எல்லையை பகிர்ந்து கொண்டு உள்ளது. உத்தரகண்ட்டின் லிபுலெக், காலாபானி மற்றும் லிமிபியதுரா ஆகிய பகுதிகளை உரிமை கொண்டாடி வருகிறது. இதனை இணைத்து புதிய வரைபடத்தை நேபாளம் வெளியிட்டது. இதற்கு மத்திய அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளது. தன்னிச்சையாக எடுக்கப்பட்ட முடிவு எனக்கூறியது.இந்நிலையில், இந்த பகுதிகளை கொண்ட வரைபடத்துடன் ரூ.100 நோட்டை அச்சடித்து வெளியிட அந்நாட்டு அரசு ஒப்புதல் அளித்து உள்ளது. பிரதமர் பிரசண்டா தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் புதிய ரூபாய் நோட்டுகளை அச்சடிக்கவும், புதிய வரைபடத்தை சேர்க்கவும் முடிவு செய்யப்பட்டதாக அரசின் செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார். நேபாளத்தின் இந்த முடிவு மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

canchi ravi
மே 04, 2024 15:16

நேபாளத்துக்கு தகுந்த பாடம் கற்பிக்கும் நேரம் வந்துவிட்ட்டது


RAAJA69
மே 04, 2024 14:35

CHINA வின் சதி.


Kumar Kumzi
மே 04, 2024 13:35

நாங்களும் நேபாளத்தை முழுவதுமாக இணைத்துக்கொள்வோம்


தத்வமசி
மே 04, 2024 13:11

மோடி ஆட்சியிலேயே இப்படி இவர்கள் செய்தால், தலைமை சரியில்லாத கூட்டாசியில் என்னவெல்லாம் நடக்கும் ? காங்கிரஸ் ஆட்சியில் சப்பை மூக்கன் நகர்ந்து நகர்ந்து வந்து பல்லாயிரம் சதுர கிலோமீட்டர் நிலங்களை அபகரித்துக் கொண்டான் கல்வானில் உள்ளே நுழைந்து வாங்கி கட்டிக் கொண்டு சென்றது சீனா இப்போது நேபாளம் ஆழம் தெரியாமல் காலை விடுகிறது


Pats, Kongunadu, Bharat, Hindustan
மே 04, 2024 12:47

பரவாயில்லை நாமும் அதே நேபாள் ₹ நோட்டை தாராளமாக அச்சடித்து நேபாளத்தில் விநியோகம் செய்வோம் வேறுவழியின்றி அவர்களே புதிய ₹ நோட்டு செல்லாது என்று அறிவித்து விடுவார்கள்


N Sasikumar Yadhav
மே 04, 2024 12:41

கம்யூனிஸ்டுகள் மற்றும் இஸ்லாமிய பயங்கரவாதிகளுக்கு நாடு அமைதியாக இருந்தால் பிடிக்காது


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை