சர்வதேச மாணவர் சேர்க்கை குறைப்பு; கனடா அறிவிப்பு
ஒட்டவா: 'சர்வதேச மாணவர்களுக்கான படிப்பு அனுமதியை மேலும் கனடா அரசு குறைக்கிறது' என, அந்நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அறிவித்தார்.வட அமெரிக்க நாடான கனடாவில், கல்வி, தொழில், வேலை வாய்ப்புகள் அதிகம். அதனால் உலகம் முழுவதும் இருந்து ஆண்டு தோறும் லட்சக்கணக்கான பேர் கனடாவுக்கு செல்கின்றனர். இதில் இந்தியர்களும் கணிசமான எண்ணிக்கையில் உள்ளனர். சர்வதேச மாணவர்களை படிப்புக்காக, 2023ல் 509,390 பேரையும், 2024ல் முதல் ஏழு மாதங்களில் 175,920 பேரையும் அந்நாடு அனுமதித்துள்ளது. 35 சதவீதம்
இந்நிலையில் சமூகவலைதளத்தில், ஜஸ்டின் ட்ரூடோ வெளியிட்டுள்ள பதிவில், 'சர்வதேச மாணவர்களுக்கான படிப்பு அனுமதியை கனடா அரசு இந்தாண்டு 35 சதவீதம் குறைக்கிறது. 2025ம் ஆண்டு மேலும் 10 சதவீதம் குறையும். குடியேற்ற முறையை தவறாக பயன்படுத்தி, மாணவர்களுக்கு அனுமதி வழங்கினால், கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும்' என குறிப்பிட்டுள்ளார்.ஏற்கனவே, கனடாவுக்கு குடிபெயரும் தற்காலிக வெளிநாட்டு ஊழியர்களின் எண்ணிக்கையை குறைக்க, அந்நாட்டு அரசு முடிவு செய்து பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.