சீன ராணுவ விஞ்ஞானி ஊழல் குற்றச்சாட்டில் கைது
பீஜிங்:சீனாவின் உயர்மட்ட ராணுவ விஞ்ஞானி யூ பாக்சின், ஊழல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டார்.நம் அண்டை நாடான சீனாவின் ஹாங்சோவில் உள்ள ஜெஜியாங் பல்கலைக்கழகத்தின் விமானவியல் மற்றும் விண்வெளி பிரிவில், புகழ்பெற்ற பேராசிரியராக உள்ள யூ பாக்சின், 'ஜெஜியாங் கிரேட் மைக்ரோவேவ் டெக்னாலஜி' நிறுவனத்தின் தலைவராகவும் இருந்து வருகிறார். ஆயுத அமைப்புகளுக்கு தேவையான செமிகண்டக்டர்களை உருவாக்குவதில், இவர் நிபுணத்துவம் பெற்றவர் என்று கூறப்படுகிறது. சீனாவின் பாதுகாப்பு நவீனமயமாக்கல் மற்றும் செயற்கைக்கோள் தொழில்நுட்பத்திற்கும் , அந்நாட்டு ராணுவ உபகரணங்களுக்கும் தேவையான மின்னணு பொருட்களை இவரது நிறுவனம் வினியோகித்து வருகிறது. இந்நிலையில், அந்நாட்டு ஊழல் எதிர்ப்பு அமைப்பால் ஊழல் குற்றச்சாட்டில் யூ பாக்சின் கைது செய்யப்பட்டுள்ளார்.