உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / காலிஸ்தான் பயங்கரவாதி மறைவுக்கு பார்லி.,யில் மவுன அஞ்சலி: கனடா குசும்பு, இந்தியா பதிலடி

காலிஸ்தான் பயங்கரவாதி மறைவுக்கு பார்லி.,யில் மவுன அஞ்சலி: கனடா குசும்பு, இந்தியா பதிலடி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வான்கூவர்: கனடாவில் கொல்லப்பட்ட காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் நினைவாக அந்நாட்டு பார்லிமென்டில் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. இதற்கு பதிலடியாக, அந்நாட்டிற்கான இந்திய தூதரகம், 1985 ல் , ஏர் இந்தியா விமானத்தில் காலிஸ்தான் பயங்கரவாதிகள் வைத்த வெடிகுண்டு வெடித்ததில் உயிரிழந்த 329 பேர் நினைவாக மவுன அஞ்சலி கூட்டம் நடத்தப் போவதாக அறிவித்து உள்ளது.காலிஸ்தான் பயங்கரவாத அமைப்பை சேர்ந்த ஹர்தீப் சிங் நிஜ்ஜார், கடந்த ஆண்டு கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவில் உள்ள குருத்வாரா அருகே மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். இச்சம்பவம் தொடர்பாக இந்தியா மீது கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றம் சாட்டினார். இதனால், இரு நாடுகளுக்கு இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டு உள்ளது. இந்நிலையில் அந்நாட்டின் பார்லிமென்டில் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் நினைவாக மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. எம்.பி.,க்கள் அனைவரும் எழுந்து நின்று மவுன அஞ்சலி செலுத்தினர். இது தொடர்பாக வான்கூவரில் உள்ள இந்திய தூதரகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: பயங்கரவாதத்தின் அச்சுறுத்தலை எதிர்கொள்வதில் இந்தியா முன்னிலையில் நிற்கிறது. இந்த உலகளாவிய அச்சுறுத்தலை சமாளிக்க அனைத்து நாடுகளுடன் நெருக்கமாக பணியாற்றி வருகிறது. ஏர் இந்தியா(கனிஷ்கா) விமானத்தில் பயங்கரவாதிகள் வைத்த குண்டு வெடித்ததன் 39 வது ஆண்டு நினைவு தினம் ஜூன் 23ம் தேதி நடக்கிறது. இந்த விபத்தில், 86 அப்பாவி குழந்தைகள் உட்பட 329 அப்பாவிகள் உயிரிழந்தனர். சிவில் விமான வரலாற்றில், கொடூரமான பயங்கரவாதம் தொடர்பான தாக்குதலாக கருதப்படுகிறது.உயிரிழந்தவர்கள் நினைவாக ஸ்டான்லி பார்க் பகுதியில் ஏர் இந்தியா நினைவிடத்தில் 23ம் தேதி மாலை 6:30 மணிக்கு மவுன அஞ்சலி நடக்கறது. பயங்கரவாதத்திற்கு எதிரான இந்த நிகழ்வில், இந்திய வம்சாவளியினர் கலந்து கொள்ள வேண்டும். இவ்வாறு அந்த பதிவில் கூறப்பட்டு உள்ளது.

மோசமான நிகழ்வு

கனடாவின் மான்ட்ரியல் நகரில் இருந்து பிரிட்டன் தலைநகர் லண்டனுக்கு ஏர் இந்தியா விமானம் சென்றது. 31 ஆயிரம் அடி உயரத்தில் பறந்து கொண்டு இருந்தது. அப்போது, கனடாவில் வசிக்கும் காலிஸ்தான் பயங்கரவாதிகள் வைத்த வெடிகுண்டு வெடித்தது. இதில் விமானத்தில் இருந்த 329 பயணிகள் உயிரிழந்தனர். அதில், 286 பேர் கனடா குடிமக்கள், 27 பேர் பிரிட்டன் நாட்டை சேர்ந்தவர்கள், 24 பேர் இந்தியர்கள். விமான போக்குவரத்து துறையில், நடந்த மோசமான பயங்கரவாத தாக்குதல் சம்பவத்தில் இதுவும் ஒன்றாக கருதப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

கண்ணன்
ஜூன் 20, 2024 07:01

அடுத்த பயங்கரவாத நாடு


Rajendra kumar
ஜூன் 20, 2024 06:17

சுதந்திரம் என்ற பெயரில் கனடா தீவிரவாதிகளின் புகலிடமாக மாறிக் கொண்டுள்ளது. கனடா நாசத்தை நோக்கி போகிறது.


subramanian
ஜூன் 19, 2024 18:53

கனடா தீவிரவாதிகளுக்கு ஆதரவு தருவது அதற்காய் ஆபத்தாக முடியும் .


Palanisamy Sekar
ஜூன் 19, 2024 15:39

எந்த அளவுக்கு இவர்களுக்கு இந்தியாவின் வளர்ச்சிமீது பொறாமை விருந்தால் இப்படி ஒரு செயலை செய்ய துணிவார்கள். இதற்கெல்லாம் இந்தியா ஒருபோதும் அசையாது. இன்னும் தீவிரவாதிகள் அடையாளம் தெரியாத நபர்களால் கொல்லப்படப்போவதை தடுக்கவே முடியாது. இந்த மாதிரியான ஒருநிமிட அனுதாப மரியாதை கனடா நாட்டு பார்லிமென்டில் தொடர்ந்து நடக்கத்தான் போகிறது. அஜீத் தோவல் ன்னு ஒருத்தர் மஹா கில்லாடி என்பதை கனடா இப்போதான் புரிந்துகொள்ளுமோ தெரியல. மௌன அஞ்சலி தொடர்கதை கனடாவில்


RAMAKRISHNAN NATESAN
ஜூன் 19, 2024 14:26

ஒண்ணும் முடியலைன்னா சீனா அருணாச்சலுக்கு பெயர் வைக்கிற மாதிரி கனடா விளையாடிக்கிட்டு இருக்கு. மோடி மட்டும் இல்லன்னா மன்மோகனை முப்பது பப்பூவை கனடா கிழி கிழி ன்னு கிழிச்சிருக்கும் .....


rsudarsan lic
ஜூன் 19, 2024 13:47

இங்கே உள்ள கனடா தூதரை 2 மணி நேரம் நிற்க வைத்து வலைதளத்தில் போட்டால் என்ன?


Sampath
ஜூன் 19, 2024 13:24

புத்தி கெட்டவர்களுக்கு இப்படித்தான் சில நேரங்களில் புத்தி புகட்ட வேண்டும்


JAYACHANDRAN RAMAKRISHNAN
ஜூன் 19, 2024 13:03

கனடா பாகிஸ்தான் ஆக மாறிக் கொண்டு உள்ளது. அமெரிக்க எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.


subramanian
ஜூன் 19, 2024 13:42

பாகிஸ்தான் கார பயல் வளர அமெரிக்கா காரணம். சீனாவை சீண்ட, இந்திய ஆதரவு நாடகம் நடத்தி வருகிறார்கள் அமெரிக்கா.


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை