உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / பைடன் பேச்சு மோசம்: டிரம்ப் கருத்து

பைடன் பேச்சு மோசம்: டிரம்ப் கருத்து

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வாஷிங்டன்: ‛‛ அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் பேச்சு புரிந்து கொள்ள முடியவில்லை. மோசமாக இருந்தது '' என முன்னாள் அதிபரும், குடியரசு கட்சி சார்பில் அதிபர் தேர்தலில் போட்டியிடும் டிரம்ப் கூறியுள்ளார்.அமெரிக்க அதிபர் தேர்தலில் இருந்து விலகிய ஜோ பைடன் நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில், ‛‛ இளம் தலைமுறையினருக்கு வழிவிடுவதே சிறந்தது என நான் முடிவு செய்தேன். நமது தேசத்தை ஒன்றிணைக்க இதுவே சிறந்த தருணம். அமெரிக்காவை மன்னர்கள், சர்வாதிகாரிகள் ஆட்சி செய்தது இல்லை. மக்கள் தான் ஆட்சி புரிந்தனர் ''. இவ்வாறு அவர் பேசினார்.இது தொடர்பாக டிரம்ப் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: அதிபர் அலுவலகத்தில் இருந்து ஜோ பைடன் ஆற்றிய உரையானது அரிதாகவே புரிந்து கொள்ள முடிந்தது. மிகவும் மோசம். ஜோ பைடன் மற்றும் பொய் சொல்லும் கமலா ஹாரிஸ் ஆகியோர் அமெரிக்காவிற்கு தர்மசங்கடமானவர்கள். இது போன்று காலம் எப்போதும் இருந்தது இல்லை. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

ஆரூர் ரங்
ஜூலை 25, 2024 20:48

பூதம் அல்லது பிசாசு. அமெரிக்கர் கதி? வேற சாய்ஸ் கிடையாது.


அசோகன்
ஜூலை 25, 2024 13:57

கட்டுமரம் தோத்துச்சி...


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை