கனடா இந்தியர்களுக்கு எதிரான இனவெறி வாசகத்தால் சர்ச்சை
டொரன்டோ: அமெரிக்காவில் எச்1பி விசா விண்ணப்பக் கட்டணத்தால் பாதிக்கப்படும் திறன்மிக்க இந்திய ஊழியர்களை வரவேற்போம் என்று வட அமெரிக்க நாடான கனடாவின் பிரதமர் மார்க் கார்னி சமீபத்தில் தெரிவித்திருந்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக மிசிசாகாவில் உள்ள ஒரு குழந்தைகள் பூங்கா அருகே 'இந்திய எலிகள்' என்று இனவெறி வாசகம் எழுதப்பட்டிருந்தது. இதைக் கண்ட கனடா வாழ் இந்தியர்களும், ஹிந்து அமைப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.