உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / புதிய தலாய்லாமாவை தேர்வு செய்ய எங்கள் அனுமதி வேண்டும்: சொல்கிறது சீனா

புதிய தலாய்லாமாவை தேர்வு செய்ய எங்கள் அனுமதி வேண்டும்: சொல்கிறது சீனா

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பீஜிங்: புதிய தலாய்லாமாவை தேர்வு செய்வதற்கு சீன அரசின் ஒப்புதலை பெற வேண்டும் என அந்நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.திபெத்தை சேர்ந்த புத்த மதத்தலைவர் தலாய் லாமா, சீனாவின் அச்சுறுத்தல் காரணமாக இந்தியாவில் தஞ்சம் புகுந்து ஹிமாச்சல பிரதேசத்தில் வசித்து வருகிறார். அவருக்கு வரும் 6ம் தேதி 90 வது பிறந்த நாள் வருகிறது. இதனையடுத்து அவர் வெளியிட்ட அறிவிப்பில், தலாய் லாமாவின் பரம்பரை தொடரும். அடுத்த தலாய்லாமாவை தேர்வு செய்யும் பெறுப்பு கேடன் போட்ராங் அறக்கட்டளைக்கு மட்டுமே உள்ளது என தெரிவித்து இருந்தார்.இது தொடர்பாக சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் மாவோ நிங் கூறியதாவது: தலாய் லாமா, பஞ்சன் லாமா மற்றும் பிற புத்த மத முக்கிய பிரமுகர்களை தங்கக்கலசத்தில் இருந்து சீட்டு போட்டு தேர்வு செய்வதுடன் அதற்கு சீன அரசின் ஒப்புதலையும் அங்கீகாரத்தையும் பெற வேண்டியது அவசியம் என தெரிவித்து உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Srivilliputtur S Ramesh
ஜூலை 02, 2025 20:46

மத விஷயத்தில் இந்த கம்யூனிஸ்ட் ஆட்கள் ஏன் தலையிடணும் ?? சீனா ஏற்கனவே உடைந்து விடும் என்று சொல்கிறார்கள். அது நடந்தால் நல்லது...


Ramesh Sargam
ஜூலை 02, 2025 20:20

கடவுள் நம்பிக்கை இல்லாத கம்யூனிஸ்ட் சீனா ஏன் இந்த விஷயத்தில் தலையிடவேண்டும்?


சிந்தனை
ஜூலை 02, 2025 18:09

இதோ இங்கே ஒரு ஷாலினி இருக்கிறார் அவரை கூப்பிட்டுக்கோங்க


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை