வாசகர்கள் கருத்துகள் ( 1 )
மத்தியஸ்தருக்கு மண்டை உடையாமல் இருந்தால் நல்லது.
டெல் அவிவ்: இஸ்ரேல் தாக்குதலை நிறுத்த வேண்டும் என அதிபர் டிரம்ப் அறிவித்த பிறகும், ஈரான் மீதான தாக்குதல் தொடர்கிறது.இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான மோதல் இரண்டு வாரங்களாக நீடித்த நிலையில், போர் நிறுத்தம் ஏற்பட்டு உள்ளதாக அதிபர் டிரம்ப் அறிவித்து இருந்தார். இதனை இரு நாடுகளும் ஏற்றன. ஆனால், இதன் பிறகும் தாக்குதல் நீடித்தது. இதனை டிரம்ப் கண்டித்தார். இஸ்ரேல் போர் நிறுத்தத்தை தொடர வேண்டும் எனக்கூறினார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=mnumv26v&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0ஆனால், இதன் பிறகும் ஈரான் மீதான இஸ்ரேல் தாக்குதல் தொடர்ந்தது. ஈரான் ஏவிய 2 ' பாலிஸ்டிக்' ஏவுகணைகளுக்கு பதிலடியாக இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக இஸ்ரேல் அறிவித்தது.இது தொடர்பாக டிரம்ப்பிடம் நெதன்யாகு கூறும்போது, தற்போது தாக்குதலை நிறுத்த முடியாது. போர் நிறுத்தத்தை மீறியதால், அதற்கு பதிலடி கொடுக்க வேண்டி உள்ளதாக தெரிவித்தார் என இஸ்ரேல் ஊடகம் செய்தி தெரிவித்துள்ளது.இஸ்ரேல் பாதுகாப்புத்துறை அமைச்சர் இஸ்ரேல் கட்ஸ் கூறும்போது, போர் நிறுத்தம் ஏற்பட்ட பிறகு, அதனை மீறி ஈரான் ஏவுகணைகளை வீசி தாக்கியது. இதற்கு பதிலடி கொடுக்க வேண்டும் என பாதுகாப்பு படையினருக்கு உத்தரவிட்டுள்ளேன் என்றார்.
மத்தியஸ்தருக்கு மண்டை உடையாமல் இருந்தால் நல்லது.