உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / அரிய வகை காந்தங்களை தர மறுத்தால் சீனாவுக்கு 200 சதவீத வரி: அமெரிக்க அதிபர் டிரம்ப்

அரிய வகை காந்தங்களை தர மறுத்தால் சீனாவுக்கு 200 சதவீத வரி: அமெரிக்க அதிபர் டிரம்ப்

வாஷிங்டன் : அரிய வகை காந்தங்களை அமெரிக்காவுக்கு வழங்காவிட்டால், 200 சதவீதம் வரி விதிக்கப்படும் என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மீண்டும் சீனாவுக்கு மிரட்டல் விடுத்துள்ளார். தானியங்கி வாகனங்கள், மின்னணு சாதனங்கள் மற்றும் பாதுகாப்பு துறை உள்ளிட்ட பல்வேறு தொழில்களில் மிக முக்கியமாக அரிய வகை காந்தங்கள் பயன்படுத்தப்படுகின்றன.இந்த முக்கிய கனிமங்களின் உற்பத்தியில், நம் அண்டை நாடான சீனா ஏகபோக உரிமையை கொண்டுள்ளது. இதன் காரணமாக, உலக வர்த்தகத்தில் தனி செல்வாக்குடன் சீனா உள்ளது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=pgk6s4yv&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்நிலையில், அரிய வகை காந்தங்களின் ஏகபோக உரிமையை தன் கட்டுப்பாட்டில் புத்திசாலித்தனமாக சீனா வைத்துள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பாராட்டு கூறியுள்ளார். அதே வேளையில், அமெரிக்காவுக்கு இந்த அரிய வகை காந்தங்களை வழங்கவில்லை என்றால், சீனா மீது 200 சதவீதம் வரை வரி விதிக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து டிரம்ப் நேற்று கூறியுள்ளதாவது:

அமெரிக்கா - சீனா இடையே சிறப்பான உறவு இருந்தாலும், சீனாவை விட அமெரிக்கா அதிக செல்வாக்கை கொண்டுள்ளது. அவர்களை விட எங்களிடம் மிகப்பெரிய மற்றும் சிறப்பான அஸ்திரங்கள் உள்ளன. நான் அந்த அஸ்திரங்களை பயன்படுத்தினால், அது சீனாவையே அழித்து விடும். ஆனால், நான் அந்த அஸ்திரங்களை உபயோகிக்கப் போவதில்லை. அரிய வகை காந்தங்களை அமெரிக்காவுக்கு சீனா வழங்க வேண்டும்; அவர்கள் அவ்வாறு வழங்கவில்லை என்றால், நாம் அவர்களிடம் 200 சதவீதம் வரி அல்லது அதற்கு ஈடாக எதையாவது வசூலிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். இரு தரப்பினரும் வரி விதிப்புகளை அதிகரிப்பதை தற்காலிகமாக நிறுத்தி வைத்திருந்தாலும், அரிய வகை கனிமங்கள் குறித்த சர்ச்சையால் பதற்றம் நீடிக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 14 )

Shivakumar
ஆக 27, 2025 13:05

டொனால்ட் டக் தனது புத்தியை காண்பிக்க ஆரம்பித்துவிட்டார். இந்த உருட்டல் மிரட்டல் எல்லாம் சீனாவிடமும் இந்தியாவிடமும் ஆகாது ... இனிமேல் அமெரிக்காவுக்கு ஊஊ...தான்.


hariharan
ஆக 27, 2025 12:06

இதேபோல கடந்த ட்ரம்ப் ஆட்சியில் இந்தியாதான் தாயாரித்த ஹைட்ராக்ஸி குளோரோக்குவின் மருந்தை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியை தடை செய்து வைத்திருந்ததை இந்தியாவை மிரட்டினார். இவருக்கு எப்பொழும் யாரையாவது மிரட்டுவதே தொழிலாக இருக்கிறது. மிகவும் மோசமான அமெரிக்கா அதிபர் என்ற பெயருடன் வலம் வருகிறர்.


Anand
ஆக 27, 2025 11:53

என்ன கொடுமை, கத்தியை காட்டி வழிப்பறி செய்யும் திருடனை விட கேவலமான ஜென்மம்.


SP
ஆக 27, 2025 11:30

இவர் ஒரு அதிபரா? அல்லது ரௌடியா? கந்து வட்டி வசூல் பண்ணுவது போல் நிர்வாகம் என்றபெயரில் நாசமாக்கிக் கொண்டிருக்கிறார். உடனடியாக அமெரிக்க மக்கள் புரட்சி செய்து இந்த அதிபரை ஓட ஓட விரட்ட வேண்டும்.


VSMani
ஆக 27, 2025 11:27

நான் அந்த அஸ்திரங்களை பயன்படுத்தினால், அது சீனாவையே அழித்து விடும். நான் என்ற அகம்பாவம், பெருமை, மேட்டிமை அந்த நபரையே அழித்துவிடும். இவர் மட்டும்தான் அமெரிக்கா அல்ல. இவரது பதவிக்காலம் முடிந்தால் இவர் ஒரு சாதாரண அமெரிக்க பிரஜை மாத்திரமே. ஒரு businessman தொழில் செய்பவரை அதிபர் ஆக்கினால் செயல்பாடுகள் இப்படித்தான் இருக்கும் .


அப்பாவி
ஆக 27, 2025 11:09

அமெரிக்காவுக்கு வேண்டாத ஆணியெல்லாம் ஏற்றுமதி செய்யும் சீனா இதை மட்டும் செய்யாதாம். அதான் 200 பர்சண்ட். ரஷியாவிடமிருந்து ஆயில் வாங்குறதுக்கும் சேத்து.


Balamurugan
ஆக 27, 2025 10:15

அமெரிக்க மக்கள் மற்றும் குடியரசு கட்சியினர் இந்த பைத்தியக்காரனை உடனே அகற்றாவிட்டால் அமெரிக்காவுக்கு தான் அழிவு.


SUN, PDKT
ஆக 27, 2025 08:46

உலக நாடுகளில் சர்வாதிகாரிகளாக இருந்த நாட்டின் அதிபர்கள் கூட இப்படி உலக நாடுகளை பகிரங்கமாக மிரட்டியதில்லை. சோவியத் யூனியன் பிரிவினை கோர்பசேவாவால் நடந்தது. யூ.எஸ்.ஏ வின் அழிவு டிரம்ப் கையால் நடக்கப் போகிறது.


V RAMASWAMY
ஆக 27, 2025 08:05

உலகிலேயே அமெரிக்கா ஒன்று தான் நாடா அவர்கள் மட்டும் தான் நலமுற வேண்டுமா , என்ன அடாவடித்தனம்?


Rajasekar Jayaraman
ஆக 27, 2025 07:42

அமெரிக்காவுக்கு ட்ரம்பால் அழிவு நிச்சயம்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை