உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / என்னைப்போல் யார் உதவி செஞ்சாங்க; கொஞ்சமாச்சும் நினைச்சுப் பார்க்கணும்; இஸ்ரேலுக்கு சொல்கிறார் பைடன்

என்னைப்போல் யார் உதவி செஞ்சாங்க; கொஞ்சமாச்சும் நினைச்சுப் பார்க்கணும்; இஸ்ரேலுக்கு சொல்கிறார் பைடன்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தலில் தாக்கம் செலுத்துவதற்கு இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு, விரும்புகிறாரா என்பது தெரியவில்லை என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்தார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=inj1c3k9&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0அதிபர் தேர்தல், பாலஸ்தீன போர், மத்திய கிழக்கு போர் பதற்றம் உள்ளிட்டவைகளுக்கு மத்தியில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நிருபர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: அமெரிக்க அதிபர் தேர்தலில் தாக்கம் செலுத்துவதற்காக தான் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு அமைதி உடன்படிக்கையை ஏற்காமல் இருக்கிறாரா என்று தெரியவில்லை. இஸ்ரேலுக்கு எனது அரசு உதவியது போல் வேறு எந்த அரசும் உதவவில்லை. அதையெல்லாம் கொஞ்சமாவது நெதன்யாகு நினைத்துப் பார்க்க வேண்டும். தங்கள் மீதான தாக்குதல்களுக்கு பதிலளிக்க இஸ்ரேலியர்களுக்கு முழு உரிமை உண்டு. ஆனால் பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தாமல், உயிரிழப்புகள் ஏற்படாமல், மிகவும் கவனமாக இருக்க வேண்டும். ஈரான் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக அணு உலை மற்றும் எண்ணெய் வயல்கள் மீது இஸ்ரேல் தாக்குதல் திட்டமிடுகிறதா என்பது குறித்து விவாதித்து வருகிறோம். இஸ்ரேல் இடத்தில் நான் இருந்தால் எண்ணெய் கிடங்குகளை தாக்குவதை விட அதற்கு மாற்றான வேறு வழிகளையே யோசிப்பேன். இவ்வாறு ஜோ பைடன் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

M Ramachandran
அக் 05, 2024 20:16

அப்பாவி போல பேசினால் மக்களுக்கு தெரியாமல் போகுமா ? உசுப்பி விட்டது நீங்க தான். பொஅறத்தற்கு ட்ரம்ப் வேரே தூண்டிவிடுகிறார். ஈரான் அணுவுலைகலை தாக்க சொல்லி. உங்கள் ஆயுத வியாபாரம் செழிப்படைய நீங்கள் செய்யும் உக்தி. எவன் செத்தால் நமக்கென்ன. நம் தொப்பை நிறைந்தால் போதும் என்ற என்னாம். நல்ல வேலை நம் இந்தியாவில் உஙகள் ஏடு புடி ஆட்சி அல்ல. இஙகு அமைந்துள்ள தூய மோடி என்ற தூயவரின் ஆட்சி. அயலக வெளி விவகார அமைச்சரும் நம் நாட்டை சரியாக வழி நடத்தும் தமிழன். மக்கள் நிம்மதியாக இருக்க முடிகிறது. ஆனாலும் உள் நாட்டு சில வெள்ளை எலிகள் நாட்டு மக்களின் நிம்மதியை.கெடுக்குது.


அப்பாவி
அக் 05, 2024 16:14

இந்தப் போருக்கு இஸ்ரேல் நாட்டு மக்களே எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடத்துகிறார்கள். அமெரிக்கா முட்டு குடுப்பதினால்தான் இஸ்ரேலின் நேத்தன் யாஹூ இஷ்டத்துக்கு பூந்து விளையாடிக்கிட்டிருக்கார். இது அமெரிக்காவை மேலும் பலவீனமாக்கும். இஸ்ரேலை அழிவுப்பாதையில் இட்டுச் செல்லும். போய் கட்டிப்.புடிச்சிட்டு வந்தவங்க கட்சி மாறிடுவாங்க.


Yaro Oruvan
அக் 05, 2024 18:14

அப்படியெல்லாம் இல்ல பாஸ்.. நீங்க ஒங்க வசதிக்கு கற்பனை செஞ்சிக்கோங்க.. இஸ்ரேலுக்கு எப்பவுமே 1 ன்னா 10 திருப்பி கொடுப்பாங்க .. கடந்த அக்டோபர் மாசம் இஸ்ரேலியர் 1700 பேர ஹமாஸ் கொன்னானுவ.. அன்னைக்கே அவனுவ அழிவு ஆரம்பம் .. நார்மலா 17000 ல முடிஞ்சிருக்கணும்.. ஆளாளுக்கு உசுப்பேத்திவிட்டு இப்போ லிஸ்ட் 50000 த்த நெருங்குது.. நடுவுல ஈரானும் சேந்துருக்கானுவ .. லிஸ்ட் பெருசாக வாய்ப்பு அதிகம் மாம்ஸ்


Lion Drsekar
அக் 05, 2024 16:14

வீட்டுக்கு வீடு வாசற்படி , ஒரே நாட்டுக்கே இப்படி என்றால் எங்கள் நிலையை எங்குபோய் சொல்லி அழுவது பங்காளதேஷ் , மொரீஷியஸ் ,,, வந்தே மாதரம்


Ramarajpd
அக் 05, 2024 11:48

நீ உன் நாட்டிற்கு நல்லது பன்னா போதும். இஸ்ரேல் என்னமோ செய்யட்டும்.


MUTHU
அக் 05, 2024 11:20

பைடென் : நான் ஊருக்கு நல்லவன்னு காட்ட இப்படித்தான் சொல்லிக்கிட்டு இருப்பன். நேத்தனு ஆகுறத நீ பாரு.


கோபாலகிருஷ்ணன்
அக் 05, 2024 10:41

என்ன குமாரு.... தேர்தல் பயம் வந்துரிச்சா...???


Srinivasan Krishnamoorthi
அக் 05, 2024 10:37

அமெரிக்கா ஜனாதிபதி பைடன் பெரியண்ணன் நிலையை முன் வைக்கும் நோக்கத்தில் உக்ரைன் ரஷ்யா போரை வளர்க்கிறார் .


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை