மேலும் செய்திகள்
வியட்நாமில் புரட்டி போட்ட கனமழை; வெள்ளத்தில் சிக்கி 41 பேர் பரிதாப பலி
45 minutes ago | 1
ஜி20 மாநாட்டை புறக்கணிப்பதாக அமெரிக்கா அறிவிப்பு
3 hour(s) ago | 5
புதுடில்லி: டில்லியில் தற்கொலைப்படை தாக்குதலை நடத்திய உமர் நபி, துருக்கியில் 20 நாட்கள் தங்கியிருந்து பயங்கரவாத அமைப்பினரை சந்தித்து பேசியது விசாரணையில் தெரிய வந்துள்ளது.டில்லி செங்கோட்டை அருகே கடந்த 10ம் தேதி நடத்தப்பட்ட தற்கொலைப்படை தாக்குதலில் 15 பேர் கொல்லப்பட்டனர். 20க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக என்.ஐ.ஏ., எனப்படும் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் விசாரணை நடத்தி வரும் நிலையில், அவ்வப்போது புதுப்புது தகவல்கள் வெளியாகி வருகின்றன.அந்த வகையில், பயங்கரவாதி உமர் நபி குறித்து புது தகவல் கிடைத்துள்ளது. இது குறித்து உளவு அமைப்பு கூறியிருப்பதாவது; கடந்த 2022ம் ஆண்டு உமர் நபி துருக்கி சென்று, அங்குள்ள பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்தவர்களை சந்தித்து பேசியுள்ளான். இந்தப் பயணத்தின் போது உமருடன், முஷாம்மில் ஷாகீல் கனாய் மற்றும் முஷாபர் ராதர் (கைது செய்யப்பட்ட அதீல் அகமது ராதரின் சகோதரர்) ஆகியோரும் சென்றுள்ளனர். இந்த சந்திப்பை பாகிஸ்தானைச் சேர்ந்த பயங்கரவாதி உகாஷா ஏற்பாடு செய்து கொடுத்துள்ளதாக தெரிகிறது. இவர்கள் மூவரும் சுமார் 20 நாட்கள் துருக்கியில் தங்கியுள்ளனர். ஆப்கன் - பாகிஸ்தான் எல்லையில் பதுங்கியிருக்கும் உகாஷாவை சந்திக்க அவர்கள் திட்டமிட்டிருந்தாலும், உகாஷாவின் அறிவுறுத்தலின் பேரில் சிரியா நாட்டவரை சந்தித்துள்ளனர். முஷாபர் ராதர்,யுஏஇ வழியாக ஆப்கன் சென்று அல் கொய்தாவில் இணைந்துள்ளான். உமர் ஆப்கானிஸ்தானில் இருந்து துருக்கி செல்ல திட்டமிட்டிருந்தான். ஆனால், உடனடியாக இந்தியாவுக்கு திரும்பி தாக்குதலை முன்னெடுக்குமாறு உகாஷா உத்தரவிட்டதாக தகவல்கள் கூறுகின்றன. அதன்பிறகே, இந்தியாவுக்கு திரும்பிய உமர், அல் பலாஹ் பல்கலையில் பணியில் சேர்ந்து தாக்குதலுக்கான வேலையை செய்து வந்துள்ளான்.முஷாம்மில், அதீல் மற்றும் உமர் நபி ஆகியே மூவரும் பாகிஸ்தானைச் சேர்ந்த பைசல், ஹசிம் மற்றும் உகாஷா ஆகியோருடன் டெலிகிராம் மூலமாக தொடர்பில் இருந்து வந்துள்ளனர். இவர்களிடம் இருந்த வெடிகுண்டு தயாரிக்கும் வீடியோ மற்றும் உத்தரவுகளைப் பெற்று பயங்கரவாத தாக்குதலுக்கு தங்களை தயார்படுத்தி வந்துள்ளனர். கைது செய்யப்பட்ட 3 டாக்டர்கள் மற்றும் ஷோபியான் மதகுரு முப்தி இர்பான் ஆகியோர், இந்தியா முழுவதும் இதுபோன்ற தாக்குதலை நடத்த திட்டமிட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களுக்கு சர்வதேச பயங்கரவாத நெட்வொர்க்குடன் இருக்கும் தொடர்புகளை அறிய, அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர், இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
45 minutes ago | 1
3 hour(s) ago | 5