உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / அமெரிக்கா பாரில் பயங்கர துப்பாக்கிச்சூடு; 4 பேர் பலி; மர்ம நபருக்கு வலை

அமெரிக்கா பாரில் பயங்கர துப்பாக்கிச்சூடு; 4 பேர் பலி; மர்ம நபருக்கு வலை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வாஷிங்டன்: அமெரிக்காவில் உள்ள பார் ஒன்றில் மர்மநபர் திடீரென நடத்திய துப்பாக்கிச்சூட்டில், 4 பேர் கொல்லப்பட்டனர். துப்பாக்கிச்சூடு நடத்திய நபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.அமெரிக்காவில் உள்ள மொன்டானாவின் அனகோண்டாவில் உள்ள தி ஆவ்ல் பாரில் மர்மநபர் ஒருவர் புகுந்து சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தினார். இதையடுத்து பாரில் மது அருந்தி கொண்டு இருந்தவர்கள் ஓட்டம் பிடித்தனர். இந்த சம்பவத்தில் 4 பேர் கொல்லப்பட்டனர்.மேலும் பலர் காயம் அடைந்தனர். இவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். தாக்குதலுக்கான காரணம் குறித்து விசாரணை நடந்து வருகிறது. துப்பாக்கிச்சூடு நடத்திய மர்மநபர் தப்பி ஓட்டம் பிடித்தார். அவர் தலைமறைவாக உள்ளார். அவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.துப்பாக்கிச்சூடு நடத்திய நபர் 45 வயதான மைக்கேல் பால் பிரவுன் என அடையாளம் காணப்பட்டுள்ளார். இவர் பாருக்கு அடுத்த வீட்டில் வசித்து வந்தார் என வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.இந்த சம்பவம் குறித்து, அப்பகுதியில் கபே நடத்தி நெல்சன் கூறியதாவது: நாங்கள் மொன்டானாவைச் சேர்ந்தவர்கள். எனவே துப்பாக்கிகள் எங்களுக்கு புதிதல்ல. ஆனால் இந்த தூப்பாக்கிச்சூடு சம்பவத்தில் மக்கள் அனைவரும் வீட்டிற்குள் முடங்கி உள்ளனர். எல்லோரும் மிகவும் பதட்டமாக உள்ளனர், என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

Ramesh Sargam
ஆக 02, 2025 12:52

இந்தியா ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்கக்கூடாது என்று தடுத்துநிறுத்த தெரிந்த இந்த டிரம்புக்கு, தன்னுடைய நாட்டில் இப்படி பொழுதுவிடிந்தால் நடக்கும் துப்பாக்கி சூட்டை நிறுத்த தெரியவில்லையே.


Jack
ஆக 02, 2025 08:33

திராவிடர்கள் கொல்லப்பட்டிருக்க மாட்டார்கள் …இந்நேரம் தலைவர் துடித்து போயிருப்பார்


தியாகு
ஆக 02, 2025 08:29

இதுவே இந்தியாவில் நடந்திருந்தால் முதல் ஆளாய் வந்து நமக்கு புத்திமதி சொல்லுவான் பெரியண்ணன்.


D Natarajan
ஆக 02, 2025 08:07

இது தான் அமெரிக்கா


பேசும் தமிழன்
ஆக 02, 2025 07:50

மர்ம நபருக்கு வலைவீச்சு......மர்ம நபர் யாராக இருக்கும் என்று கண்டிப்பாக நான் கூற மாட்டேன்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை