உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / கிளாசிக் செஸ் தொடர்: பிரக்ஞானந்தா முதலிடம்

கிளாசிக் செஸ் தொடர்: பிரக்ஞானந்தா முதலிடம்

லண்டன்: லண்டனில், கிளாசிக் செஸ் தொடர் நடக்கிறது. மொத்தம் 119 பேர் பங்கேற்றனர். இந்தியா சார்பில் பிரக்ஞானந்தா 20, பிரனவ் ஆனந்த் 19, இனியன் 23, உள்ளிட்டோர் விளையாடினர். இதன் 9வது சுற்றில் பிரக்ஞானந்தா, இஸ்ரேலின் இல்யா ஸ்மிரின் மோதினர். இதில் கருப்பு நிற காய்களுடன் விளையாடிய பிரக்ஞானந்தா, 18வது நகர்த்தலில் 'டிரா' செய்தார். இந்தியாவின் இனியன் (வெள்ளை), பிரனவ் ஆனந்த் (கருப்பு) மோதிய மற்றொரு 9வது சுற்று போட்டி 48வது நகர்த்தலில் 'டிரா' ஆனது. ஒன்பது சுற்றுகளின் முடிவில் செர்பியாவின் வெலிமிர் ஐவிக், இங்கிலாந்தின் அமீத் காசி, பிரக்ஞானந்தா தலா 7.0 புள்ளிகளுடன் முதலிடத்தை பகிர்ந்து கொண்டனர். மற்ற இந்திய வீரர்களான பிரனவ் ஆனந்த் (6.5 புள்ளி), இனியன் (6) முறையே 4, 9வது இடத்தை பகிர்ந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









புதிய வீடியோ