உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / வங்கதேச இடைக்கால அரசுக்கு சீனா திடீர் ஆதரவு

வங்கதேச இடைக்கால அரசுக்கு சீனா திடீர் ஆதரவு

பீஜிங் : வங்கதேச இடைக்கால அரசுக்கு முழு ஆதரவளிப்பதாக சீன அதிபர் ஷி ஜின்பிங் உறுதி அளித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=5hj5dbnj&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0நம் அண்டை நாடான வங்கதேசத்தில், 2024 ஆகஸ்டில், மாணவர்களின் போராட்டம் தீவிரமடைந்ததை அடுத்து, அவாமி லீக் கட்சி தலைவர் ஷேக் ஹசீனா, பிரதமர் பதவியை ராஜினாமா செய்து, நம் நாட்டுக்கு தப்பி வந்தார்.இதையடுத்து அந்நாட்டில், பொருளாதார நிபுணர் முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு பதவியேற்றது. வங்கதேசத்தில் சிறுபான்மையினராக உள்ள ஹிந்துக்கள் தாக்கப்படுவதற்கு நம் வெளியுறவு அமைச்சகம் கண்டனம் தெரிவித்த நிலையில், உள்நாட்டு விவகாரத்தில் தலையிட வேண்டாம் என, அந்நாட்டு அரசு எச்சரித்தது.

முழு ஆதரவு

நம் நாட்டுடனான வங்கதேசத்தின் உறவு மோசமடைந்து வரும் சூழலில், அந்நாட்டிற்கு, சீனா ஆதரவு கரம் நீட்டியுள்ளது. ஏற்கனவே, சீனாவின் முக்கிய நிறுவனங்கள் வங்கதேசத்தில் கோடிக்கணக்கில் முதலீடு செய்துள்ளன.சீனாவுக்கு சொந்தமான சிறப்பு விமானத்தில், அந்நாட்டுக்கு நான்கு நாட்கள் அரசு முறை பயணமாக, வங்கதேச இடைக்கால அரசின் தலைமை ஆலோசகர் முகமது யூனுஸ் கடந்த 26ல் சென்றார். பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற அவர், தலைநகர் பீஜிங்கில், சீன அதிபர் ஷி ஜின்பிங்கை நேற்று சந்தித்து பேசினார்.அப்போது, வர்த்தகம், முதலீடு, விவசாயம், உட்கட்டமைப்பு, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, ரோஹிங்கியா பிரச்னையை தீர்ப்பது உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து, இரு நாட்டு தலைவர்கள் விவாதித்தனர்.இந்த சந்திப்பு குறித்து, முகமது யூனுஸின் பத்திரிகை செயலர் ஷபிகுல் ஆலம் கூறுகையில், ''முகமது யூனுஸ் - ஜின்பிங் சந்திப்பு வெற்றிகரமாக இருந்தது. வங்கதேச இடைக்கால அரசுக்கு முழு ஆதரவு அளிப்பதாக ஜின்பிங் உறுதியளித்தார்.

மைல்கல்

''சீன முதலீட்டை ஊக்குவிக்கவும், சீன உற்பத்தி நிறுவனங்களை வங்கதேசத்திற்கு மாற்றவும் உதவுவதாக அதிபர் ஜின்பிங் தெரிவித்தார். இந்த சந்திப்பு சீனா - வங்கதேச கூட்டணியில் மற்றொரு மைல்கல்,” என்றார்.இந்த சந்திப்பைத் தொடர்ந்து, சீனாவின் பொருளாதாரம் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்களை சந்திக்க முகமது யூனுஸ் திட்டமிட்டுள்ளார். வழக்கமாக, சிறிய குழுவுடன் வெளிநாட்டு பயணம் மேற்கொள்ளும் முகமது யூனுஸ், இந்த முறை வெளியுறவு, மின்சாரம், எரிசக்தி, கனிமங்கள்; சாலைப் போக்குவரத்து மற்றும் பாலங்கள் மற்றும் ரயில்வே துறை வல்லுநர்கள் குழுவை அழைத்துச் சென்றுள்ளார்.

ஒன்பது ஒப்பந்தங்கள்

வங்கதேசம் - சீனா இடையே, பொருளாதாரம், தொழில்நுட்பம், பழமையான இலக்கியங்களை பதிப்பிப்பது, மொழி மாற்றம் செய்வது, ஊடகத் துறையில் தகவல் பரிமாற்றம், கலாசார பரிமாற்றம், சுகாதாரத் துறையில் இணைந்து செயல்படுவது உட்பட ஒன்பது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

மாயவரம் சேகர்
மார் 29, 2025 10:17

வங்க தேசம் சீனாவிடம் அடகு வைக்கும் முயற்சி ஆரம்பமாகியது.சீனாவிடம் கடன் வாங்கிய நாடுகளின் கதி என்ன என தெரிந்தாலும் முகம்மது யூனஸ் சுயநலம் இந்திய இந்து வெறுப்பின் காரணமாக நாட்டையே அங்கு வைக்கிறார். பையன் ஆட்சியில் அமெரிக்காவுக்கு தர மறுத்த இடத்தை இப்போது சீனாவிற்கு கொடுக்கலாம். இந்தியாவிற்கு தலைவலி உண்டாக்கலாம். அடுத்தது பாகிஸ்தான் சீனாவிடம் முழுதாக அடிபணீயும் காலம் நெருங்கி விட்டது .சீனாவிடம் இலங்கை பட்டபாடு தெரியவில்லை போல


நிக்கோல்தாம்சன்
மார் 29, 2025 04:54

முதலில் பாகிஸ்தான் , இப்போ பங்களா , இவனுங்க கால் வைக்கும் இடமெல்லாம் விளங்கிடும் போல


SUBBU,MADURAI
மார் 29, 2025 04:51

இன்னும் சில நாட்களில் இந்த கொடுங்கோலன் முகம்மது யூன்ஸ் விரைவில் நாட்டை விட்டு ஓடி விடுவான் அல்லது அநத நாட்டு இராணுவத்தால் கைது செய்யப் படுவான் இந்த இரண்டில் ஏதாவது ஒன்று கட்டாயம் நடக்கும்.


கிஜன்
மார் 29, 2025 03:42

விளக்கு எதுவுமே செய்ய வேண்டாம் ...வீட்டில் பூச்சிகள் தானாக சென்று விழும் .... பாக், இலங்கை, மாலத்தீவுகள், இப்போ வங்கதேசம் ....


சமீபத்திய செய்தி