உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / கின்னஸ் சாதனையை இழக்கிறது புர்ஜ் கலிபா கட்டடம்

கின்னஸ் சாதனையை இழக்கிறது புர்ஜ் கலிபா கட்டடம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

துபாய்: உலகின் மிகவும் உயரமான கட்டடம் என கின்னஸ் சாதனையில் உள்ள புர்ஜ் கலிபா கட்டடம் விரைவில் அந்த சாதனையை இழக்க உள்ளது. சவுதியில் கட்டப்பட்டு வரும் ‛‛ஜெட்டா டவர்'' கட்டடம் உலகின் மிகவும் உயரமான கட்டடம் என்ற சாதனையை எட்ட உள்ளது.உலகின் மிக உயரமான கட்டிடமான புர்ஜ் கலிபா, துபாயில் உள்ளது. 2004ம் ஆண்டு கட்டுமான பணிகள் துவங்கி 2010ம் ஆண்டு டிசம்பரில் நிறைவடைந்தது. இதன் உயரம் 828 மீட்டர் (2,716 அடி ) இக்கட்டடத்தில் உலகின் தலைசிறந்த நட்சத்திர ஓட்டல்கள், சொகுசு விடுதிகளைக் கொண்ட இந்த புர்ஜ் கலிபா கட்டிடத்திற்கு உலகம் முழுவதிலும் இருந்து சுற்றுலா பயணிகள் வருகின்றனர். கின்னஸ் சாதனையும் படைத்துள்ளது.இந்நிலையில் சவுதி அரேபியாவில் கட்டப்பட்டு வரும் ‛‛ஜெட்டா டவர்'' என்ற கட்டடம் புர்ஜ் கலிபா கட்டடத்தை விட உலகின் மிகவும் உயரமான கட்டடம் என்ற சாதனையை படைக்க உள்ளது. கடந்த 2013ம் ஆண்டு ஏப்ரல் மாதம் கட்டுமான பணிகள் துவங்கி நிறைவடையும் நிலையில் உள்ளது. இதன் உயரம் 1000 மீட்டர் ( 3,281 அடி) என கூறப்படுகிறது. இக்கட்டடத்தில் சொகுசு வீடுகள், அலுவலகம், ரெஸ்டாரண்ட்கள், ஆகியவற்றின் கலவையாக இந்த கட்டிடம் இருக்கும்.இதன் மூலம் 14 ஆண்டுகளாக உலகின் மிக உயரமான கட்டிடம் என்ற அந்தஸ்தை புர்ஜ் கலிபா இழக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

thangam
ஜன 07, 2024 13:11

அது ஒரு பாலைவனம்... எதுவுமே நல்லா இருக்காது.. நல்ல வியாபாரம் பன்றான்.. ஏமாந்த மக்கள் அங்கு பொய் செட்டில் ஆகி நாசமா போங்க


BALOU
ஜன 07, 2024 10:19

இந்த அறிவில்லாதவர்கள் கட்டும் மிகபெரிய கட்டிடங்கள் அதை முழுதும் ஏசி போடுவது .விளையாட்டு கிரவுண்டுகள் கட்டி அதில் ஏசி போடுவது இதில் செயற்கை பனி உருவாக்கி அதில் பனிசரக்கு விளையாடுவது இதனால் சுற்றுசுழல் சிர்கேடுகிறது மழை அதிகமாக பொழிந்து வெள்ளம் வருகிறது இவர்களுக்கு முதலில் தடை விதிக்க வேண்டும்


Bye Pass
ஜன 07, 2024 00:38

அற்பனுக்கு பவிசு வந்தா அர்த்தராத்திரியில் குடை பிடிப்பான்


கருத்து சுந்தரம்
ஜன 06, 2024 22:26

கழிவை அகற்ற இதில் வசதி செய்யப்பட்டுள்ளதா? இந்த "முக்கியமான matter-ஐ" புர்ஜ் ஃகலீஃபாவில் கோட்டை விட்டார்களே! ???? ???? ????


கனோஜ் ஆங்ரே
ஜன 06, 2024 19:32

இப்படியே... இயற்கை அன்னையை... பூமித் தாயை... பள்ளம் தோண்டி... துன்புறுத்தி, கஷ்டப்படுத்தி மேலே மேலே கட்டுங்கடா. இயற்கை அன்னை ஒருநாள் தரை மட்டமாக்குவாள். இயற்கை (இறைவன்..னுகூட வச்சிக்கோங்க) மனிதனை படைக்கும்போது... அவன் மிருகமாக மாறாமல் இருந்திட.... அறிவு தந்து, அதன் மூலம் ஆற்றல் தந்தது, தன்னை நல்ல வழியில் முன்னேற்றிக் கொள்ள... மேம்படுத்திக் கொள்ள. ஆனால், இந்த அறிவு கெட்ட மனிதப் பதர்கள், தனக்கு மட்டுமே அறிவும், ஆற்றலும், திறமையும் உள்ளது என்ற ஆணவத்தில், அகந்தையில்.... தன்னை படைத்த இயற்கையையே இம்சித்து, துன்புறுத்தி, வதைத்து... தன்னை அறிவிற் சிறந்தவன்.. ஆற்றல் மிகுந்தவன் என்று இயற்கையிடமே மல்லுக்கு நிற்கிறான்.... அதனால்தான்... கடந்த சில ஆண்டுகளாக.... உலகத்தின் பல மூலைகளிலும், இயற்கையன்னையின் பல்முனைத் தாக்குதல், “இயற்கை பேரிடர்” என்ற பெயரில். அது நிலத்தில் பூகம்பம், நிலநடுக்கமாய்.... கடலில் சுனாமி, ஆழிப் பேரலையாய்... தண்ணீரில் பெருமழை, பெருவெள்ளமாய், தீயில் எரிமலையாய்... கொதித்து... மனிதப் பதர்களை கொத்து கொத்தாக அழித்து வருகிறாள்... இதற்குக் காரணமே இதுபோன்ற மனித மூடர்களின் செயல்களால்தான்... ஆவணத்தால்தான்... அகந்தையால்தான். இவ்வளவு பெரிய கட்டிடம் கட்டிய மானிடப் பதரே... எட்டு சதவிகித நிலநடுக்கம் வந்தால், அக்கட்டிடத்தில் தரைதளம் முதல் மேல்தளம் வரையில் உள்ள அத்தனை பேருமே மொத்தமா செத்தானுங்கடா.... சாகணும், சாகணும், மனிதன் அகந்தையிலும், ஆணவத்திலும், திமிரிலும், தெனாவட்டிலும்... தன்னை படைத்த இயற்கையை எதிர்க்கும் அத்தனை மனிதர்களும்.. தான் சாகப் போகிறோம் என்ற எண்ணம் மனதில் உருவாவதற்கு முன்னரே பிணமாகிவிட வேண்டும்... அப்போது இயற்கை கேக்கும் “யாரு... எங்ககிட்யேவா...”...ன்னு நக்கலா கேக்கும்.


Senthoora
ஜன 06, 2024 20:18

இயற்கை பேரிடர் அதிகமாக காரணம் விரிவாக சொன்னிர்கள். அதோடு இதையும் சேர்த்திருக்கணும். இப்போ நடக்கும் காச பலஸ்தீன இஸ்ரேல் போரில் டன், டன் கணக்கில் இஸ்ரேல் குண்டுகளை காசாமீது இறக்கி பல அடி ஆழத்துக்கு குண்டுகள் பாய்ந்து நிலஅதிர்வுகளை ஏட்படுத்துகிறது, அண்மையில் பலதடவை ஜப்பானில் நில அதிருவுகள் என்றும் இல்லாத அளவுக்கு வர இந்த பலஸ்தீன இஸ்திரேலி யுத்தமும் ரஷிய உக்ரேயின் யுத்தமும் காரணமாக இருக்கலாம், இதை பற்றி சுற்று சூழல் மாசு பற்றி அமெரிக்கவும் பிரிட்டனும் வாய் திறக்காது,


தர்மராஜ் தங்கரத்தினம்
ஜன 06, 2024 20:22

உங்க ஆளுங்கதான் பாஸ் ..... ஐ மீன் உங்க மூர்க்க மதம் கேளிக்கை, விருந்து, டைம் பாஸ் என்கிற ரேஞ்சுக்கு போயிருச்சு ...... இதையெல்லாம் சரி பண்ண திரும்ப தூதரை கூப்புடுங்கோ ....


Senthoora
ஜன 07, 2024 06:11

பெயரை நல்லாக பாருங்க.


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை