உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / பிறப்பால் குடியுரிமை பெறும் விவகாரம்; டிரம்ப்பின் உத்தரவுக்கு தடை விதிப்பு

பிறப்பால் குடியுரிமை பெறும் விவகாரம்; டிரம்ப்பின் உத்தரவுக்கு தடை விதிப்பு

வாஷிங்டன்: அமெரிக்காவில் வேலை உள்ளிட்ட காரணங்களுக்காக தற்காலிகமாக வசிப்பவர்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு குடியுரிமை வழங்கக் கூடாது என்ற டிரம்ப்பின் அறிவிப்பை பெடரல் கோர்ட் நிறுத்தி வைத்து உத்தரவிட்டுள்ளது. அமெரிக்காவில் தாய் அல்லது தந்தையின் குடியுரிமை எந்த நிலையில் இருந்தாலும், அமெரிக்காவில் பிறக்கும் குழந்தைக்கு, அமெரிக்க குடியுரிமை வழங்கப்படுகிறது. அமெரிக்காவின் அரசியலமைப்பு சட்டத்தில், 14வது திருத்தம் இந்த உரிமையை வழங்குகிறது. ஆனால், இதில் சில கட்டுப்பாடுகளை விதித்து, அமெரிக்க அதிபர் டிரம்ப் உத்தரவு பிறப்பித்திருந்தார். அதன்படி, சட்டவிரோதமாக அமெரிக்காவில் வசிக்கும் பெற்றோருக்குப் பிறக்கும் குழந்தைகளுக்கு பிறப்பால் குடியுரிமை வழங்கப் படாது.அதுபோல, தற்காலிகமாக, அதாவது வேலைக்காக அமெரிக்காவுக்கு வந்தவர்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கும் தானாகவே குடியுரிமை வழங்க முடியாது என்று அறிவிக்கப்பட்டது. டிரம்ப் நிர்வாகத்தின் இந்த உத்தரவுக்கு பல மாகாணங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. மொத்தமுள்ள, 50 மாகாணங்களில், 22 மாகாணங்கள், இந்த உத்தரவை எதிர்த்து நீதிமன்றங்களில் வழக்கு தொடர்ந்தன.இந்நிலையில், அமெரிக்காவில் வேலை உள்ளிட்ட காரணங்களுக்காக தற்காலிகமாக வசிப்பவர்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு குடியுரிமை வழங்கக் கூடாது என்ற டிரம்ப்பின் அறிவிப்பை பெடரல் கோர்ட் நிறுத்தி வைத்து உத்தரவிட்டுள்ளது. மேலும் அரசியலமைப்புக்கு எதிரான அறிவிப்பு என்றும் நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார். இது டிரம்ப் நிர்வாகத்திற்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது. பெடரல் கோர்ட்டின் இந்த தீர்ப்புக்கு பல்வேறு தரப்பினர் வரவேற்பு தெரிவித்துள்ளனர். விரைவில் இந்த தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படும் என்று தெரிகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

Barakat Ali
ஜூலை 24, 2025 11:45

இது பழைய செய்தியாச்சே ???? அது போகட்டும் ...... இந்த வெள்ளையர்களே அங்கே குடியேறியவர்கள்தானே ???? அதுவும் செவ்விந்தியர்களைக் கொன்று குவித்து .........


Jack
ஜூலை 24, 2025 09:59

ட்ரம்பை federal chairman மற்றும் நீதிபதிகள் பப்புவாக தான் கருதுகிறார்கள்


Thravisham
ஜூலை 24, 2025 12:44

நீதிபதிகளைவிட அமெரிக்கா ஜனாதிபதிக்கே பவர் அதிகம்


Jack
ஜூலை 24, 2025 09:56

சீனாவிலிருந்து சுற்றுலா பயணிகளாக லாஸ்வேகாஸில் இறங்கி லாஸ் ஏஞ்சலென்ஸில் தங்கி குழந்தை பெற்று குழந்தைக்கு அமெரிக்க குடியுரிமை கிடைத்தவுடன் சீனா சென்றுவிடுவார்கள் ..ஷாங்காய் நகரில் அமெரிக்க குடியுரிமை இருக்கும் குழந்தைகளுக்கான பள்ளியில் படிக்க வைக்கிறார்கள் ..18 வயசுக்கு பிறகு அந்த குழந்தை அமெரிக்காவில் வசிக்கவேண்டும் என்று கனவு ..H1B விசாவில் பணிபுரியும் இந்தியர்களுக்கு க்ரீன் கார்டு கிடைப்பது நிச்சயமில்லை ..அமெரிக்காவில் அவர்கள் பெற்றுக்கொள்ளும் குழந்தை 18 வயதான பிறகு அப்பா அம்மாவை சிட்டிசன் ஷிப்புக்கு ரெகமெண்ட் செய்தால் தான் குடியுரிமை பெறமுடியும் என்கிற நிலைமை ..