உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / வர்த்தக போர் எதிரொலி: சந்திப்பிற்கு விரும்பும் சீனா: சொல்கிறார் டிரம்ப்

வர்த்தக போர் எதிரொலி: சந்திப்பிற்கு விரும்பும் சீனா: சொல்கிறார் டிரம்ப்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வாஷிங்டன்: வர்த்தக போர் முற்றியுள்ள நிலையில் சீனா தன்னை சந்திக்க விரும்புவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியுள்ளார். ஆனால், இது குறித்து சீனா எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை.அமெரிக்கா - சீனா இடையிலான வர்த்தக போர் முற்றியுள்ளது. இரு நாடுகளும் மாறி மாறி வரி விதித்து வருகின்றன. சீன பொருட்களுக்கு இதுவரை இருந்த 145 % வரியை 245 % ஆக உயர்த்துவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. சீனாவின் பழிவாங்கும் நடவடிக்கைக்கு பதிலடி கொடுப்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது என வெள்ளை மாளிகை விளக்கம் அளித்தது. அதேநேரத்தில் அமெரிக்காவின் மிரட்டல்களுக்கு எல்லாம் அஞ்ச மாட்டோம் என சீனா கூறியது.இந்நிலையில் அமெரிக்க அதிபர் டிரம்ப் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: மெக்சிகோ அதிபருடன் நேற்று நடந்த சந்திப்பு ஆக்கப்பூர்வமாக இருந்தது. அதேபோல், ஜப்பான் வர்த்தக பிரதிநிதிகளை நான் சந்தித்தேன். இதுவும் பயனுள்ளதாக இருந்தது. சீனா உள்ளிட்ட அனைத்து நாடுகளும் என்னை சந்திக்க விரும்புகின்றன. இன்று இத்தாலி. இவ்வாறு அந்த அறிக்கையில் டிரம்ப் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

Prabu V
ஏப் 18, 2025 03:37

சீனாவின் மிரட்டல்களுக்கு எல்லாம் அஞ்ச மாட்டோம் என சீனா கூறியது. என்ற வார்த்தையில் அமெரிக்கா என்று மாற்றவும்


மீனவ நண்பன்
ஏப் 18, 2025 01:25

சீனாவின் மிரட்டல்களுக்கு எல்லாம் அஞ்ச மாட்டோம் என சீனா கூறியது...


தாமரை மலர்கிறது
ஏப் 17, 2025 23:32

அமெரிக்கா பட்ஜெட் செலவை குறைத்தால், பொருளாதார தேக்கம் வரும். ஆனால் இறக்குமதிக்கு வரி போட்டால், அரசுக்கு வருமானம் கிடைக்கும் என்று ட்ரம்ப் நினைத்தார். அப்போதும் பொருளாதார தேக்கம் வருகிறது. டாலர் மதிப்பு குறைகிறது. முதலீட்டாளர்கள் அமெரிக்காவை விட்டு வெளியேறுகிறார்கள். பணவீக்கம் அதிகரிக்கிறது. காரணம் மிகஅதிக பணம் அச்சடிப்பு தான். இதை தான் இங்கு ஸ்டாலின் பணம் அச்சடிக்கமுடியாமல், கடன் வாங்கி செலவு செய்து வருகிறார். தமிழ்நாடு திவால் ஆகும் நாள் வெகுதொலைவில் இல்லை.


Srinivasan Krishnamoorthy
ஏப் 18, 2025 10:16

china is coming to way. their ports are piled with undelivered shipments America cancelled most orders due to increased prices. unless china absorbs cost fue to high tariffs they cannot sell in US and Europe.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை