உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / அமெரிக்க தேர்தலில் வங்க மொழி ஓட்டுச்சீட்டு!

அமெரிக்க தேர்தலில் வங்க மொழி ஓட்டுச்சீட்டு!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வாஷிங்டன்: நாளை நடக்கும் அமெரிக்க அதிபர் தேர்தலில், நியூயார்க் வாக்காளர்களுக்கு வங்க மொழியிலும் ஓட்டுச்சீட்டுகள் வழங்கப்படுகின்றன.இது குறித்து நியூயார்க் தேர்தல் அமைப்பு நிர்வாக இயக்குனர் மிச்செல் ரியான் கூறியதாவது:அமெரிக்க அதிபர் தேர்தலுக்காக, ஆங்கிலம் தவிர, சீனம், ஸ்பானிஷ், கொரியா மற்றும் வங்கம் ஆகிய நான்கு மொழிகளில் ஓட்டுச்சீட்டுகள் அச்சிட்டு வழங்குகிறோம்.ஓட்டுச்சீட்டில் வங்க மொழியைச் சேர்ப்பது வெறும் மரியாதையல்ல, சட்டப்பூர்வமான தேவை. நியூயார்க் நகரில் வசிக்கும் வங்க மொழி பேசும் இந்தியர்கள், வங்க தேசத்தவர் நலன் கருதி இந்த வசதி செய்யப்பட்டுள்ளது.நியூயார்க்கிலும் பல்வேறு மொழி பேசும் மக்கள் உள்ளனர். குறிப்பிட்ட ஒரு எல்லைக்குள் இருக்கும் மக்கள் அடர்த்தியை கருத்தில் கொண்டு வங்காளிகளுக்கு இந்த வசதி செய்யப்பட்டுள்ளது.1965ம் ஆண்டு வாக்களிக்கும் உரிமைச் சட்டத்தின் கீழ் தெற்காசிய சிறுபான்மையினருக்கு மொழி உதவி வழங்குவதற்காக, அமெரிக்கா, அதன் மாகாணங்களுக்கு உத்தரவிட்ட பிறகு வங்க மொழி ஓட்டுச்சீட்டுகளில் சேர்க்கப்பட்டது.அதனை தொடர்ந்து, 2013ம் ஆண்டு முதல் நியூயார்க் குயின்ஸ் பகுதியில் உள்ள தெற்காசிய சமூகம் வங்க மொழியில் மொழிமாற்றம் செய்யப்பட்ட ஓட்டுச்சீட்டுகளை பெற்று வருகிறது.இவ்வாறு ரியான் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

Ram pollachi
நவ 05, 2024 13:51

இங்கு குப்பை கொட்டாதே என்று வங்காள மொழியில் எழுதி இருக்கும் வாசகங்களை கோவை நகர் பகுதியில் பார்க்க முடியும்... அப்படி ஒரு அங்கீகாரம் இங்கே.


rama adhavan
நவ 05, 2024 00:45

அங்கு ஓட்டு சீட்டில் எந்த மொழியும் இருக்காது. அது குறியீடு இட்ட வெள்ளை முழு நீள வெற்று தாள். அதை கணினியில் நுழைத்து அங்கீகரிக்கப்பட்ட மொழியை தேர்வு செய்தால் ஸ்க்ரீன்இல் அந்த மொழி வரும். ஹிந்தி, அரபி உண்டு. தமிழ், தெலுங்கு இல்லை.


Ramesh Sargam
நவ 04, 2024 21:04

தமிழ் மொழியும் சேர்க்கவேண்டும் என்று அங்குள்ள தேர்தல் அதிகாரிகளுக்கு இப்பொழுது தமிழக முதல்வர் கடிதம் எழுதுவார் பாருங்கள்.


GMM
நவ 04, 2024 21:01

அமெரிக்காவில் ஆங்கிலம் தெரியாமல் வாழ முடியாது. அமெரிக்க திராவிடமே அங்கு ஏன் மொழி சச்சரவை உருவாக்கு கின்றாய். வாக்கு சீட்டில் சின்னம் ஆங்கிலம் போதாதா ? உலகெங்கும் ஜனநாயக நாட்டில் மொழி, மதம், இன பிரச்சனை உருவாக்கி தான் அரசியல் செய்ய வேண்டும். ? வங்க மொழிக்கு மம்தா அனுமதி வேண்டாமா? நீங்கள் மாநில தலைமை அமைச்சர், நகராட்சி மேயர், வார்டு கவுன்சிலருக்கு மதிப்பு கொடுத்து சமசீர் அரசியல் புரிபவர்கள். யாருக்கும் வெட்கம் இல்லை. - சோ .


Rpalnivelu
நவ 04, 2024 20:25

கல் தோன்றி மண் தோன்றா காலத்து த்ரவிஷ பங்காளிகளின் பதிலென்ன?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை