உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / சீனாவின் மிக ஆபத்தான டி.எப்.-, - 5பி ஏவுகணை

சீனாவின் மிக ஆபத்தான டி.எப்.-, - 5பி ஏவுகணை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பீஜிங்: நம் அண்டை நாடான சீனா, அணு ஆயுதங்களை குவித்து வருகிறது. சீன ராணுவம் சமீபத்தில் 'டி.எப்., - 5பி' எனும் சக்தி வாய்ந்த அணு ஆயுதத்தை ஏந்திச் செல்லும் ஏவுகணையை தயாரித்துஉள்ளது. இதன் விபரங்கள் ரகசியமாகவே வைக்கப்பட்டிருந்தன. இந்நிலையில், அரசு ஊடகமான சி.சி.டி.வி.,யில் இந்த அணு ஆயுதத்தின் விபரங்கள் வெளியாகியுள்ளன.அதன்படி, இந்த ஏவுகணை 12,000 கி.மீ., துாரம் வரை பயணிக்கும் ஆற்றல் உடையது. இதனால், அமெரிக்கா, ஐரோப்பாவின் பல பகுதிகளை எளிதில் தாக்க முடியும். இரண்டு அணு ஆயுதங்களை வெவ்வேறு இலக்குகளுக்கு ஒரே சமயத்தில் சுமந்து செல்லும் திறன் கொண்டது.இரண்டாம் உலகப் போரில், ஜப்பான் மீது அமெரிக்கா பயன்படுத்திய அணுகுண்டை காட்டிலும் 200 மடங்கு வீரியம் கொண்டது என, அதில் கூறப்பட்டுள்ளது.சீனாவிடம் தற்போது 600 அணு ஆயுதங்கள் உள்ளன. வரும் 2030க்குள் இதை, 1,000 ஆக உயர்த்த திட்டமிட்டுள்ளது. நம் நாட்டில், 180 அணு ஆயுதங்கள் உள்ளன.தகவல் துளி: சீனாவிடம் தற்போது, 600 அணு ஆயுதங்கள் உள்ளன. வரும் 2030க்குள், இதை, 1,000 ஆக உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது. நம் நாட்டில், 180 அணு ஆயுதங்கள் உள்ளன.ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலில் அமெரிக்கா, ரஷ்யா, சீனா, பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் நிரந்தர உறுப்பினர்களாக உள்ளன. இவற்றுக்கு வீட்டோ அதிகாரம் உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 18 )

Rathna
ஜூன் 06, 2025 14:22

சீன மிகவும் ஆபத்தான கம்மி நாடு. கம்மிகள் மக்கள் நலனில் அக்கறை கொள்வதில்லை. உயிர் கொல்லி ஆயுதங்கள் மட்டும் உலக அழிவுக்கான அனைத்து செயல்களையும் சீனன் செய்வான்.


RAMESH
ஜூன் 06, 2025 12:51

சீனா பொருட்கள் எல்லாம் வேஸ்ட்... பாகிஸ்தான் வாங்கட்டும்


Sankaran Kumar
ஜூன் 06, 2025 11:53

யாரும் சீனாவை குறைந்து மதிப்பிடவில்லை. ஆனால் அவர்களுடைய ஆயுதங்கள் பாகிஸ்தானில் சுத்தமாக செயல்படவில்லை என்பது சீனா தான் கவலைப்பட வேண்டும் நாம் இல்லை.


ராமகிருஷ்ணன்
ஜூன் 06, 2025 11:41

சப்பை மூக்கனை எப்போதும் நம்பவே கூடாது. இந்திய போர் முறைகளை பார்த்து விட்டு பயந்து விட்டான். தனது பலத்தை நிரூபிக்க புதுசா முயற்சி செய்கிறது. மோடிஜி மிக எளிதாக சீனாவை சமாளிப்பார்.


Sekar
ஜூன் 06, 2025 11:04

நாம் சீன தொழில் நுட்பங்களை குறைத்து மதிப்பிட வேண்டாம். அவர்கள் பாகிஸ்தானிடம் கொடுத்த ஆயுதங்கள், பாகிஸ்தான்-அமெரிக்கா மறைமுக நட்பை கருத்தில் கொண்டு, தங்கள் தொழில் நுட்பம் திறன் மிகுந்த ஆயுதங்களை கொடுக்காமல் இருந்திருக்கலாம்.நமது இலக்கு வளர்ச்சியை நோக்கி மட்டும் இருக்க வேண்டும். நாம் வளர்ந்து கொண்டிருக்கிறோம் என்பது வெறும் பேப்பர் அளவில் மட்டுமே உள்ளது. அதன் பிரதிபலிப்பு நம் நாட்டின் கரன்சியின் மதிப்பில் வரவேண்டும். அதன்படி வளர்ந்த நாடுகளை ஒப்பிடும்போது நாம் மிகவும் பின்தங்கியே இருக்கிறோம்.


Anand
ஜூன் 06, 2025 10:44

பாகிஸ்தானுக்கு ஒரு பத்து பார்சல்.....


SIVA
ஜூன் 06, 2025 09:13

சீனா பாகிஸ்தானிடம் இருந்து விலகி நிற்பது நல்லது, இல்லை என்றால் பாக்கிஸ்தான் போன்று சீனாவும் ராணுவ கொள்ளையர்களின் கூடாரமாகி விடும் அப்புறம் வளர்ச்சி இருக்காது ....


Iyer
ஜூன் 06, 2025 10:04

பாகிஸ்தானில் - "பாக் மக்கள்" ஒரு கட்சியிலும் -"பாக் ராணுவம்" - ஒரு கட்சியிலும் உள்ளனர். சீனாவில் 3 கட்சிகள் - "சீன மக்கள்" - "சீன ராணுவம்" - "கம்யூனிஸ்ட் பார்ட்டி - ஆகிய 3 .


நிக்கோல்தாம்சன்
ஜூன் 08, 2025 08:20

சீனாவிலும் பலமடங்கு மதமாற்றம் நிகழ்ந்து வருகிறது , என்ன அது வெளியில் தெரிவதில்லை , அந்த நாடு துண்டாடப்படுவதற்கு உலகின் மிகப்பெரிய வெள்ளைக்காரபிசினெஸ் நாடும் , அதற்க்கு அடிபொடியாக பெண்களை ஏற்றுமதி செய்யும் நாடும் இனைந்து வேலை செய்து வருவது குறித்து எந்த கட்டுரையும் இல்லை


N.Purushothaman
ஜூன் 06, 2025 08:41

அவனுங்களோட சோதனை எந்த அளவிற்கு தரமானது என்பது அவனுங்களுக்கு மட்டுமே தெரியும் ....


Kumar Kumzi
ஜூன் 06, 2025 08:29

சீனாவின் இந்த பொம்மை பட்டாசுகள் சீனாக்குள்ளேயே வெடித்து சிதறி அவர்களே அழிவார்கள்


Iyer
ஜூன் 06, 2025 08:20

ஏற்கனவே - ஷீ ஜின்பிங்கை - எதிர்த்து ராணுவம் புரட்சி செய்ய ஆரம்பித்துவிட்டது. பாரத மக்களைப்போல் சீன மக்கள் நாட்டுப்பற்று உள்ளவர்கள் இல்லை. பாரதம் சீனாவை ஆக்ரமித்தால் - சீன மக்கள் பாரத ஆட்சியை வரவேற்ப்பார்கள் என்பதில் துளியும் சந்தேகம் இல்லை


சமீபத்திய செய்தி