உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / தினமும் இரவு வெடிகுண்டு சத்தம்; ஈரானில் படிக்கும் இந்திய மாணவர்கள் கதறல்

தினமும் இரவு வெடிகுண்டு சத்தம்; ஈரானில் படிக்கும் இந்திய மாணவர்கள் கதறல்

டெஹ்ரான்: இஸ்ரேல் - ஈரான் இடையே போர் தீவிரமடைந்துள்ள நிலையில், தங்களை மீட்க நடவடிக்கை எடுக்குமாறு மத்திய அரசுக்கு ஈரானில் படித்து வரும் இந்திய மாணவர்கள் கண்ணீர் மல்க வேண்டுகோள் விடுத்துள்ளனர்.இஸ்ரேல், ஈரான் இடையேயான போர் தீவிரமடைந்துள்ளது. இருநாடுகளும் பரஸ்பரமாக வான்வழி தாக்குதலை நடத்தி வருகின்றன. இதுவரையில் ஈரானில் 230 பேரும், இஸ்ரேலில் குழந்தைகள் உள்பட 10 பேரும் கொல்லப்பட்டுள்ளனர்.ஈரானில் ஆயுத கிடங்கை சுற்றி வசிக்கும் மக்கள் உடனடியாக அங்கிருந்து வெளியேறுமாறு இஸ்ரேல் எச்சரிக்கை விடுத்தது. இதனிடையே, ஈரான் மற்றும் இஸ்ரேலில் வசிக்கும் இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்கும்படி, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. மேலும், உதவி தேவைப்படுவோர் தொடர்பு கொள்ள வசதியாக உதவி எண்களும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், இரு நாடுகளுக்கு இடையே தாக்குதல் தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில், தங்களை உடனடியாக அழைத்துக் கொள்ளுமாறு மத்திய அரசுக்கு ஈரானில் உள்ள இந்திய மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்த பெரும்பாலான மாணவர்கள், ஈரானில் உள்ள ஷாகித் பெஹெஸ்தி பல்கலை மற்றும் ஈரான் மருத்துவ பல்கலையில் பயின்று வருகின்றனர். குறிப்பாக, தெஹ்ரானில் உள்ள ஷாகித் பெஹெஸ்தி பல்கலையில் மட்டும் 350 இந்திய மாணவர்கள் பயின்று வருகின்றனர். இதனிடையே, மாணவர்கள் தங்கியிருக்கும் விடுதிக்கு சிறிது கி.மீ., தொலைவில் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டதாக சொல்லப்படுகிறது. இதனால், பீதியடைந்துள்ள இந்திய மாணவர்கள், இந்திய அரசு உடனடியாக தங்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளனர். இந்திய மாணவர் ஒருவர் கூறுகையில், 'நாங்கள் அபார்ட்மென்டின் அடித்தளத்தில் சிக்கிக் கொண்டிருக்கிறோம். ஒவ்வொரு நாளும் இரவு வெடிகுண்டு சத்தம் கேட்டுக் கொண்டே இருக்கிறது. 3 நாட்களாக தூக்கமில்லாமல் தவித்து கொண்டிருக்கிறோம். நாங்கள் இருக்கும் இடத்தில் இருந்து 5 கி.மீ., தொலைவில் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. எனவே, எங்களை உடனடியாக மீட்டு அழைத்து செல்ல இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றார்.தொடர் கண்காணிப்பில் இந்திய தூதரகம் இதனிடையே, வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில்; டெஹ்ரானில் உள்ள இந்திய தூதரகம் ஈரானில் உள்ள இந்திய மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாக, நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அங்குள்ள நிலைமையை தொடர்ந்து கண்காணித்து வருகிறது. சில சமயங்களில் தூதரகத்தின் உதவியுடன் மாணவர்கள், ஈரானில் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்படுகின்றனர், என தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 21 )

பெரிய ராசு
ஜூன் 16, 2025 21:11

இவனுக இந்தியர்கள் கிடையாது ..இந்தியாவில் இல்லாத கல்வியை ஈரானில் ..இவனுக தீவிரவாதிகள்


Abdul Rahim
ஜூன் 16, 2025 17:57

JAYACHANDRAN RAMAKRISHNAN/// சார் அவ்வளவு கஷ்ட்டப்பட்டு நம் மேன்பவரை அரபிகளுக்கு இலவசமாக கொடுக்கவேண்டாம் அவர்கள் எப்படியோ போகட்டும் நீங்க அரபு தேசத்தில் பணிபுரியும் எங்க எல்லோரையும் திரும்ப அழைத்து இந்தியாவிலோ பகோடா போடுற வேலையாச்சும் அல்லது உங்க நண்பர் அமெரிக்காவிலோ வேலை வாங்கி கொடுக்கவேண்டும், உங்க ரோஷம் எவ்வளவு னு பார்ப்போம் ...


theruvasagan
ஜூன் 16, 2025 17:30

தமிழகத்தைச் சேர்ந்த மாணவர்களை பத்திரமாக கூட்டி வர நூறு விடியல் பஸ்கள் ரெடியா இருக்காம். ஆனா டீசல் போட காசு தராம ஒன்றிய அரசு அழிச்சாட்டியம் பண்ணுதாம். அதனால டீசல் வாங்க உலக வங்கியிடம் 20000 கோடிகடன் வாங்க பேச்சு வார்த்தை நடக்குதாம்.


Ram
ஜூன் 16, 2025 16:06

ரிஸ்க் எடுத்து விமானத்தை ஓட்டிக்கொண்டுபோய் எப்படி உங்களை காப்பாற்றுவது , சண்டை கொஞ்சநாளாகவே வரும் என்று தெரியும்போது நீங்களாகவே வந்திருக்கலாமே


RAMESH
ஜூன் 16, 2025 15:37

அங்கேயே இருக்கவும்.....விடியல் பஸ் வந்து விடும்.....டீசல் நிரப்பி ரெடியாக இருக்கிறார்கள்.......... முதல்வர் உடனடியாக உக்ரைன் மாணவர்கஜளை மீட்டது போல் இப்போது கூட்டணி கட்சி தலைவர்களை அனுப்பி மீட்க வேண்டும்...


ஆரூர் ரங்
ஜூன் 16, 2025 14:42

அங்கேயே இருங்க.


ஜூன் 16, 2025 14:25

முன்பு உக்ரேனிலிருந்து மாணவர்களை விடியல் முதல்வர் இப்போதும் மீட்பார்


Narayanan
ஜூன் 16, 2025 14:17

இந்திய மாணவர்களை காப்பாற்ற ஸ்டாலின் தனி விமானத்தில் விரைகிறா ?


SUBRAMANIAN P
ஜூன் 16, 2025 13:38

அங்க போயி என்னத்த படிக்கிறீங்க.. அங்க படிப்பா சொல்லித் தரானுங்க.


ஆசாமி
ஜூன் 16, 2025 13:09

அங்க போய் என்னாத்த படிக்கறானுங்க ?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை