உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / ‛பி கேர்புல்: இந்தியர்களுக்கு தூதரகம் எச்சரிக்கை

‛பி கேர்புல்: இந்தியர்களுக்கு தூதரகம் எச்சரிக்கை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

லண்டன்: ‛‛ பிரிட்டனில் சில இடங்களில் கலவரம் வெடித்துள்ளதால், அப்பகுதிகளுக்கு செல்வதை இந்தியர்கள் தவிர்க்க வேண்டும். கவனமுடன் இருக்க வேண்டும் '' என அந்நாட்டிற்கான இந்திய தூதரகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.ஐரோப்பிய நாடான பிரிட்டனின் சவுத்போர்ட் நகரில் உள்ள நடன பள்ளியில், சமீபத்தில் புகுந்த 17 வயது சிறுவன், அங்கிருந்தவர்களை சரமாரியாக கத்தியால் குத்தினான். இதில் படுகாயமடைந்த சிறுமியர் மூன்று பேர் அடுத்தடுத்து உயிரிழந்தனர். தாக்குதல் நடத்திய சிறுவன், சட்ட விரோதமாக பிரிட்டனுக்குள் நுழைந்தவர் என்ற வதந்தி சமூக வலைதளத்தில் பரவியது. இதையடுத்து, தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், பிரிட்டன் அரசின் குடியேற்ற விதிகளுக்கு எதிராகவும் அங்குள்ள சில அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. பல நகரங்களில் நடந்த ஆர்ப்பாட்டங்கள் கலவரமாக மாறின. போலீசார் மீது போராட்டக்காரர்கள் தாக்குதல் நடத்தினர். இதில் 10க்கும் மேற்பட்டோர் காயம் ஏற்பட்டது.இந்நிலையில், லண்டனில் உள்ள இந்திய தூதரகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: பிரிட்டனில் சில இடங்களில் நிலவும் கலவரம் குறித்து இந்தியர்கள் அறிந்து வைத்து இருக்க வேண்டும். சூழ்நிலையை, இந்திய தூதரகம் உன்னிப்பாக கவனித்து வருகிறது. இந்தியாவில் இருந்து வந்தவர்கள் விழிப்புடன் இருப்பதுடன், பிரிட்டனில் பயணிக்கும் போது எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். உள்ளூர் செய்திகளை அறிந்து கொள்வதுடன், போலீசார் விடுக்கும் எச்சரிக்கைகளை பின்பற்ற வேண்டும். போராட்டம் நடக்கும் இடங்களுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

Neutrallite
ஆக 06, 2024 21:19

ஒரு காலத்துல நம்ம நாட்ட பாத்து இப்படிப்பட்ட நாடுகள் சொன்னது.... இன்றைக்கு அவர்களுக்கே திரும்பி செல்கிறது. கர்மா


நிக்கோல்தாம்சன்
ஆக 06, 2024 19:40

சமீபத்தில் ஐரோப்பிய யூனியனில் இப்படி நடந்து கொண்டதாக செய்திகள் வெளிவருகிறதே என்னதான் நடக்கிறது


தமிழ்வேள்
ஆக 06, 2024 19:20

மூர்க்கத்துக்கு இரக்கம் காட்டி ஆதரவு அளிப்பதும், ஆட்கொல்லி முதலையை செல்லப்பிராணி ஆக வளர்ப்பதும் ஒன்றே... அகதியாக அடுத்த வேளை சோற்றுக்கு விதியற்றுப்போய் வந்த பயல்களுக்கு எதற்கு ஸ ஷரீ அத்தும் ஜிஹாத் உம்... இவர்களை இவர்களின் சொந்த மதத்தவரான அரபுகளே கண்டு கொள்ளாத நிலையில் மற்றவர்களுக்கு எதற்கு பரிதாபம் & பச்சாதாபம்?


sundarsvpr
ஆக 06, 2024 16:39

பாரதத்தினீர் வெளிநாட்டில் வேலைக்காக மட்டும் செல்லவில்லை. மேல் படிப்பு படிக்கச் செல்கிறார்கள் படித்து முடித்தவுடன் தாய் நாடு திரும்ப்புவதில்லை. அங்கேயே வேலை தேடி தாய்நாட்டிலுள்ள சொந்தங்களுக்கு பணம் அனுப்புகின்றனர். அந்த வருமானத்தை வைத்து படிக்கவைத்து மீள பணம் பெறுகிறோம். இவ்வாறு வரும் பணம் நம் நாட்டு தொழில் வளர்ச்சிக்கு ஏன் பயன்படவில்லை.? நகைகள் வாங்குவதிலும் வீடுவாங்குவதில் செலவு ஆகிறது. வேலைக்கு சென்றவன் அந்த நாட்டு வளர்ச்சிக்கு பாடுபடுகிறான் வெளிநாட்டிற்கு செல்லும் ஆர்வம் குறையுமானால் நம் நாடு வளர்ச்சியை நோக்கி செல்கிறது .


Saravan Ravichandran
ஆக 06, 2024 18:14

வெளிநாட்டிற்கு செல்வது குறையணும்னு சொன்னா, நமது நாட்டில் வேலை வாய்ப்பு இருக்கனும். இங்க தான் எல்லாத்தையும் இளைஞர்களே பாத்துக்கணும்னு நிர்மலா சொன்னார்களே. இப்படி அரசு சொன்னால், எல்லாரும் வெளிய போக தான் நினைப்பார்கள்


Neutrallite
ஆக 06, 2024 21:18

நகை செய்வதும் வீடு கட்டுவதும் தொழில்களே ஆக அந்த தொழில்கள் வளர்கின்றன. ஆனாலும் நீங்கள் சொன்ன கருத்து உண்மை தான். இங்கு வந்து முதலீடு செய்து தொழில் வளர்ப்போர் அதிகம் இல்லை. கொஞ்சம் கொஞ்சம் அது மாறியது.. குறு நிறுவனங்கள் "Startups" வாயிலாக... அதோடு சில வெளிநாடு வாழ் இந்தியர்கள் Angel Investor ஆகவும் தொழில் வளர்க்கிறார்கள். போக போக இது இன்னும் செழிக்கலாம். பார்ப்போம்.


மேலும் செய்திகள்









புதிய வீடியோ