உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / அடுத்த தலாய் லாமா யார்; வாரிசை தேர்வு செய்ய மறுப்பு; அறக்கட்டளைக்கு அளித்தார் அதிகாரம்!

அடுத்த தலாய் லாமா யார்; வாரிசை தேர்வு செய்ய மறுப்பு; அறக்கட்டளைக்கு அளித்தார் அதிகாரம்!

கான்பெரா: தற்போதைய 14வது தலாய் லாமா, புதிய வாரிசை அறிவிக்க மறுத்துவிட்டார். புதிய தலைவரைத் தேர்ந்தெடுக்க திபெத் அறக்கட்டளைக்கு அதிகாரம் அளித்தார்.நம் அண்டை நாடான திபெத், 1959ம் ஆண்டு முதல், சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ளது. புத்த மத தலைவரான தலாய்லாமா தான் இந்த நாட்டின் ஆட்சியாளர். ஆனால் சீனாவின் அச்சுறுத்தல் காரணமாக, தற்போதைய தலாய் லாமா, சிறுவயதாக இருந்த போதே இந்தியாவில் அரசியல் தஞ்சம் புகுந்து விட்டார். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=a57qtfkd&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0அவருடன் வந்த லட்சக்கணக்கான திபெத் மக்கள், இந்தியாவில் வசிக்கின்றனர். இவர்கள், திபெத் மீதான சீனாவின் ஆட்சியை ஏற்பதில்லை. தங்களுக்கென நாடு கடந்த திபெத் அரசாங்கத்தை அமைத்து நிர்வாகம் செய்து வருகின்றனர். தற்போது மத தலைவராக இருக்கும் தலாய்லாமா, 14வது தலாய்லாமா ஆவார். இவர் இந்த மாதம் வாரிசை அறிவிக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில், இன்று (ஜூலை 02) அவர் வாரிசை தேர்வு செய்ய மறுப்பு தெரிவித்தார். அவர் புதிய தலைவரைத் தேர்ந்தெடுக்க திபெத் அறக்கட்டளைக்கு அதிகாரம் அளித்தார். இது குறித்து தலாய் லாமா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கடந்த 2011ம் ஆண்டு செப்டம்பர் 24ம் தேதியே புதிய தலாய் லாமாவை அங்கீகரிப்பதற்கான நடைமுறை குறித்துத் தெளிவாக விளக்கி அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. புதிய தலாய் லாமாவை தேர்வு செய்யும் பொறுப்பு, தலாய் லாமாவின் அலுவலகமான கடென் போட்ராங் அறக்கட்டளையின் உறுப்பினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது. அவர்கள் திபெத்திய புத்த மரபுகளின் பல்வேறு தலைவர்களை சந்தித்து கலந்து ஆலோசிக்க வேண்டும். யாருக்கும் அதிகாரம் இல்லை எதிர்கால மறுபிறப்பை அங்கீகரிக்கும் முழு அதிகாரம் கடென் போட்ராங் அறக்கட்டளைக்கு மட்டுமே உள்ளது. இந்த விஷயத்தில் தலையிட வேறு யாருக்கும் எந்த அதிகாரமும் இல்லை. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.சீனா என்ற வார்த்தையை அவர் குறிப்பிடவில்லை என்ற போதிலும், அவர், எதிர்காலத்தில் புதிய தலாய் லாமாவை தேர்வு செய்யும் பொறுப்பு வேறு யாருக்கும் இல்லை என்பதை மிகத் தெளிவுப்படுத்தி உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Nada Rajan
ஜூலை 02, 2025 18:20

இவர் வாரிசு தேர்வு செய்தால் என்ன !தேர்வு செய்யாவிட்டால் என்ன... அந்த அறக்கட்டளைக்கு அதிகாரம் கொடுப்பது ஏன்?


Nada Rajan
ஜூலை 02, 2025 18:20

இவர் பலமுறை சர்ச்சையில் சிக்கியவர் ஆச்சே.. சமீபத்தில் சிறுவனுக்கு முத்தம் கொடுத்து மாட்டிய நிகழ்வு ஞாபகத்திற்கு வருகிறது