உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / திருச்சியில் ரூ. 2 ஆயிரம் கோடியில் Jabil தொழிற்சாலை: ஸ்டாலின் முன்னிலையில் ஒப்பந்தம்

திருச்சியில் ரூ. 2 ஆயிரம் கோடியில் Jabil தொழிற்சாலை: ஸ்டாலின் முன்னிலையில் ஒப்பந்தம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வாஷிங்டன்: திருச்சியில் Jabil நிறுவனம் ரூ.2 ஆயிரம் கோடி முதலீடு செய்ய புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.முதலீடுகளை ஈர்க்கும் வகையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் அமெரிக்கா சென்றுள்ளார். அங்கு முதலீட்டாளர்களை சந்தித்து அழைப்பு விடுத்து வருகிறார். பல்வேறு நிறுவனங்கள் முதலீட்டுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொண்டு வருகின்றன.

5 ஆயிரம் பேருக்கு வேலை

இந்நிலையில், இன்று(செப்.,10) சமூகவலைதளத்தில் முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவில், 'தமிழகத்தின் தொழில் வளர்ச்சிக்காக முக்கிய முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளன. திருச்சியில் Jabil நிறுவனம் ரூ.2 ஆயிரம் கோடி முதலீடு செய்ய புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. இதனால் 5 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.காஞ்சிபுரத்தில் ராக்வெல் ஆட்டோமேஷன் நிறுவனம் ரூ.666 கோடி முதலீடு செய்ய புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. இந்த தொழிற்சாலை மூலம் 365 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். இளைஞர்களுக்கு திறன் பயிற்சி வழங்க ஆட்டோ டெஸ்க் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது' எனக் குறிப்பிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

karupanasamy
செப் 10, 2024 13:03

சீனிடா சக்கரைடா வெல்லக்கட்டிடா பேப்பர்ல எழுதி நக்குடா


vbs manian
செப் 10, 2024 11:54

நமது ஊர்களில் தெருவுக்கு தெரு டீக்கடை உள்ளது போல் அமெரிக்காவில் தெருவுக்கு ஒரு கம்பெனி உள்ளது.


சமூக நல விரும்பி
செப் 10, 2024 10:42

எல்லாம் ஒப்பந்த அளவில் தான் உள்ளது. அவர்கள் இங்கு வரும் போது இவர்கள் கேட்கும் கட்டிங் பார்த்து ஓடி விடுவர்


Just imagine
செப் 10, 2024 10:39

அரசு செலவினங்களில் உதாரணமாக, ஒரு மாதம் மகளிர் உரிமைத்தொகை ரூ 1000 கோடி ..... ஒரு வருடத்திற்கு 12,000 கோடி செலவு . வருடாவருடம் இது கூடுமே அன்றி குறையாது .... இதை ஈடுகட்ட சில ஆயிரம் கோடிகள் தொழில் முதலீடு புரிந்துணர்வு ஒப்பந்தம் மட்டும் பத்தாது ........ பல லட்சம் கோடிகள் புதிய தொழில் முதலீடுகள் வந்தால் தான் வரியின் மூலமாக 12,000 கோடி செலவு ஈடுசெய்யமுடியும் ...


ராமகிருஷ்ணன்
செப் 10, 2024 10:24

வெறும் போட்டோ போதாது. அமெரிக்க தொழில் அதிபர்களுடன் பேசும் தெளிவான ஒரே ஒரு வீடீயோ போடுங்க பார்ப்போம்.


vbs manian
செப் 10, 2024 10:17

அமெரிக்காவில் கோடி கட்டி பறக்கும் எந்த பெரிய நிறுவனங்களுடன் எந்த ஒப்பந்தமும் இல்லை. ஓடைகளின் கரையில் நாரை கொத்தி கொத்தி புழு பூச்சிகளை விழுங்கும். கனா கண்டேன் தோழி.


xyzabc
செப் 10, 2024 10:09

வரும் தேர்தலுக்கு நிறைய மசாலா


RAMAKRISHNAN NATESAN
செப் 10, 2024 09:02

புனேயில் ஏற்கனவே வேறு ஒரு தயாரிப்பு யூனிட் உள்ளது ..... Jabil Pune Mechanics delivers technological and innovative solutions to the world's leading brands in mobile manufacturing. இது உட்பட சுற்றுப்புற சூழலுக்கு ஆபத்து, உண்டா இல்லையா என அனைத்து முதலீடுகளுக்கும் வெள்ளை அறிக்கை தேவை .....


ManiK
செப் 10, 2024 08:56

Instalmentல நியூஸ் release பண்ணி மக்கள பரபரப்பா வச்சிருக்கனும்.. இல்லைனா நம்பல மறந்திருவானுங்க. TR Balu வளர்ப்புனா சும்மாவா!


G Mahalingam
செப் 10, 2024 08:43

ஏற்கனவே இந்த நிறுவனங்கள் இந்தியாவில் புனா சென்னையில் கடந்த 15 ஆண்டாக உள்ளது. அமெரிக்க போய்தான் கையெழுத்து போட வேண்டிய அவசியமில்லை.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை