உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / கனடாவில் இந்தியர் சுட்டுக்கொலை; இருவர் கைது

கனடாவில் இந்தியர் சுட்டுக்கொலை; இருவர் கைது

ஒட்டாவா: 'கனடா நாட்டின் எட்மான்டன் நகரில், 20 வயது இந்திய வாலிபர் ஹர்ஷன்தீப் சிங் சுட்டுக்கொலை செய்யப்பட்டார். கனடா நாட்டவர் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.வட அமெரிக்க நாடான கனடாவில், எட்மான்டன் நகரில், இந்திய வாலிபர் ஹர்ஷன்தீப் சிங் வசித்து வந்தார். இவருக்கு வயது 20. இவரை மர்ம நபர்கள் சுட்டுக்கொலை செய்தனர். இது தொடர்பாக, கனடா நாட்டவர் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்திய மாணவர் உயிரிழப்புக்கு, கனடாவில் உள்ள இந்திய தூதரகம் வருத்தம் தெரிவித்துள்ளது. இது குறித்து, இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கடந்த டிசம்பர் 6ம் தேதி எட்மண்டனில் இந்திய வாலிபர் ஹர்ஷன்தீப் சிங் மரணத்தால் நாங்கள் மிகவும் வருத்தப்படுகிறோம். துயரத்தில் இருக்கும் மாணவரின் குடும்பத்திற்கு அனைத்து உதவிகளும் செய்யப்படும். இந்த சம்பவம் தொடர்பாக விசாரித்த கனடா போலீசார், இரண்டு பேரை கைது செய்துள்ளனர். நாங்கள் அதிகாரிகளுடன் தொடர்பில் இருக்கிறோம். இவ்வாறு இந்திய தூதரகம் கூறியுள்ளது. ஏற்கனவே, காலிஸ்தான் பயங்கரவாதி கனடாவில் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் இந்திய அரசு மீது ட்ரூடோ குற்றம் சாட்டினார். இதனால், இரு நாட்டு உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

kalyan
டிச 09, 2024 13:31

அப்படியே சீக்கியர்கள் யாவரும் காலிஸ்தான் தீவிரவாதிகள் என்று எண்ணுவது தமிழர்கள் யாவரும் LTTEயை சேர்ந்தவர்கள் என்று நினைப்பது போலத்தான்


Rajagiri Apparswamy
டிச 09, 2024 08:21

சுட்டூ கொல்லப்பட்டவரும் காலிஸ்தான் காரர் போல் தெரிகிறது


Barakat Ali
டிச 09, 2024 09:15

எப்படிச் சொல்றீங்க?? சர்தார்கள் அனைவரும் காலிஸ்தான் இயக்கத்தைச் சேர்ந்தவர்களா ????


Sampath Kumar
டிச 09, 2024 08:19

இவரு இந்தியர் அனால் சீக்கியர் சீக்கியர்கள் தான் பிரச்சனை என்று இந்திய சொல்லுகிறது அப்ப்டோ இருக்கும் பொது இந்த இந்தியராகிய இந்த சீக்கியரை யார் கொலை வேண்டும் ஏன் கொல்ல வேண்டும் பதில் தெரியுமா? அங்கே தான் சூட்சுமம் இந்திய கனடா அரசின் சித்து விளையாட்டு இது புரிந்தால் புலிகள் இந்திய ஸ்ரீலங்கா சித்து விளையாட்டு புரியும் புரிந்தவன் பிஸ்தா


QCS MCCL
டிச 09, 2024 09:44

சிக்கியர்தான் பிரச்சினை என்று இந்திய எப்போதும் சொன்னதில்லை, காலிஸ்தான் தீவிரவாதிகள்தான் பிரச்சினை என்கிறது. இன்றும் இந்தியாவின் மிக தீவிரமான இந்திய தேசப்பற்று உள்ள இனங்களில் சீக்கியரும் ஒரு முக்கிய இனம். அனால் பாகிஸ்தான் & அமெரிக்காவின் பணத்திற்கு வாழட்டும் சில சீக்கியர்கள் காலிஸ்தான் ஆதரவாளர்கள்.. எதுவும் தெரியாமல் புலிகளோடு இந்தியாவை தொடர்பு படுத்தவேண்டாம். இந்திய ஒருபோதும் வன்முறையை ஆதரித்ததில்லை, அது புலிகளாக இருந்தாலும்.


Mohan
டிச 09, 2024 09:52

நீ எங்காவது போயி கற்பனை கதை எழுது இருக்கவே இருக்கு முரசொலி ...


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை