உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் /  எக்ஸ் நிறுவனத்துக்கு ரூ.1,259 கோடி அபராதம்

 எக்ஸ் நிறுவனத்துக்கு ரூ.1,259 கோடி அபராதம்

லண்டன்: பிரபல தொழிலதிபர் எலான் மஸ்கிற்கு சொந்தமான, 'எக்ஸ்' சமூக ஊடக நிறுவனத்துக்கு ஐரோப்பிய ஒன்றிய ஒழுங்குமுறை ஆணையம், 1,259 கோடி ரூபாய் அபராதம் விதித்துள்ளது. உலகின் பெரும் பணக்காரர்களில் ஒருவரும், 'டெஸ்லா' நிறுவனருமான எலான் மஸ்க், 'டுவிட்டர்' சமூக ஊடக நிறுவனத்தை 2022ல் வாங்கி, பின், 'எக்ஸ்' என பெயர் மாற்றினார். இந்த ஊடகத்தில், பயனர் பாதுகாப்பு குறைபாடுகள் இருப்பதாக பிரேசில், ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகள் தெரிவித்து வருகின்றன. இந்நிலையில், டி.எஸ்.ஏ., எனப்படும் டிஜிட்டல் சேவைகள் சட்ட விதிகளை மீறியதாக, 'எக்ஸ்' நிறுவனத்துக்கு ஐரோப்பிய ஒழுங்குமுறை ஆணையம், 1,259 கோடி ரூபாய் அபராதம் விதித்துள்ளது. பணம் செலுத்தினால் கிடைக்கும், 'நீல நிற டிக்' கிடைக்கும் என பயனர்களை ஏமாற்றியதாக, ஒழுங்குமுறை ஆணையம் குற்றம் சாட்டியுள்ளது. மேலும், விளம்பர தரவுகளில் போதிய வெளிப்படைத்தன்மை இல்லை என்றும், பொது தகவல்களை ஆராய்ச்சியாளர்கள் அணுக அனுமதிக்கவில்லை என்றும் ஆணையம் தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை